புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் செயல்பட்டு வரக்கூடிய ஒரு நிறுவனத்தில் பிரபல பாலிவுட் நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வத்துடன் முதலீடு செய்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது. கரம்தாரா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் சூரிய ஒளி மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முன்னணி நிறுவனமாக இது உருவெடுத்து இருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் எட்டு இடங்களில் தன்னுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கிறது.

கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இந்த நிறுவனம் கூடிய விரைவில் ஐபிஓ வெளியீடு செய்ய இருக்கிறது. முதல் கட்டமாக இந்த நிறுவனம் நிதி திரட்டலில் ஈடுபட்டது. இந்த முதல் கட்ட நிதி திரட்டலில் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வத்துடன் இதில் முதலீடு செய்து இருக்கின்றனர்.
இந்த ஆண்டு இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து 1,750 கோடி ரூபாய் நிதியை திரட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் கடன் சுமையை குறைப்பதற்காகவே ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுவதாக கரம்தாரா இன்ஜினியரிங் நிறுவனம் கூறியிருக்கிறது. முன்னதாக நிறுவனத்தின் பிரமோட்டர்கள் தங்கள் வசம் இருந்த பங்குகளை செகண்டரி சேல் என்ற முறையில் விற்பனை செய்வதற்கு தயார் என அறிவித்திருந்தனர்.
இந்த சூழலில் கரம்தாரா இன்ஜினியரிங் நிறுவனத்தில் பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூர் ,அமீர்கான், கரன் ஜோகர் ஆகியோரும் கிரிக்கெட் வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, ரோகித் சர்மா ஆகியோரும் முதலீடு செய்து இருக்கின்றனர். ஏப்ரல் 25ஆம் தேதி நிலவரப்படி இந்த பிரபலங்களிடம் 9,68,910 ஈக்விட்டி பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் என தெரிய வந்திருக்கிறது. ஒரு பங்கின் மதிப்பு 310 ரூபாய் என்ற அளவில் விற்பனை நடைபெற்றிருக்கிறது.
இந்த நிறுவனத்தில் இந்தியா ஆபர்சுனிட்டிஸ் கிரௌத் ஃபண்டும் 8 லட்சம் பங்குகளை 25 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. ஜனவரி மாதமே ஏஞ்சல் இன்வெஸ்டர்களிடம் சுமார் 98 லட்சம் பங்குகளை விற்பனை செய்து 307 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி இருக்கிறது.
சஸ்லான் எனர்ஜி, ஐனாக்ஸ் விண்ட் உள்ளிட்ட நிறுவனங்களோடு போட்டியில் இருக்கிறது இந்த நிறுவனம். ஐபிஓ வெளியீடு மூலம் திரட்டப்படும் தொகையைக் கொண்டு நிறுவனத்தின் கடன்களை திரும்ப செலுத்து இருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 2024 நவம்பர் மாத நிலவரப்படி கரம்தாரா நிறுவனத்திற்கு சுமார் 586 கோடி ரூபாய் கடன் நிலுவையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications