இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் மும்பை குடியிருப்பு Antilia என அழைக்கப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் மிக பிரம்மாண்டமாக உற்று நோக்கக் கூடிய பல்வேறு வசதிகள் நிறைந்த ஒரு குடியிருப்பு தான் மும்பையின் Antilia குடியிருப்பு.
மும்பை நகரத்தின் ஒரு அடையாளமாகவும் இந்த Antilia குடியிருப்பை அனைவரும் பார்க்கிறார்கள் . மொத்தம் 27 தளங்கள் கொண்ட இந்த குடியிருப்பு ஜிம், ஸ்பா உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது. பாரம்பரியத்தையும் நவீன கட்டமைப்புகளும் நிறைந்ததாக இந்த Antilia குடியிருப்பு இருக்கிறது.

இந்த வீட்டினை பராமரிப்பதற்காகவே நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். சமையல் , வீட்டு வேலை, தோட்ட பராமரிப்பு, தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் என ஏராளமானவர்கள் அம்பானி வீட்டில் வேலை செய்கிறார்கள். இந்த குடியிருப்பின் பல்வேறு தளங்களிலும் சமையல் அறைகள் உள்ளன. இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
இங்கே தயார் செய்யப்படும் உணவுகள் ருசியாகவும் தரமாகவும் தயாரிக்க கூடிய வகையில் பெரும் எண்ணிக்கையிலான சமையல் கலைஞர்கள் இங்கே பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் . எந்த ஒரு கேட்டரிங் சர்வீசிடம் இடமும் ஒப்பந்தம் எதுவும் தரப்படவில்லை. அம்பானி குடும்பம் மட்டுமில்லாமல் இங்கே வேலை செய்யும் அனைவருக்கும் வீட்டில் தான் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் புதிதாக உணவு தயாரித்து தான் பரிமாரப்படுகிறது. முகேஷ் அம்பானி, நீதா அம்பானிக்கு உணவு தயாரிக்க தனி சமையல் அறை, சமையல் கலைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களில் முகேஷ் அம்பானிக்கு குஜராத் உணவுகள் தான் அதிகம் பிடிக்குமாம். நீதா அம்பானி ஆரோக்கியமான உணவுகளுக்கு தான் முன்னுரிமை தருவாராம்.
அம்பானி வீட்டு சமையல் அறையில் அசைவ உணவுக்கு அனுமதி இல்லை. சைவ உணவு மட்டுமே தயாரிக்கப்படுகிறது. விருந்தினர்களுக்கு உணவு சமைக்க தனி அறை, நிகழ்ச்சிகளுக்கு உணவு சமைக்க தனி அறை, வேலையாட்களுக்கு உணவு சமைக்க தனி அறை என இருக்கிறதாம்.
இந்திய உணவு தொடங்கி சர்வதேச உணவுகள் வரை ருசியாக தயாரிக்கும் கலைஞர்கள் ஷிப்ட் முறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அப்படி அம்பானி வீட்டு சமையல் அறையில் ஒரு நாளைக்கு 4000 ரொட்டிகள் தயார் செய்யப்படுவதாக டிஎன்ஏ செய்தி கூறுகிறது. அதுவும் தினமும் 4000 ரொட்டிகள் தயார் செய்யப்படுகின்றன.
பெரும்பாலும் வட இந்தியர்கள் ரொட்டியை தான் அதிகமாக உண்பார்கள். அந்த வகையில் அம்பானி குடும்பத்தினருக்கு மட்டுமல்ல வீட்டில் வேலை செய்யக்கூடிய நபர்கள் விருந்தினர்கள் என அனைவருக்கும் தினமும் இரண்டு வேலை சமையல் செய்கிறார்கள். அதுமட்டுமல்ல உணவு கூட தினமும் சமைத்து தான் உண்கிறார்கள், பழைய உணவு மீதமுள்ள உணவு என்ற பேச்சுக்கே இடமில்லை, ஏனெனில் உணவு மீதமாகி விட்டால் உடனே அதனை அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பி விடுவார்க்ளாம்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications