ATM கீபேட் ஏன் மெட்டல் பாடியில் செய்யப்பட்டுள்ளது? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா?

ஏடிஎம் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வங்கிக்கு சென்று பணம் எடுக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தேவைப்படும் நேரங்களில் வங்கிக்கு சென்று வித்ட்ராயல் ஃபார்மை நிரப்பி பணம் எடுக்க முடியாது. அதுவும் அவசரக் காலங்களில் பணம் தேவைப்படும் போது ஏடிஎம் இயந்திரங்களே உற்ற துணையாய் இருக்கிறது. அப்படி ஏடிஎம்-ஐ பயன்படுத்தும்போது நீங்கள் பாஸ்வேர்ட் போடும் கீபேடை கவனித்திருக்கிறீர்களா? இந்த கீபேட் ஒரு வகையான மெட்டல் பாடியில் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கிற்க்கு பதிலாக ஏன் மெட்டல் பாடி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

நீடித்த உழைக்கும் தன்மை: ஏடிஎம் இயந்திரங்களை தினசரி அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் கீபேட் தொடர்ந்து அழுத்தப்படுகிறது. பலரின் கைகளை பட்டன் தாங்க வேண்டியுள்ளது. இது போன்ற சமயங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அது உடைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே நல்ல மெட்டல் பாடியை கொண்டு கீபேட் தயாரித்தால் அது பழுதடையாமல் இருக்கும்.இதனால் அவ்வப்போது ஏற்படும் பராமரிப்புச் செலவுகளும் குறையும்.

ATM கீபேட் ஏன் மெட்டல் பாடியில் செய்யப்பட்டுள்ளது? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா?

துருப்பிடிக்காத தன்மை: மெட்டல் பாடியில் செய்யப்பட்டாலும் ஏடிஎம் இயந்திரங்களின் கீபாடுகள் துரு பிடிப்பது இல்லை. குறிப்பாக எந்த வெப்பநிலை வந்தாலும் அதை தாங்கும் திறன் கொண்ட மெட்டலையே இதற்கு பயன்படுத்துகின்றனர்.

செக்யூரிட்டி: மெட்டல் பயன்படுத்தப்படுவதற்கு முக்கியமான காரணம் இதுதான். பிளாஸ்டிக் பொருட்கள் சமீபத்தில் நாம் அழுத்தும் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இது போன்ற சூழலில் திருடர்கள் சில நவீன கருவிகளைப் பயன்படுத்தி சமீபத்தில் வந்த நபர் எந்த பட்டனை அழுத்தியுள்ளார் என்பதை கண்டுபிடிப்பதற்கு வாய்ப்புள்ளது.

Also Read

ஆனால் மெட்டலை பயன்படுத்தும் போது அது வெப்பத்தை விரைவாக பரவச் செய்துவிடும். இதனால் சமீபத்தில் எந்த பட்டனை அழுத்தினார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த முறை ஓரளவுக்கு திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க உதவும். இருப்பினும் பல நவீன ஏடிஎம்களில் இதைவிட பாதுகாப்பான முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சேதங்களில் இருந்து பாதுகாப்பு: ஏடிஎம் இயந்திரங்களின் கீபேட் பலமுறை அழுத்தப்படுவதால் மெட்டல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெட்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் அல்லது வேறு உலோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை சேதம் அடையும் வாய்ப்புள்ளது. அடுத்த முறை நீங்கள் ஏடிஎம் மையங்களுக்கு செல்லும்போது பணம் எடுத்து முடித்த பிறகு ஒரு முறை கீபேடை உற்றுப் பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+