இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களின் கனவு வெளிநாட்டு வாழ்க்கை, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, துபாயில் செட்டிலாக வேண்டும், இல்லையெனில் குறைந்தது 10 ஆண்டுகளாவது பணியாற்றி பெரும் தொகையை சம்பாதித்துவிட வேண்டும் என்பது தான் கனவாகவே உள்ளது. இப்படி இந்தியாவில் இருக்கும் உறவுகளை விட்டு வெளிநாட்டிற்கு சென்ற பலர் தற்போது தாயகம் திரும்புவது அதிகரித்துள்ளது.
இந்தியாவுக்கு திரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) எண்ணிக்கை கடந்த 2 வருடத்தில் உயர்ந்து வருகிறது, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டில் பணியாற்றிய பலர் தற்போது தாயகம் திரும்பி வருகின்றனர்.

2022-ல் இருந்து 80 லட்சம் NRI-கள் இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர், இப்படி தாயகம் திரும்ப முடிவு செய்யப்பட்ட மக்களிடம் செய்த ஆய்வில் 4 முக்கிய காரணத்திற்காக தாயகம் திரும்பியதாக தெரிவித்துள்ளனர். இதேபோல் இந்தியாவுக்கு திரும்பும் NRI-கள் சராசரியாக வெளிநாட்டில் வாழும் கால அளவு என்பது 7.5 வருடமாக உள்ளது.
குடும்பம் முக்கியம் பாஸ்:
குடும்பம், இந்தியர்களுக்கு மிக முக்கியமானது. தாயகம் திரும்பிய 75% NRI-கள், குடும்பத்துடன் இணைந்திடவே இந்தியாவுக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர். தீபாவளி, ஹோலி, திருமணங்கள் போன்ற முக்கியமான குடும்ப நிகழ்வுகள், வெளிநாடுகளில் தனிமையாக உணரவதை இந்தியாவில் குடும்பத்துடன் இருப்பது போதும் என மனநிலையில் இந்தியாவுக்கு வர துவங்கியுள்ளனர்.
குழந்தை பராமரிப்பு:
வெளிநாடுகளில், வேகமாக பணி சூழல், வீட்டு வேலைகள், மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவை பெரும் சவாலாக உள்ளன. ஆனால், இந்தியாவில், விரிவான குடும்ப அமைப்பு மூலம் கிடைக்கும் ஆதாரவு மற்றும் மலிவு விலையில் போதுமான உதவிகள் கிடைக்கும் காரணத்திற்காகவும் பலர் தயாகுறைக்கின்றன. 2022-ல் திரும்பிய 72% NRI குடும்பங்கள் குழந்தை பராமரிப்பை முக்கிய காரணமாக கூறியுள்ளனர்.
இந்தியாவின் வளரும் பொருளாதாரம்:
உலக வங்கி அறிக்கையின்படி, 2023-ல் இந்திய பொருளாதாரம் 7.2% வளர்ச்சி அடைந்து, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. தொழில்நுட்பம், பின்டெக், மற்றும் மருத்துவத் துறைகளில் அதிக சம்பளத்துடன் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இந்தியாவிலேயே அதிகரித்துள்ளன.
2023-ல் திரும்பிய 35% NRI-கள் இந்தியாவிலேயே மேம்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை கிடைக்கும் காரணமாக இந்தியா திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி, இந்தியாவில் புதிய வர்த்தகத்தை துவங்க ஏதுவாகவும், சிறப்பாக சூழ்லை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் பலர் இந்தியாவுக்கு திரும்புகின்றனர்.

ஆன்மீக மற்றும் கலாச்சார இணைப்பு:
வெளிநாடுகளில் வாழும் NRI-கள், தங்கள் கலாச்சார தொடர்பை இழப்பதாக உணர்கின்றனர். இத்தகைய எண்ணம் 50 வயதை கடந்தவர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா கணக்கெடுப்பின்படி, 60% NRI-கள் வெளிநாடுகளில் கலாச்சார தனிமையை உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
வயதான பெற்றோர்:
இதேபோல் வெளிநாட்டில் இருக்கும் பலர், இந்தியாலில் இருக்கும் அவர்களின் வயதான பெற்றோர்களை பார்த்துக்கொள்ள தாயகம் திரும்புகின்றனர். இதோடு இந்தியாவில் இருக்கும் அவர்களது சொத்துக்கள், முதலீடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்துடனும் இந்தியாவுக்கு பலர் திரும்புகின்றனர்.
முக்கியமான முடிவு:
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் தயாகம் திரும்புவது என்பது ஒரு உணர்ச்சிபூர்வமான முடிவு. இதோடு பல லட்சம், கோடிகளில் வாங்கும் சம்பளத்தை விடுத்து இந்தியாவுக்கு வர வேண்டும் என்பது நிதியியல் ரீதியாகவும் இது மிகவும் முக்கியமான முடிவாகும்.
இதேபோல் தற்போது வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகம் திரும்புவார்களா என்று கேட்டால் 50 சதவீத மக்களால் முடிவு எடுக்க முடியாது. காரணம் வெளிநாட்டில் இருக்கும் வாய்ப்புகளும், வாழ்க்கை தரமும் இந்தியாவிட பல மடங்கு சிறப்பானது உயர்ந்தது. இதனால் இந்த 7.5 வருட வெளிநாட்டு வாழ்க்கைக்கு பின்பு அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தான் தாயகம் திரும்புவதற்கான முடிவை எடுக்க முக்கிய அளவுகோளாக உள்ளது.

மத்திய வெளிவிவகார அமைச்சகம் தரவுகள்
இறுதியாக வெளிநாட்டில் இருக்கும் NRI-களின் வயதும், வாய்ப்புகள் தான் தாயகம் திரும்ப முடிவு எடுக்க முக்கிய காரணமாக உள்ளது. பல வெற்றிப்பெற்ற இந்தியர்கள் மொத்தமாக வெளிநாட்டில் செட்டில் ஆகியும் வருகின்றனர். மறுமுனையில் இந்தியாவில் 5ல் ஒரு HNI அதாவது அதிக சொத்துமதிப்புடைய தனிநபர்கள் வெளிநாட்டில் செட்டிலாகி வருகின்றனர்.
தொடர் கதை:
2022-ல் 80 லட்சம் NRI-கள் திரும்பியது, இந்த போக்கு வளர்ந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. இவை அனைத்தையும் தாண்டி இதர சில காரணங்களும் உள்ளது, ஆதாவது விசா விதிமுறையில் மாற்றம் அல்லது கடுமையான கட்டுப்பாடு, குடியுரிமை பெற முடியாத நிலை, விசா இல்லாமல் வெளிநாட்டில் வாழ்க்கையை தொடர முடியாத நிலை, விலைவாசி உயர்வுக்கு போதுமான சம்பளம் கிடைக்காதது, குழந்தைகளுக்கு சரியான உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காத நிலையும் NRI-கள் இந்தியாவுக்கு திரும்ப முக்கியமான காரணமாக உள்ளது.
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications