உலக நாடுகளை பயமுறுத்தும் ஹவுதிக்கள்.. ஈரானை விடவும் பல மடங்கு நெருக்கடி.. வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா!

உலகம் முழுவதும் பிரதமர்கள், அதிபர்கள், அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர் என அனைத்து தரப்பினரும் கடந்த 1.5 மாதங்களாக மிகவும் கவலையுடன் பார்க்கும் விஷயம் கச்சா எண்ணெய் விலை.

அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் வெடித்த போது ஹார்முஸ் வழித்தடம் முடக்கப்பட்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 110 டாலரைத் தாண்டி அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் இரு நாடுகள் மத்தியிலான போர் தாக்குதல் குறைந்ததும் கச்சா எண்ணெய் விலை வேகமாகக் குறையத் துவங்கியது.

 உலக நாடுகளை பயமுறுத்தும் ஹவுதிக்கள்.. ஈரானை விடவும் பல மடங்கு நெருக்கடி.. வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா!

ஹார்முஸ் வழித்தடத்தில் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கிய வேளையிலும் இதன் விலை குறைய மிக முக்கியமான காரணம் செங்கடல் வழியாகச் சவுதி அரேபியா உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்தது.

இங்கு தான் முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது, சவுதி அரேபிய அரசு ஹவுதி அமைப்பின் முக்கிய தலைவர்கள் சென்ற விமானத்தைத் தாக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தது மூலம் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு மத்தியில் ஃபுல்ஸ்டாப் வைக்கப்பட்ட போர் மீண்டும் வெடிக்கத் துவங்கியது.

இதன் விளைவாக ஹவுதி அமைப்புகள் தற்போது உலக நாடுகளுக்கு முக்கிய சப்ளையராக இருக்கும் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் தளங்கள், கட்டமைப்புகள், விமான நிலையங்கள் என அனைத்தையும் யெமன் நாட்டில் தாக்கி வருகிறது.

இதனால் செங்கடல் வழியாக நடக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு தற்போது கச்சா எண்ணெய் மெல்ல மெல்ல உயர்ந்து 110 டாலரைத் தொட்டு உள்ளது. இதனால் இந்த விலை உயர்வு என்பது தற்காலிகமானது அல்ல உலக பொருளாதாரத்தைப் பாதிக்கும் நீண்ட நெடிய அச்சுறுத்தல் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய கிழக்கு போரில் அரசியல் ரீதியாகவும், பேச்சுவார்த்தை வாயிலாகவும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் எவ்விதமான பலனும் அளிக்கப்படவில்லை.

தற்போது ஈரான் மூலம் ஹார்முஸ் வழியாகவும், ஹவுதி மூலம் செங்கடல் வாயிலாகவும் கச்சா எண்ணெய் சப்ளை மொத்தமாக முடங்கியதன் விளைவாகக் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 110 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

 உலக நாடுகளை பயமுறுத்தும் ஹவுதிக்கள்.. ஈரானை விடவும் பல மடங்கு நெருக்கடி.. வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா!

இதேபோல் தற்போதைய விலை உயர்வு என்பது போர் அச்சங்கள் தாண்டி 3 முக்கியமான விஷயத்தின் மூலம் கச்சா எண்ணெய் விலை குறையாமல் பெரும் பிரச்சனையைக் கொடுத்து வருகிறது என கணிக்கப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான கப்பல் தட்டுப்பாடு - அதிக எண்ணிக்கையிலான கப்பல் ஹார்முஸ் வழித்தடத்தில் முடங்கியுள்ளது, அல்லது தாக்குதலுக்கு உள்ளாக்கி முடங்கியுள்ளது. எஞ்சியுள்ள கப்பல்கள் ரஷ்யா, சீனா, இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சப்ளையில் உள்ளது.

அடுத்த முக்கிய பிரச்சனை சுத்திகரிப்பு நெருக்கடி - போர் காரணமாக உலகம் முழுவதும் பல சுத்திகரிப்பு ஆலைகள் முடங்கியும் பாதிக்கப்பட்டும் உள்ளது. இதனால் எரிபொருள் சப்ளை குறைந்து, சேமிப்பு அளவும் வேகமாகக் குறைந்து வருகிறது.

இறுதியாக தற்போது அமெரிக்க துவங்கிய மத்திய கிழக்கு போர் மூலம் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் எனக் கணித்துள்ள முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது பெரும் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

இதனால் போர் தாக்குதல் இல்லாவிட்டாலும் கட்டமைப்பு ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கச்சா எண்ணெய் விலை குறையாது என கணிக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா இறங்கியது போல் ஹவுதி விவகாரத்தில் அமெரிக்கா அரசு தலையிட மறுப்பதும் முக்கிய நெருக்கடியாகச் சவுதி அரேபியா பார்க்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+