அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி இதுவரை 14 திவாலான நிறுவனங்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதானி ஏன் இப்படி திவாலான நிறுவனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
அதானி குழுமம் இதுவரை 50,000 கோடி ரூபாயை செலவு செய்து மொத்தம் 14 திவாலான நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளது. இவ்வளவு பெரிய ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஏன் திவாலான நிறுவனங்களை வாங்குகிறது இதற்காக ஏன் இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பின்னால் ஒரு தந்திரம் இருக்கிறது.

இந்த திவாலான நிறுவனங்கள் அனைத்துமே Insolvency and Bankruptcy Code எனப்படும் ஐபிசி நடைமுறையின் கீழ் தான் வாங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இப்படி ஒரு நடைமுறையை கொண்டு வந்தது. ஐபிசி நடைமுறை திவாலான நிறுவனங்களில் நிலவும் கடன் பிரச்னைகளை சரி செய்வதற்கான ஒரு சட்ட ரீதியான நடைமுறையை வழங்குகிறது.
இந்த ஐபிசி விதியின் படி ஒரு நிறுவனம் தன்னுடைய கடன்களை செலுத்த முடியாமல் தவிக்கிறது, இதன் மூலம் அந்த நிறுவனம் ஒரு செயல்படாத சொத்தாக அதாவது NON PERFORMING ASSETஆக மாறுகிறது. எனவே கடன் வழங்குநர்கள் இதனை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கொண்டு செல்வார்கள்.
இது போன்ற திவால் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்ற அமைப்பு தான் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஆகும். இந்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் 180 நாட்களுக்குள் இந்த கடன் நிலுவைப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இந்த காலகட்டத்தில் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் இவ்வாறு திவால் நிலையில் இருக்கும் நிறுவனங்களை வாங்குவதற்கு முன் வரக்கூடும். அப்போது தள்ளுபடி விலையில் இத்தகைய நிறுவனங்களை அவர்களால் வாங்க முடியும். இந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 60 - 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் அதனை வாங்கலாம்.
இவ்வாறு நிறுவனத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை கடன் வழங்குநர்கள் பகிர்ந்து கொள்வார்கள். முழுமையான தொகை இல்லை என்றால் கூட ஒரு கணிசமான தொகை கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு கிடைக்கும். எனவே தான் பல்வேறு பெரிய நிறுவனங்களும் குறிப்பாக ரொக்கமாக நிறைய பணத்தை கையிருப்பாக வைத்திருக்கும் பெரிய நிறுவனங்கள் இதுபோல ஐபிசி நடைமுறை வாயிலாக திவாலான நிறுவனங்களை வாங்குகின்றன.
குறிப்பாக அதானி குழுமம் இப்படி ஒரு முறையை .அண்மைக்காலமாகவே பின்பற்றி வருகிறது. இதன் மூலம் பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்களை தள்ளுபடி விலையில் அதானி குழுமம் வாங்குகிறது. இதன் பின்னர் அந்த தொழிலை வலுப்படுத்தி அதனை வளர செய்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்த ஒரு நிறுவனத்தை அடித்தளத்தில் இருந்து முதலீடு செய்து உருவாக்குவதை விட ஏற்கனவே உருவான ஒரு நிறுவனத்தை வாங்கி வலுப்படுத்துவது என்பது இவர்களுக்கு லாபமானதாக பார்க்கப்படுகிறது. இப்படி தான் அதானி குழுமம் Lanco and Essar Power, Aditya Estates and TEN BKC, Raigarh Energy Generation Limited உள்ளிட்ட நிறுவனங்களை கையகப்படுத்தியது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications