இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக இருக்கும் ரியல்வே துறை இன்று வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பில் வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களில் ஏசி சேர் கார், எக்ஸ்கியூட்டிவ் கிளாஸ் டிக்கெட்-களின் விலையை 25 சதவீதம் வரையில் திடிரென குறைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா.?
இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் போக்குவரத்து துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலை விரைவில் வரும் என கணிப்புகள் ஒருபக்கம் இருக்கையில் மறுபுறம் விமான போக்குவரத்து துறை தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து மலிவு விலை விமான சேவையில் பெரும் புரட்சி உருவாக காத்திருக்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறையில் பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டு புதிய ரயில்கள், நவீன ரயில்கள், அதிக ரயில்கள், ரயில் நிலைய மேம்பாடுகள் என பலவற்றுக்கு அதிகப்படியான முதலீடுகள் செய்து பெரிய அளவிலான மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடக்கிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரயில் பயணிகள் எண்ணிக்கை குறிப்பாக ஏசி சேர் கார், எக்ஸ்கியூட்டிவ் கிளாஸ் பிரிவுகளில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு சமீபத்தில் இந்திய ரயில்வே துறையில் அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் ஆரம்பக்கட்டத்தில் 16 பெட்டிகள் கொண்டு இருந்தது. ஆனால் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் வெறும் 8 பெட்டிகள் மட்டுமே கொண்டு இருந்தது.
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகத்திற்கு பின்பு வந்த அனைத்து வந்தே பாரத் ரயில்களும் 8 பெட்டிகள் மட்டுமே கொண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கும் தற்போது விலை குறைப்பிற்கும் முக்கிய காரணம் உண்டு.
வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் எண்ணிக்கை பாதியாக குறைக்க முக்கிய காரணம் அதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரயில்களில் அனைத்து டிக்கெட்களும் விற்கப்படாமல் பல இருக்கைகள் காலியாக இருந்த காரணத்தால் பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இதேபோல் அதிக பணிகளை ஈர்க்கவும், ரயில் இயக்குவதற்கான செலவுகளை பயனுள்ளதாக மாற்றும் நோக்கில் ஏசி இருக்கைகள் இருக்கும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் கட்டணம் இடம், வழித்தடத்திற்கு ஏற்ப 25 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டு உள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில் ரயில் பயன்பாட்டை மக்கள் மத்தியில் மேம்படுத்தும் நோக்கில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏசி சிட்டிங் வசதியுடன் கொண்ட அனைத்து ரயில்களில் தள்ளுபடி கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரங்களை மண்டல ரயில்வேக்கு (Zonal Railway) வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உதாரணமாக இந்தூர் - போபால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெறும் 21 சதவீத சீட்டுகள் மட்டுமே நிரப்புகிறது. இதேபோல் போப்பால் - ஜபல்பூர் வந்தே பாரத் ரயிலில் 29 சதவீத சீட்டுகள் மட்டுமே நிரப்புகிறது. இந்த வழித்தடத்தில் ஏசி சேர் கார் டிக்கெட்-ன் விலை 950 ரூபாய், எக்ஸ்கியூட்டிவ் சேர் கார் விலை 1,525 ரூபாய்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications