டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பெருமளவில் ஸ்பான்சர்ஷிப் செய்யும் நிறுவனங்களாக இந்திய நிறுவனங்கள் இருக்கின்றன. கடந்த 2ஆம் தேதி ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின.
இதில் அமுல் பால் நிறுவனத்தில் தொடங்கி ட்ரீம்11 நிறுவனம் வரை பெரும்பாலான ஸ்பான்சர் அதாவது விளம்பரதாரர்கள் இந்தியாவை சேர்ந்தவையாக இருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்தியாவை சேர்ந்த பால் நிறுவனமான அமுல் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு ஸ்பான்சர் செய்கிறது, அதேபோல கர்நாடகாவை சேர்ந்த நந்தினி நிறுவனம் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு ஸ்பான்சர் செய்கிறது. ஹெசிஎல் டெக் நிறுவனம் ஆஸ்திரேலியா அணியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் டெக்னாலஜி பார்ட்னராக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவை சேர்ந்த பிராண்டுகளை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட் தளத்தில் இவ்வாறு ஸ்பான்சர் செய்வதன் மூலம் தங்களது பிராண்டுகள் உலக அளவில் பிரபலமாகும் என நம்புகின்றன. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வதற்காகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதலீடு செய்கின்றன.
2023 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணியின் முன்னணி ஸ்பான்சர்ஷிப்புக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 350 கோடி ரூபாயை இலக்காக நிர்ணயம் செய்தது. இந்த நிலையில் 358 கோடி செலுத்திய ட்ரீம் 11 நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி உரிமையை பெற்றது.
மணிகண்ட்ரோல் தளத்தில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் கர்நாடகாவின் நந்தினி பால் நிறுவனம் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளின் ஸ்பான்சரை தலா 2.5 கோடி ரூபாய் என்ற தொகைக்கு பெற்றது தெரியவந்துள்ளது. இதுவே இந்திய அணியை இதுபோல ஸ்பான்சர் செய்வது என்றால் இவர்களுக்கு இதை விட 196% அதிக அளவில் தொகை தேவைப்படுகிறது.
ஆனால் குறைந்த தொகையில் தங்கள் பிராண்டை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படி ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு கர்நாடகாவின் நந்தினி பால் நிறுவனம் ஸ்பான்சர் செய்வதாக தெரிய வந்துள்ளது.
டி20 போட்டிகளை சுமார் 850 மில்லியன் பேர் பார்வையிடுவார்கள் என்றும் இதன் மூலம் தங்களது நிறுவனம் உலக அளவில் பிரபலமாகும் என்றும் நந்தினி நிறுவனம் தெரிவிக்கிறது. தங்களது பிராண்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த டி20 உலக கோப்பை போட்டிகளை பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என நந்தினி பால் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்க சந்தையை களமாகக் கொண்டுதான் இந்த நிறுவனங்கள் இவ்வாறு ஸ்பான்சர் ஷிப்பை வழங்குவதாக தெரிய வந்துள்ளது. அண்மையில் அமெரிக்காவிலும் தங்கள் தொழிலை விரிவுபடுத்திய அமுல் நிறுவனம் , டி20 போட்டியில் அமெரிக்கா, இலங்கை , தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளை ஸ்பான்சர் செய்கிறது.
கிரிக்கெட்டை பொறுத்தவரை உலகளவில் அதிகமானவர்கள் கண்டு ரசிக்கும் ஒரு விளையாட்டாக இருக்கிறது. எனவே ஒரே ஸ்பான்சர் மூலம் பல கோடி மக்களை சென்றடைவது தான் இந்த பிராண்டுகளின் நோக்கம். குறிப்பாக வெளிநாட்டு சந்தைகள்.
Story written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications