மும்பை: பாலிவுட் திரை நட்சத்திரங்கள் பலரும் நடிப்பு ,திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றை தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆடை , ஆபரணங்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், அழகுசாதன பொருட்கள் என பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களுக்கு சொந்தமாகவே நிறுவனங்களை நடத்துகின்றனர். சிலர் இந்த துறைகளை சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர்.

அந்த வகையில் புகழ்பெற்ற நடிகரும் நடிகை தீபிகா படுகோனோவின் கணவருமான ரன்வீர் சிங் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்.
Elite Mindset என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது உணவுகளை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யக்கூடிய ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் கிஷோர் பியானி பெருமளவில் முதலீடு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை ரன்வீர் சிங் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் காலங்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு தேவை அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பாக ப்ரோடீன் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தான் Elite Mindset என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சூப்பர் யூ என்ற பெயரின் புரோட்டின் பார்கள் மற்றும் பிஸ்கட்டுகள், புரோட்டின் பவுடர்கள், காலை உணவுக்கு தேவையான தானிய வகைகள் உள்ளிட்டவற்றை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய இருக்கிறது.
இந்த நிறுவனத்தில் பல கோடிகளை ரன்வீர் சிங் முதலீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டினை உணவாக எடுத்துக் கொள்வதை மக்கள் தினந்தோறும் தங்கள் வாடிக்கையாக கொள்ள வேண்டும், மேலும் மக்கள் எளிதாக கொடுத்து வாங்கக்கூடிய விலையில் அது இருக்க வேண்டும் என்று என்பதே தன்னுடைய நோக்கம் என ரன்வீர் சிங்தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரன்வீர் சிங் சுகர் காஸ்மெடிக்ஸ் என்ற அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதே போல ப்ளூடூத் ஹெட்செட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு பெயர் போன போட் நிறுவனத்திலும், எப்பி கேமியா என்ற யோகர்ட் தயாரிப்பு நிறுவனத்திலும் கணிசமான தொகையை முதலீடு செய்து இருக்கிறார்.
தற்போது சத்தான திண்பண்டங்களுக்கு இந்தியாவில் அதிக டிமாண்ட் இருக்கிறது . இதனை ஸ்மார்ட் ஸ்னாகிங் என அழைக்கிறார்கள். பாரம்பரியமான திண்பண்டங்களுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஆண்டும் இதற்கான தேவை 1.2 மடங்கு அதிகரிக்கிறதாம்.


Click it and Unblock the Notifications