பொதுவாக நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்காவிற்கு சென்று செட்டில் ஆகின்றார்கள் என்றால் நிச்சயமாக அங்கு நல்ல சம்பளம் கிடைப்பதுதான் முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் அமெரிக்காவில் வேலை கிடைத்த உடன் அதிக சம்பளம் என உடனடியாக அங்கே இடம் மாறும் முடிவை எடுக்க கூடாது. அதற்கு முன்பு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.
சுபோம் சக்கரவர்த்தி என்பவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் இது தொடர்பாக விரிவான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பல ஆயிரம் டாலர்கள் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக பலரும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் அது உண்மையில் அந்த முடிவு சரியானதுதானா என்பதை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பல விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார் .

அதில் அடுத்த முறை உங்களுடைய நண்பரோ அல்லது உறவினரோ அமெரிக்காவில் செட்டில் ஆகிறேன் எனக்கு ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் ஊதியம் வருகிறது என கூறினால் அவர்களிடம் சொல்லுங்கள் இந்தியாவில் 23 லட்சம் இருந்தாலே அதே மாதிரியான ஒரு வாழ்க்கையை இங்கே வாழ்ந்து விட முடியும் என்று என தெரிவித்திருக்கிறார். இதனை தான் power purchase parity என அழைக்கிறார்கள். அதாவது அமெரிக்காவில் ஒரு பொருளின் விலை என்ன , இந்தியாவில் அதே பொருளின் விலை என்ன என்பதை ஒப்பிட்டு நாணயத்தின் வாங்கும் சக்தியை கணக்கிடுவதையே power purchase parity என அழைக்கிறார்கள்.
அமெரிக்காவில் 80 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபர் வாழக்கூடிய வாழ்க்கையை இந்தியாவில் நாம் 23 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வாழ்ந்துவிட முடியும் என அவர் தெரிவித்து இருக்கிறார். எனவே அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக அமெரிக்காவுக்கு சென்று சம்பளம் நிறைய வாங்கிவிட்டு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழலில் தான் பலரும் இருக்கின்றனர் என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார் .
உதாரணமாக இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நாம் வாங்கக்கூடிய ஒன்றை அதே தொகைக்கு வேறு இடங்களில் கிடைக்காது என்பதை தான் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். சக்கரவர்த்தி தன்னுடைய பதிவில் நிறைய பேர் இந்த இது குறித்து தெரிந்து கொள்ளாமலேயே வெளிநாட்டில் வேலை கிடைத்து விட்டது என சென்று விடுகிறார்கள் என கூறியுள்ளார்.
உதாரணமாக இந்தியாவில் நீங்கள் 300 ரூபாய் செலவு செய்து ஒரு வேளை உணவு உண்கிறீர்கள் என்றால் அதே உணவுக்கு அமெரிக்காவில் 1700 ரூபாய் செலவாகும் ,இந்தியாவில் 700 ரூபாய்க்கு நாம் இன்டர்நெட் இணைப்பு பெறுகிறோம் அமெரிக்காவில் இந்திய ரூபாயில் பார்க்கும்போது 6 ,000 ரூபாய் செலவாகும் அதேபோல வீட்டு வாடகை இங்கே நாம் 50000 ரூபாய் வழங்குகிறோம் என்றால் அதே அளவுக்கான வீட்டினை அமெரிக்காவில் வாடகை எடுக்க நாம் 1.6 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறுகிறார்.
அமெரிக்காவில் வேலை என்ற உடனே எதையும் சிந்திக்காமல் அங்கே இடம் மாறுவதை விடுத்து power purchase parity உடன் உங்கள் சம்பளத்தை ஒப்பிட்டு அதன்பின் முடிவெடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications