ஹூண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் மட்டும் திடீரென உயர்ந்தது நினைவிருக்கும்.
இந்தத் திடீர் உயர்வுக்கு என்ன காரணம் என ரீடைல் முதலீட்டாளர்கள் ஒருபக்கம் புலம்பி வரும் வேளையில், மறுபுறம் நரேந்திர மோடி அரசை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதானி குழுமம் குறித்த கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த நிலையில் அதானி குழும பங்குகள் உயர என்ன காரணம்..?
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி குழுமத்தின் முக்கியமான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பிப்ரவரி 03 தேதி 1,017.10 ரூபாய் என்ற இன்ட்ராடே விலையைப் பதிவு செய்தது. அதன் பிறகு பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அதானி பங்கு சுமார் 2,000 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
அதானி போர்ட்ஸ்
இந்த நிலையில் புதன்கிழமை அதானி குழும நிறுவனங்களின் 10ல் 7 பங்குகள் உயர்வுடன் இருந்தது. அதானி எண்டர்பிரைசர்ஸ் ஒரே நாளில் 19% உயர்ந்து ₹2,142.6 ஆகவும், அதானி போர்ட்ஸ் சுமார் 8% உயர்ந்து ₹598 ஆகவும், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி வில்மர் தலா 5% உயர்ந்து இருந்தது.
அம்புஜா சிமெண்ட்ஸ்
இதில் அம்புஜா சிமெண்ட்ஸ் 1 சதவீதமும், என்டிடிவி 5% உயர்ந்து வர்த்தகம் செய்தன. மேலும் அதானி கிரீன், அதானி டோட்டல் கேஸ் ஆகிய இரண்டு பங்குகள் மட்டும் சரிவில் இருந்தன. இந்த நிலையில் பிப்ரவரி 7 அன்று மட்டும் அதானி குழும நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு 11,506 கோடி ரூபாய் உயர்ந்தது.
5 முக்கியக் காரணம்
எட்டு நாட்கள் சரிவில், அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பை எதிர்கொண்டது. இந்த நிலையில் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆம் தேதி பங்கு உயர்வுக்கு 5 முக்கியக் காரணம் உள்ளது.
1114 மில்லியன் டாலர் கடன்
அதானி குழுமம் அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவன பங்குகளை அடைமானம் வைத்து சுமார் 1114 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கடனாகப் பெற்று இருந்தது. இந்தக் கடனுக்கான பேமெண்ட் தேதி என்னவோ செப்டம்பர் 2024 தான், ஆனால் அதானி குழுமம் இதை முன்கூட்டியே அடைத்துள்ளது. வங்கி கட்டுப்பாட்டில் இருந்த பங்குகளைத் திரும்பப் பெற்றது.
அதானி போர்ட்ஸ் கடன்
இதேபோல் அதானி போர்ட்ஸ் 2023-25 ஆம் நிதியாண்டு காலத்தில் சுமார் 5000 கோடி ரூபாய் கடனை திரும்பி செலுத்துவதாகத் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதுக்குறித்து வெளியிட அறிவிப்பில் 5000 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவது மட்டும் அல்லாமல் முன்கூட்டியே செலுத்துவதாக அறிவித்துள்ளது.
அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் acc கடன்
இதோடு அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் acc ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்காக அதானி குழும்ம கடன் வாங்கிய 4.5 பில்லியன் டாலர் தொகையில் 500 மில்லியன் டாலர் அளவிலான தவணையை முன்கூட்டியே செலுத்துவதாக அறிவித்தது.
டோட்டல் எனர்ஜிஸ்
இதேபோல் அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பிரான்ஸ் நாட்டின் டோட்டல் எனர்ஜிஸ், கேஸ் மற்றும் ரினியூவபிள் எனர்ஜி துறையில் அறிவிக்கப்பட்ட 3.1 பில்லியன் டாலர் முதலீடு திட்டம் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
இதைத் தொடர்ந்து அதானி கிரீன் உட்பட் சில அதானி குழும நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்துள்ளது. இதன் எதிரொலியாகப் பிப்ரவரி 7,8 ஆகிய நாட்களில் அதிகளவில் உயர்ந்தது.
இன்றைய சரிவுக்குக் காரணம்
ஆனால் பிப்ரவரி 9 ஆம் தேதி மொத்த கதையும் மாறியுள்ளது. MSCI குறியீடு அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அதானி குழுமத்தின் சில செக்யூரிட்டிகள் ப்ரீ ப்ளோட் தகுதி பெற்ற கூடாது என்றும், இதன் தகுதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
MSCI அமைப்பு
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழும நிறுவனங்களின் MSCI அமைப்பின் சில குறியீடுகளில் இடம்பெறுவதற்கான தகுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இந்த மறு ஆய்வு முடிவை எடுத்துள்ளது.
அதானி குழும பங்குகள் விலை
MSCI அமைப்பின் அறிவிப்புக்கு பின்பு இன்றைய வர்த்தக முடிவில் அதானி குழும பங்குகளின் நிலை
அதானி எண்டர்பிரைசஸ் - 10.72 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 2.90 சதவீதம் சரிவு
அதானி பவர் - 5.00 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 4.96 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 5.00 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 2.88 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 6.86 சதவீதம் சரிவு
NDTV - 4.92 சதவீதம் சரிவு
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications