95% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் க்ளோஸ்.. ஏன் தெரியுமா..? Tyrocare வேலுமணி புட்டு புட்டு வைக்கும் 5 காரணம்!

இந்தியா முதல் அமெரிக்கா வரையில் தற்போது நடக்கும் ஒவ்வொரு தொழில் புரட்சியும், வர்த்தக புரட்சியும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வாயிலாகவே நடக்கிறது என்றால் யாராலும் மறுக்க முடியாது. பெரிய நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதிலேயே கவனம் செலுத்தி வரும் நிலையில் புதிய தொழில்நுட்பத்தையோ அல்லது வர்த்தகத்தையோ உருவாக்குவதில் கவனம் செலுத்துவது இல்லை.

இந்த நிலையில் 100க்கு 95 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கிய 5 வருடத்தில் இழுத்து மூடப்படுவது தான் நிஜம், ஆனால் ஒவ்வொரு நிறுவனத்தின் நிறுவனரும் உண்மையான காரணத்தை சொல்வது இல்லை என கோயம்புத்தூர்காரரும், தைரோகேர் நிறுவனர் டாக்டர் ஏ.வேலுமணி தனது லிங்க்டுஇன் பதவில் தெரிவித்துள்ளார்.

95% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் க்ளோஸ்.. ஏன் தெரியுமா..? Tyrocare வேலுமணி புட்டு புட்டு வைக்கும் 5 காரணம்!

பிரபல பாட்காஸ்டரான ரன்வீன் சமீபத்தில் ஒரு பதிவை செய்திருந்தார், அதில் 71 சதவீத ஸ்டார்ட்அப் நிறுனங்கள் ஒரு தவறான முடிவால் நிறுவனத்தை மூட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என தெரிவித்தார்.

ஆனால் உண்மையான காரணம் 2, இதில் முதலாவது 42 சதவீத நிறுவனங்கள் உருவாக்கிய தயாரிப்பு, சேவை ஆகியவற்றை வாங்குவதற்கு யாருக்கும் விருப்பம் இல்லை, 29 சதவீத நிறுவனங்கள் போதுமான பணம் இல்லாமல் மூடப்படுகின்றன. அதாவது 10ல் 7 நிறுவனங்கள் இவ்விரு காரணத்தாலேயே மூடப்படுகின்றன என CB இன்சைட்ஸ் தரவுகள் அடிப்படையாக வைத்து பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்த வேலுமணி அவர்கள், 5 முக்கிய காரணத்தால் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்கிய 5 வருடத்தில் 95 சதவீதம் மூடப்படுகின்றன என கூடுதலாக பின்பாயின்ட் செய்து விலக்கினார்.

1. ஒரு ஸ்டார்ட்அப் நல்ல ப்ராடெக்ட்-ஐ உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதை வாங்க விரும்பும் அளவுக்கு போதுமான வாடிக்கையாளர்கள் சந்தையில் இருக்கமாட்டார்கள். இப்படியிருக்கும் போது பிஸ்னஸ் வளர்ச்சிக்கு வாய்ப்பு மிக குறைவு. இதை ப்ராடெக்ட் பிட் தோல்வி என அழைக்கப்படுகிறது. இதையும் மீறி போலியான மார்கெட்டிங் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்தால் செலவுகள் அதிகமாகி, வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியாமல் நிறுவனம் சிக்கிக்கொள்ளும்.

2. எந்தொரு ஸ்டார்ட்அப் நிறுவமும் அவர்களுடைய தயாரிப்பை சிறப்பாக இருப்பதாக தான் நினைப்பார்கள், இதனால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை தான் இருக்கும். விலை அதிகமாக இகுக்கும் நுகர்வோர் எண்ணிக்கை குறையும்.

3. நிறுவனர் மூலம் வரும் பிரச்சனை, ஒரு ஸ்டார்ட்அப் நிறுனத்தின் துவக்கத்தில் அதன் நிறுவனரின் கவனம் மிக முக்கியமானது. ஒரே நேரத்தில் பல பிஸ்னஸ் ஐடியா, பல சைடு ப்ராஜெக்ட்ஸ், தனிப்பட்ட காரணத்தால் ஒரு Founder-ன் கவனம் சிதறலாம். இது ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு தேவையான momentum கிடைக்காமல் போகலாம்.

4. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனரிடம் பொறுமையும், விடா முயற்சியும் முக்கியம். ஆரம்பக்கத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போகலாம், வருமானம் குறையலாம், ஆசை ஆசையாக தயாரிக்கப்பட்ட ப்ராடெக்ட்-ஐ சந்தையின் தேவைக்கு ஏற்ப பல முறை மாற்றலாம். இவை அனைத்திற்கும் பொறுமை மிகவும் அவசியம், அதேபோல் விடா முயற்சியும் அவசியம். இது ஒரு Founder-யிடம் இல்லையெனில் நிறுவனம் திவால் தான்.

குறிப்பாக நிறுவனத்தில் போதுமான பணம் இல்லாத போது அதை எப்படி சமாளிக்க தெரியாமல் நிற்கும் நபர்களுக்கு இது பெரும் சவால், குறிப்பாக பிறக்கும் போதே பணக்காரராக இருந்தால் நிறுவனத்தை போராடி நடத்த வேண்டிய எண்ணம், ஊக்கம் இருக்காது என தெரிவித்தார்.

5. சரியான நபரை தேர்வு செய்யாதது வாயிலாகவும் ஸ்டார்ட்அப் தோல்வி அடையலாம்.

ஒரு ஸ்டார்ட்அப் தோல்வி அடைந்தால் அதற்கு பெரும்பாலான காரணம் இந்த 5ல் ஒன்றாக தான் இருக்கும், ஆனால் பெரும்பாலான நிறுவனர்கள், Funding மட்டுமே குறையாக கூறுகின்றனர். இன்றளவில் 50 சதவீத வெற்றிகரமான வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் 50 சதவீத பங்குகளை விற்காமல் வளர்ந்தவை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+