இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் (WPI), கடந்த நான்கு மாதங்களில் உச்ச அளவான 2.36% அக்டோபர் மாதத்தில் பதிவாகியுள்ளது என மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்த விலை பணவீக்க குறியீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுப் பொருட்களின் பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் 11.59% அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தின் 9.47% மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் 3.21% அதிகரிப்பை விட அதிகமாகும். இதன் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

உணவுப் பொருள் விலை உயர்வு, நுகர்வோர் பணவீக்க குறியீடு (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தையும் பாதித்துள்ளது. இந்தியாவின் CPI அடிப்படையிலான பணவீக்கம், கடந்த 14 மாதங்களில் உயர்ந்த அளவான 6.21% ஆக அக்டோபர் மாதத்தில் உயர்ந்துள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்களின் பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் 63.04% மற்றும் 13.55% அதிகரித்துள்ளது. தானிய பணவீக்கமும் உயர்ந்துள்ளன, ஆனால் செப்டம்பர் மாதத்தின் 8.1% உயர்வை விட சற்று குறைவான 7.9% ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு மாறாக, உணவுப் பொருட்கள் அல்லாத பொருட்களின் பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் 1.71% ஆக குறைந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தின் 1.64% குறைவை விட சிறிய அளவு அதிகரித்துள்ளது.
மேலும் எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் 5.79% ஆக குறைந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தின் 4.05% குறைவை விட அதிகமாகும். இதேபோல் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் 12.16% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த மாதத்தின் அளவான 13.04% விட சற்று குறைவு.
இதோடு உற்பத்திப் பொருட்களின் பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் 1.5% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த மாதத்தின் 1% உயர்வை விட அதிகமாகும். ஒட்டுமொத்தமாக, உணவுப் பொருள் விலை உயர்வு இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக இருந்துள்ளது.
ரீடைல் பணவீக்கம்: அக்டோபர் மாதத்தில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 6.21% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விடவும் அதிகம், கடந்த மாதம் பதிவான 5.49% அளவை காட்டிலும் அதிகமாகும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயித்துள்ள பணவீக்கத்தின் மேல் எல்லையான 6% அளவீட்டை நீண்ட காலத்திற்கு பின்பு கடந்துள்ளது. இதேபோல் தற்போது டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதால் நாட்டின் பணவீக்கம் நவம்பர் மாதம் இன்னும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகும். தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் நாட்டில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 10.87% உயர்ந்துள்ளது. இது கடந்த மாதம் 9.24% ஆகவும், கடந்த ஆண்டு இதே காலத்தில் 6.61% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலை உற்பத்தி அளவு: இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி குறியீடு (Index of Industrial Production - IIP) செப்டம்பர் மாதத்தில் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் தொழிற்சாலை உற்பத்தி -0.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புள்ளியியல் மற்றும் திட்ட செயல்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் உற்பத்தி துறை 3.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. மின் உற்பத்தி 0.5 சதவீதமும், சுரங்கத் தொழில் 0.2 சதவீதமும் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications