இசைப்புயலின் AI புரட்சி: திடீரென ChatGpt, Perplexity நிறுவன CEOக்களை சந்தித்த ஏ.ஆர்.ரகுமான்!!

இந்திய திரை உலகின் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர், ஆஸ்கர் விருது வென்று நாட்டிற்கே பெருமை தேடித் தந்தவர் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய இசை துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில் முதன்மையானவர் . அந்த வகையில் அவர் திடீரென சாட் ஜிபிடி உரிமையாளரான சாம் ஆல்ட்மேனை சந்தித்து பேசி இருப்பது திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பம்: தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய ஒரு விஷயமாக மாறிவிட்டது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதேனும் ஒரு வழியில் நாம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். இத்தகைய ஏஐ தொழில்நுட்பங்கள் நமக்கு சாதகமா பாதகமா என்ற விவாதம் ஒரு புறம் நடந்து வந்தாலும் ஏஐ தொழில்நுட்பங்கள் நாம் பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

இசைப்புயலின் AI புரட்சி: திடீரென ChatGpt, Perplexity நிறுவன CEOக்களை சந்தித்த ஏ.ஆர்.ரகுமான்!!

சாம் ஆல்ட்மேனுடன் சந்திப்பு: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேனை சந்தித்து பேசியுள்ளார். அதே போல பெர்பிளெக்சிட்டி ஏஐ நிறுவன தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸையும் சந்தித்து பேசியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ஏஐ சம்பந்தப்பட்ட ஒரு இசை பிராஜெக்டுக்காகவே இவரை சந்தித்திருக்கிறார்.

சீக்ரட் மவுண்டெயின் திட்டம்: சீக்ரட் மவுண்டெயின் (Secret Mountain) என அந்த ப்ராஜெக்டிற்கு பெயரிடப்பட்டிருக்கிறது . இந்த சீக்ரெட் மவுண்டெயின் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது, இதனை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பது குறித்து விவாதிப்பதற்காக ஏ.ஆர். ரகுமான் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேனை சந்தித்து பேசி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலேயே வெளியிட்டு இருக்கிறார் .

எதற்காக சந்திப்பு?: அதில் சாம் ஆல்ட்மேனை அவரது அலுவலகத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டிருக்கும் ஏ ஆர் ரகுமான், சீக்ரெட் மவுண்டெயின் திட்டம் குறித்து நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்திருக்கிறார். சீக்ரெட் மவுண்டெயின் என்பது ஒரு உலகளாவிய மெய்நிகர் இசைக்குழு என அவர் கூறியிருக்கிறார். பாரம்பரியமாக இருக்கும் சவால்களை எதிர்கொண்டு இந்தியாவை மனங்களை முன்னோக்கி வழிநடத்த ஏஐ கருவிகளை பயன்படுத்துவது குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தினோம் என அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு அறிமுகம்: கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று ஏ ஆர் ரகுமான் சீக்ரெட் மவுண்டெயின் எனப்படும் தன்னுடைய ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். இது தொடர்பான ஒரு அறிமுக வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். அதில் ஒரு பெண் பேசுவதைப் போல அந்த வீடியோ இடம் பெற்றிருக்கும், " நான் லூனா நான் ஒரு கதை சொல்ல போகிறேன் உங்களை போலவே நானும் திருப்தி இல்லாமல் தொடர்ச்சியாக ஸ்கிராலிங் செய்து கொண்டிருந்தேன் " என கூறுகிறார்.

சீக்ரெட் மவுண்டெயின் என்றால் என்ன: இதனை அடுத்து சீக்ரெட் மவுண்டெயின் எனப்படும் ஒரு மேஜிக்கல் உலகத்திற்கு அவர் செல்வது போலவும் ,அங்கே நிறைய இசை சார்ந்த கதாபாத்திரங்களை அவர் பார்ப்பது போலவும் அவர்கள் பல்வேறு கலாச்சார பின்னணியிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்கென தனித்தனியே இசைபாணி இருப்பதையும் கண்டு வியப்பதை போன்று அந்த வீடியோ இருந்தது.

பெர்பிளெக்சிட்டி அரவிந்த் ஸ்ரீனிவாஸுடன் சந்திப்பு: ஏ.ஆர்.ரகுமான் இந்த திட்டம் தொடர்பாக பெர்பிளெக்சிட்டி தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸையும் சந்தித்துள்ளார். இதனை அரவிந்த் ஸ்ரீனிவாஸையும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு சீக்ரென் மவுண்டெயின் திட்டம் குறித்து நாங்க ஆலோசனை நடத்தினோம் என கூறியுள்ளார். மொத்தத்தில் ரகுமான் ஏஐ மூலம் இசை துறையில் மேலும் ஒரு புரட்சிக்கு தயாராகிறார் என்பது தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+