ஒரே நாளில் 20% ஏற்றம்.. அப்பல்லோ பைப்ஸ் கொடுத்த சூப்பர் வாய்ப்பு..!

இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவில் முடிவடைந்திருந்தாலும் அப்பல்லோ பைப்ஸின் பங்கு விலையானது 20% அதிகரித்துள்ளது.

குறிப்பாக மும்பை பங்கு சந்தையில் அதன் 52 வார உச்ச விலையை தொட்டுள்ளது. இன்று இதன் உச்சம் 883 ரூபாயாகும். அதிலும் இந்திய சந்தைகள் சரிவினைக் கண்டுள்ள அதே நேரத்தில், இந்த பங்கின் விலை ஒரே நாளில் 20% ஏற்றம் கண்டுள்ளதே என்ன காரணம். வாருங்கள் பார்க்கலாம்.

ஒரே நாளில் 20% ஏற்றம்.. அப்பல்லோ பைப்ஸ் கொடுத்த சூப்பர் வாய்ப்பு..!

இந்த ஸ்மால் கேப் பங்கானது கடந்த 12 மாதங்களில் 300 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இது 220 ரூபாயிலிருந்து ஏற்றம் காண ஆரம்பித்த நிலையில், இன்று அதன் விலை 883 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது.

இன்று காலை தொடக்கத்திலேயே இந்த பங்கின் விலையானது 747 ரூபாயாக தொடங்கியது. இதுவே முந்தைய அமர்வின் முடிவு விலையானது 735.85 ரூபாயாகும். இன்றைய இண்டிராடே வர்த்தக்கத்தில் 20 சதவீதம் அதிகரித்து, 883 ரூபாயில் அப்பர் சர்கியூட் ஆகியுள்ளது. இதனையடுத்து இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1157.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இரண்டு வாரங்களில் பங்கு பரிவர்த்தனை மாற்றம் சராசரி 4,295 பங்குகளாக இருந்த நிலையில், இன்று 35,000 பங்குகளாக அதிகரித்துள்ளது.

இதே தேசிய பங்கு சந்தயில் 19.94 சதவீதம் அதிகரித்து 884 ரூபாயாக அப்பர் சர்கியூட் ஆகியுள்ளது. இதன் இண்டிராடே உச்சம் 886 ரூபாயாகும். முந்தைய அமர்வின் முடிவு டவிலையானது 735 ரூபாயாகும்.

இந்த நிறுவனம் டிசம்பர் காலாண்டில் வலுவான நிதி நிலை அறிக்கையை வெளியிட்ட நிலையில் இந்த பங்கின் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் நிகரலாபம் 145 சதவீதம் அதிகரித்து 16.33 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 6.66 கோடி ரூபாயாக இருந்தது. இதே செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் வருவாய், 28 சதவீதம் அதிகரித்து, 128.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே விற்பனையும் மூன்றாவது காலாண்டில் 7 சதவீதம் அதிகரித்து 11,445 டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 10,712 டன்னாக இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+