சென்னை: இன்றைய வளர்ந்து வரும் நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நம்மை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. பல நிறுவனங்களும் வேலைக்கு பணியமர்த்தும் செயல்முறைகளைச் செய்வதற்கு நெறிப்படுத்தப்பட்ட AI கருவிகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இது HR கண்களுக்கு, உங்கள் விண்ணப்பம் படுவதற்கு முன்பே உங்களுடைய பயோடேட்டா நிராகரிக்கப்படும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எக்கனாமிக் டைம்ஸ் தரவுகளின் படி, இந்த AI கருவிகள் ரெஸ்யூம் ஸ்கிரீனிங் முதல் திறன் மதிப்பீடு வரை அனைத்தையும் செய்வதற்கு உதவுகின்றன. சில சந்தர்ப்பங்களில் மனித ஈடுபாடு நேர்காணலுக்கு மட்டுமே தேவைப்படுகிறது. மற்றவற்றில் Gen AI போன்ற AI டூல்கள் நேர்காணல்கள் நடத்துவதற்கும் மேலாளர்களுக்கு உதவுகின்றன.

டேட்டா பிரைவசி, ஊழியர்களுக்கான தனிப்பட்ட திறன் போன்ற தகவல்களை ஆராய்ந்து AI முடிவு எடுக்காதது பற்றிய கவலைகள் இருந்தாலும், AI திறமையாகவும் வேகமாகவும் அனைத்து செயல்முறைகளையும் செய்கிறது என்று HR நிர்வாகிகள் கருதுகின்றனர்.
ஜென்பேக்ட் (Genpact), ஒரு தொழில்முறை சேவை நிறுவனமானது, GenAI-ஆல் இயங்கும் IMatch என்ற AI டூலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த AI ரெஸ்யூம் விவரங்களை பற்றி தெரிந்து, அந்த வேலைக்கு குறிப்பிட்ட நபர் பொருந்துகிறாரா.. என்பதைச் சரி பார்க்கும்.
AI கருவிகள் நேர்காணல் முதல் பணி அமர்த்தல் வரை அனைத்து செயல்முறையையும் எளிதாக ஆக்கியுள்ளன. தற்போது 40 % புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் AI மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். AI பயன்பாடு பணியமர்த்தும் நிறுவனங்களின் உற்பத்தித் திறனில் 15 சதவீத அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது மற்றும் பணியமத்துவதற்கான நேரத்தை 62 நாட்களில் இருந்து 43 நாட்களாக குறைத்துள்ளது என்று ஜென்பேக்டின் உலகளாவிய பணியமர்த்தல் துறையின் தலைவர் ரித்து பாட்டியா கூறியுள்ளார்.
இந்த AI பயன்பாட்டால் நல்ல திறமையுள்ள குறிப்பிட்ட வேலைக்கு ஏற்ற நபர்களைத் தேர்வு செய்ய முடிகிறது. அதே போல தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை நிவர்த்தி செய்ய சிறப்பான உத்திகளை உருவாக்கவும், இதுபோன்ற AI டூல்கள் பயன்படுவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
சிம்ப்ளிலேர்ன் (Simplilearn) என்ற கல்வி சார்ந்த நிறுவனம், ஒரு வருடத்திற்கும் மேலாக வேலைக்கு பணியமர்த்த ஜாப் டிஸ்கிரிப்ஷன்-ஐ (Job Description) ஒழுங்குபடுத்துவதற்கும், திறன் மதிப்பீடுகளை உருவாக்குவதற்கும் மற்றும் சைக்கோமெட்ரிக் சோதனைகளை நிர்வகிப்பதற்கும் ChatGPT மற்றும் பிற AI கருவிகளைப் பயன்படுத்துகிறது. நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி அர்ச்சனா கிருஷ்ணா கூறுகையில், "இந்த செயல்முறை நேரத்தை குறைக்கவும், உற்பத்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது" என்று கூறியுள்ளார்.
என்னதான் AI செயல்முறை பணியமத்துவதை எளிதாக்கினாலும், ஒரு தனி மனிதனின் திறனை கண்டறிவது AI-க்கு தெரியாத ஒன்றாக நிபுணர்கள் கருதுகின்றனர். அதேபோல அல்காரிதம் அடிப்படையில் செயல்படுவதால், அவர்களின் வேலை தொடர்பான திறன் தெரியாமல் போவதற்கு வாய்ப்பளிக்கும் என்றும் கருதுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications