இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் -3.48 சதவீதமாக குறைந்துள்ளது, இது ஏப்ரல் மாதத்தில் -0.92 சதவீதமாக இருந்தது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை புதன்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மே மாதம் இந்தியாவின் மொத்த விலை பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைவதற்கு முக்கிய காரணம் கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், ஜவுளிகள், உணவு அல்லாத பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, இரசாயன மற்றும் இரசாயன பொருட்கள் ஆகியவற்றின் விலை வீழ்ச்சி முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல் உணவு பணவீக்கம் மே மாதத்தில் 1.59 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதன்மைப் பொருட்களுக்கான மே மாத பணவீக்கம் 1.79 சதவீதம் குறைந்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின் பணவீக்கம் மே மாதத்தில் 9.17 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில் மொத்த விலை பணவீக்கத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ள உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் -2.42 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.97 சதவீதமாக குறைந்துள்ளது.
மே மாதம் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 25 மாத சரிவுக்கு வந்துள்ளது. மே மாதம் Retail Inflation 4.25 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் ஜூன் 12 ஆம் தேதி மாலை அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிட்டது.
இதேபோல் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி அளவு ஏப்ரல் மாதத்தில் தடாலடியாக 4.2 சகவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இது மார்ச் மாதம் 1.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிவீக்க இலக்கு 4 முதல் 6 சதவீதத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்பது தான், சில மாதங்களுக்கு முன்பு ரீடைல் பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் இருந்த வேளையில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை சுமார் 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. ரெப்போ விகிதம் தற்போது பலன் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
ஏப்ரல் மாதம் சில்லறை பணவீக்கம் 18 மாத சரிவான 4.70 சதவீதமாக குறைந்தது, மார்ச் மாதத்தில் இது 5.66 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சில்லறை பணவீக்கத்தில் முக்கிய பங்கீட்டை கொண்டுள்ள உணவு பணவீக்கம் 3.84 சதவீதத்தில் 2.91 சதவீதமாக மே மாதத்தில் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications