இன்ஸ்டா, யூடியூப் என எங்கு திரும்பினாலும் அனன்யா பிர்லா.. ஏன் இந்திய திடீர் விளம்பரம்..?

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்களம் பிர்லா-வின் மகளான அனன்யா பிர்லா, கடந்த சில நாட்களாக இன்ஸ்டா, யூடியூப் என பல சமூக வலைத்தளங்களின் feed-களில் அதிகம் காணப்படுகிறார்.

சமீபத்தில் அனன்யா பிர்லா Met Gala நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, பாலிவுட்டில் மிகவும் பிரபலமான Koffee with Karan நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, ஃபரா கான் யூடியூப் சேனலின் Vlog-ல் வந்தது என அதிகப்படியான மக்களைக் கவரும் பிரபலமான தளங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இன்ஸ்டா, யூடியூப் என எங்கு திரும்பினாலும் அனன்யா பிர்லா.. ஏன் இந்திய திடீர் விளம்பரம்..?

பொதுவாக பெரும் தொழிலதிபர்கள் இத்தகைய நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மிகவும் அரிது. அனன்யா பிர்லா ஏற்கனவே மீடியா துறையிலும், விளையாட்டுத் துறையிலும் இருப்பவர் தான் என்றாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இதற்கு முன்பு கலந்துகொண்டது கிடையாது.

திடீரென இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது எதற்காக, கட்டாயம் இது தற்செயலான நிகழ்வு கிடையாது, மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்படும் செயல்களாகும்.

இதுகுறித்து இன்ஸ்டா பக்கத்தில் ஜெயந்தி டாக்ஸ் என்ற பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. வெறும் 2000 பேர் மட்டுமே கொண்ட இந்த இன்ஸ்டா கணக்கில் அனன்யா பிர்லா குறித்த வீடியோவுக்கு சுமார் 41,000 லைக்குகள் குவிந்துள்ளது.

சரி ஏன் அனன்யா பிர்லா இத்தகைய நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

அனன்யா பிர்லா தலைமையில் Swatantra என்ற என்பிஎப்சி நிறுவனமும், பிர்லா காஸ்மெட்டிக்ஸ் என அழகு சாதன பொருட்கள் நிறுவனமும் துவங்கப்பட்டு உள்ளது. இரு நிறுவனமும் தற்போது அதிகப்படியான மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லும் கட்டாயத்தில் உள்ளது.

இதில் Svatantra நிறுவனம் சுமார் ரூ.3,000 கோடி IPO வெளியிடுவதற்கான ஆவணங்களைச் செபி அமைப்பிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த ஐபிஓ வெற்றி அடைய வேண்டுமாயின் Svatantra நிறுவனத்தின் பெயரை அதிகப்படியான மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அடுத்தாக பிர்லா காஸ்மெட்டிக்ஸ் கீழ் LOVETC என்றும் பிராண்டின் கீழ் பல பாலிவுட் பிரபலங்கள் உடன் இணைந்து அடுத்தடுத்து புதிய அழகு சாதன பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது.

இதையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமாயின் மிகப்பெரிய விளம்பரம் தேவை. இதற்கான அடித்தளமாகவே Met Gala நிகழ்ச்சி, Koffee with Karan, ஃபரா கான் யூடியூப் சேனல் வீடியோ.

இதுமட்டுமல்ல டாடா குழுமம் தேசத்தின் உப்பு போன்ற விளம்பர முயற்சிகள் மூலமும், அம்பானி குடும்பம் சமூக வலைத்தளங்கள் மூலமும் மக்கள் மத்தியில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் பிர்லா குழுமம் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை வைத்திருந்தாலும் மக்களுடனான தொடர்பு இல்லாமல் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா 10 -15 வருடத்திற்குப் பின்பு நிகில் காமத் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், இதன் நீட்சியாக பிர்லா குழுமத்தின் பெயரையும், புகழையும் அனன்யா பிர்லா இத்தகைய முயற்சிகள் மூலம் கொண்டு சொல்கிறார்.

பிர்லா குடும்பம் பலருக்கும் தெரிந்த பெயராக இருந்தாலும், இன்றைய இளம் தலைமுறையினரை அடைய அனன்யா பிர்லா முகம் அவசியமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+