புனேவைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் வேறு வேலை கிடைக்காத போதிலும், தான் பார்த்துக் கொண்டிருந்த இன்ஃபோசிஸ் வேலையை ரிசைன் செய்துள்ளார். அதோடு அவர் ஏன் ரிசைன் செய்தார் என்ற காரணங்களையும் தனது லிங்க்டின் பதிவில் போஸ்ட் செய்துள்ளார்.
பூபேந்திர விஸ்வகர்மா என்ற அந்த பொறியாளர் தனது குடும்பத்திற்கான ஒரே வருமான ஆதாரமாக இருந்து வந்துள்ளார். அப்படி இருந்தும் தனது வேலையை ரிசைன் செய்ய தூண்டிய 6 விஷயங்கள் குறித்து தனது பதிவில் பட்டியலிட்டுள்ளார்.

பூபேந்திரா தன்னுடைய பதிவில், "இன்போசிஸில் நான் பணியாற்றிய காலத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டேன், அவை அனைத்தும் வேறு ஒரு வேலை இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க என்னை கட்டாயப்படுத்தியது. நான் அங்கு எதிர்கொண்ட சவால்களை பற்றி வெளிப்படையாக பேச விரும்புகிறேன்.
ஏனெனில் அவை கார்ப்பரேட் பணியிடங்களில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன." என தனது போஸ்ட்டை தொடங்கியுள்ளார். அதன் பிறகு அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்ற விவரங்களையும் பேரகிராப்-ஆக பதிவிட்டிருந்தார்.
சம்பள வளர்ச்சி இல்லை: சிஸ்டம் இன்ஜினியரிலிருந்து சீனியர் சிஸ்டம் இன்ஜினியராக பதவி உயர்வு கிடைத்தாலும் சம்பள உயர்வு இல்லாமல் இருந்துள்ளது. 3 வருட கடின உழைப்பு மற்றும் நிலையான செயல் திறனை வழங்கிய போதிலும் பூபேந்திராவுக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
நியாயமற்ற பனிச்சுமை: அவருடைய டீம்-இல் இருந்த உறுப்பினர்கள் 50 பேரில் இருந்து 30 பேராக குறைக்கப்பட்டுள்ளனர். அப்போது கூடுதல் பணிசுமை மீதமிருந்த ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதோடு புதிய பணியாளர்களையும் பணியமர்த்தவில்லை.
தொழில் வளர்ச்சி இல்லை: நஷ்டம் தரும் ஒரு பணியில் அசைன் செய்யப்பட்டதால் தனக்கு எந்தவித சம்பள உயர்வும் பூபேந்திராவுக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் தொழில் ரீதியாக மந்த நிலையை மட்டுமே பூபேந்திரா உணர்ந்து வந்துள்ளார்.
வாடிக்கையாளர் சூழல்: உடனடியாக பதில்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகள் இன்னும் அழுத்தமான சூழலை பூபேந்திராவுக்கு உருவாக்கியுள்ளது. சிறு விஷயங்களுக்கும் தொடர்ச்சியான எஸ்கேலேஷன்கள் இருந்ததால் டாக்ஸிக் ஒர்க் கல்ச்சர்-ஆக இருந்ததாக தனது நான்காவது காரணத்தை பூபேந்திரா கூறியிருந்தார்.
அங்கீகாரம் வழங்கப்படவில்லை: உடன் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சீனியர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெற்ற போதிலும் அவை எதுவும் பதவி உயர்வுகள் சம்பள உயர்வுகள் அல்லது தொழில் முன்னேற்றத்திற்கு உதவவில்லை. தனது கடுமையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதாகவும் பூபேந்திரா உணர்ந்துள்ளார்.
வெளிநாட்டு பணி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய சார்பு: வெளிநாட்டு பணி வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் அல்லாமல், குறிப்பிட்ட மொழிகள் பேசும் ஊழியர்களை ஆதரித்து, அவரைப் போன்ற இந்தி பேசும் ஊழியர்களை புறக்கணித்ததாக பூபேந்திரா கூறினார்.
இந்தப் பிரச்சினைகளை எல்லாம் கூறிய பூபேந்திரா, "எனக்கு மட்டுமல்ல.. இது போன்ற பிரச்சனைகள் எண்ணற்ற ஊழியர்களுக்கும் உள்ளன. இந்த அடிப்படைப் பிரச்சனைகளை புறக்கணித்த ஒரு நிறுவனத்திற்காக எனது சுயமரியாதை மற்றும் மன ஆரோக்கியத்தை விட்டு என்னால் இருக்க முடியாது என்பதனால் தான் வெளியேற முடிவு செய்தேன்", என்றும் எழுதி இருந்தார்.
அதோடு பூபேந்திரா கார்ப்பரேட் மேனேஜர்கள் எதார்த்தங்களை மறைப்பதை நிறுத்திவிட்டு இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கத் தொடங்க வேண்டும். ஊழியர்கள் ஆசைகள் கொண்ட மனிதர்கள் தான். இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை இழப்பது மட்டுமல்லாமல் தங்கள் நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடும் என்று கூறி தனது பதிவை நிறைவு செய்திருந்தார்.
இவருடைய பதிவுக்கு பல்வேறு கமெண்ட்ஸ்கள் வர தொடங்கியது. சீனியர் சிஸ்டம் இன்ஜினியராக மாறுவது ஒரு பிரமோஷனுக்காக மட்டுமே. ஒரு சிஸ்டம் இன்ஜினியராக சேரும் எவரும் ஒரு வருடம் கழித்து சீனியர் சிஸ்டம் இன்ஜினியராக இருப்பார்கள் என்று ஒருவர் பதிவிட்டு இருந்தார்.
மற்றொரு நபர் நான் உங்களுடைய கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன் சிஸ்டம் இன்ஜினியரிலிருந்து சீனியர் சிஸ்டம் இன்ஜினியர்-ஆன பின்னர் அசோசியேட் கன்சல்டன்ட் வரை 7 சதவீத உயர்வுடன் வைத்திருப்பார்கள். ஒருவேளை நாம் மேனேஜரிடம் சென்று சம்பளத்தை பற்றி பேசினால் அவர் HR-இடம் கேளுங்கள் என்று சொல்வார். HR-இடம் பேசினால் அவர் மேனேஜரிடம் கேளுங்கள் என்று சொல்வார் என கருத்து தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications