இந்தியாவின் மிகப் பெரிய பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ லோம்பார்ட் நடத்திய ஆய்வில், இந்திய இளைய தலைமுறையினர், முந்தைய தலைமுறையினரை விட மன அழுத்தம் மற்றும் பதற்றத்துக்கு ஆளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 77% இந்தியர்கள் மன அழுத்தத்தின் பாதிப்பு தொடர்பான ஒரு அறிகுறியைக் வெளிக்காட்டியுள்ளனர், ஒவ்வொரு மூன்றில் ஒரு இந்தியரும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் போராடி வருகின்றனர்.

இந்தியாவில் இளைய தலைமுறபை, குறிப்பாக ஜெனரேஷன் இசட் குழுவைச் சேர்ந்தவர்கள், மன அழுத்தம், பதற்றம் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இளைம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்கியுள்ளது மட்டும் அல்லாமல் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறை வழங்கியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல், அவர் இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடும் வருடாந்திர நிகழ்வுகளை நடத்துகிறார், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
பல்கலைக்கழக நுழைவு அல்லது போர்டு தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார்.
புதுடெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இளம் தலைமுறையினர் மத்தியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி "ஒருவரின் திறன்களை பாதிக்கும் அளவுக்கு அழுத்தம் இருக்கக்கூடாது" என்று மோடி எச்சரித்தார்.
மாணவர்களின் செயல்திறன் பற்றிய கருத்துகளில் இருந்து பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் விலகி இருக்குமாறு அவர் வலியுறுத்தினார், எதிர்மறையான ஒப்பீடுகளுக்கு மாணவரின் மன நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மோடி கூறினார்.
புது தில்லியைச் சேர்ந்த 24 வயதான மோஹித் கூறுகையில், கல்வி உலகில் இருந்து தங்கள் தொழில் வாழ்க்கைக்கு மாறுவது கடினமாக இருக்கிறது. மோசமான வேலை - வாழ்க்கை சமநிலையைக் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன். என் தலைமுறை இதைப் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்று அவர் கூறினார்.
இந்த உணர்வை மேற்கூறிய ஆய்வு உறுதி செய்கிறது. இது பணியிடத்தில், குறிப்பாக பெண் மற்றும் ஜெனரேஷன் இசட் தொழிலாளர்களின் வாழ்வை பாதிக்கிறது என்று ஆய்வில் தெரிகிறது.
பரபரப்பு கலாசாரத்துடன் இணைவதற்கு சில அழுத்தம் உள்ளது. அங்கு இளைஞர்கள் தங்களைத் தொடர்ந்து பாடுபட வேண்டிய அவசியத்தை உணர்கிறார்கள் என்று மனநல சுகாதார அமைப்பான அமஹாவின் மூத்த மருத்துவ உளவியலாளர் பிரதிஷ்தா திரிவேதி மிர்சா கூறினார்.
அத்துடன், இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் சகாக்களுடன் அல்லது பிரபலங்கள், செல்வாக்குமிக்கவர்கள், அவர்கள் தொடர்புடைய தொழில்துறையினர் உடன் தங்களை அதிகளவில் ஒப்பிட்டு, தங்கள் சுயத்தை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள். இதன் விளைவாக சுய மதிப்பு மற்றும் சுயமரியாதை உணர்வு பிரச்னைகள் ஏற்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications