திறமையான ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது ஏன்..? இதிலிருந்து தப்பிப்பது எப்படி..?

ஐடி துறையில் சமீபத்திய வாரங்களாகவே பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. ஐடி துறையில் மட்டும் அல்ல, ஸ்டார்ட் அப் துறைகளிலும் பணி நீக்கம் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலரும் சமூக வலைதளங்களிலும், தங்களது பணி நீக்கம் குறித்து பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

சில தினங்களுக்கு முன்பு ஒரு ஊழியர்கள் நான் பணி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனத்தில் தான் பணி புரிந்து வந்தேன். 2019ல் இருந்து பணி புரிந்து வந்தேன். நிறுவனத்திற்காக கடுமையாக சிறப்பாக உழைத்தேன். என்னுடைய பெஸ்டை நான் கொடுத்தேன். ஆனால் நிறுவனம் என்னை பணி நீக்கம் செய்து விட்டது என பதிவிட்டிருந்தார்.

கடுமையாக உழைப்பவர்களும் பணி நீக்கம்

கடுமையாக உழைப்பவர்களும் பணி நீக்கம்

இது பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த நபருக்கு மட்டும் அல்ல, இன்று ஏராளமானவர்கள் இப்படி தான் உள்ளனர். ஏன் இன்னும் கூட பணி நீக்க லிஸ்டில் இருக்கலாம். இது குறித்து ET-யில் வெளியான ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஒன்றை படிக்கும்போது, இது பயனுள்ளதாக இருக்கும் என தோன்றியது. நிபுணர்களிடம் இன்றைய காலகட்டத்தில் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 14 - 15 மணி நேரம் பணிபுரிபவர்களும் இருக்கின்றனர். ஆனால் நிறுவனம் அவர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது ஏன்? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ஏன் பணி நீக்கம்?

ஏன் பணி நீக்கம்?

பொதுவாக நிறுவனங்களின் தற்போதைய நிலையை நினைத்து பார்க்கும் போது, தற்போதைய மந்த நிலையில், அவர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். செலவினை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அப்போது நிறுவனங்கள் பிரமிடின் கீழ் உள்ள மக்களை நீக்குகின்றன. ஏனெனில் பிரமிடின் கீழ் ஊழியர்கள் உற்பத்தி செய்யும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவில்லை. வணிகத்தினை தொடர வேண்டும் என்று இருந்த நிலையில், அவர்களைத் தான் பணி நீக்கம் செய்கின்றன. ஏன் நீங்கள் முதலீடு செய்யும் துறையையே அப்படியே நீக்கம் செய்யலாம்.

இது தான் உண்மை

இது தான் உண்மை

உதாரணத்திற்கு மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஒரு வேலை மெட்டவெர்ஸ் சேவையை நிறுத்த விரும்பினால் அந்த துறையில் பணியமர்த்தப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யலாம். தேவைக்கு அதிகமாக பணியமர்த்தப்பட்டவர்களை பணி நீக்கம் செய்யலாம். இதில் நன்கு பணிபுரியும் திறமை வாய்ந்த ஊழியர்களும் அடங்குவர். பணி நீக்கம் செய்யப்பட்டதற்காக அவர்கள் திறமையற்றவர்கள் அல்ல. அவர்கள் திறமை வாய்ந்த ஊழியர்கள்.

 வணிகம் வளர்ச்சி காண வேண்டும்

வணிகம் வளர்ச்சி காண வேண்டும்

ஆனால் உங்களுக்கு உங்கள் வணிகத்தினை மேலே தொடந்து கொண்டு செல்ல நினைக்கும்போது, நீங்கள் அதனை அவசியம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். பல நிறுவனங்களும் இதனைத் தான் செய்கின்றன. பல திறன் வாய்ந்த ஊழியர்களும் இப்படித் தான் வெளியேற்றப்படுகிறார்கள். உங்களுக்கு உங்கள் வணிகம் மேம்பட வேண்டும். ஆக நீங்கள் இதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த நிலை தான் தற்போது ஐடி துறையிலும் நிலவி வருகின்றது.

நியாயம், அநியாயம் எது?

நியாயம், அநியாயம் எது?

ஏனெனில் நிறுவனங்களால் தற்போது இருக்கும் ஊழியர்களை வைத்தே அவர்களது வணிகத்தினை நடத்த முடியும். நிறுவனங்களுக்கு தெரியும் ஊழியர்கள் நன்றாக பணிபுரியக் கூடியவர்கள் என்று. உண்மையாக சொல்ல வேண்டுமானால் இங்கு நியாயம், அநியாயம் என்பதெல்லாம் இல்லை. நீங்கள் 30% அதிகம் இன்னொரு நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது என்பதால், நிறுவனத்தை விட்டு வெளியேறுவது நியாயமா?

போதிய பணம் இல்லாத போது பணி நீக்கம்

போதிய பணம் இல்லாத போது பணி நீக்கம்

அப்படி தான் பணி நீக்க நடவடிக்கையும். நிறுவனத்திடம் போதிய பணம் செயல்படாதபோது அவர்களிடம் இல்லை எனும் அவர்கள் பணி நீக்கம் செய்கிறார்கள். குறைந்தபட்சம் இருக்கும் மக்களுக்காகவது சம்பளம் கொடுக்கின்றனர்.

முட்டாள் தனமான ஒன்று

முட்டாள் தனமான ஒன்று

பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தங்களது தேவைக்கு அதிகமாக பணியமர்த்திக் கொள்கின்றன. பணத்தை திரட்டவும் செலவழிக்கவும் செய்கின்றன. ஆனால் நீங்கள் எப்போதும் பணத்தை பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. இது முட்டாள் தனமான ஒன்று. நீங்கள் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். நீங்கள் ஒரு மதிப்பினை உருவாக்க வேண்டும் என்றால், அதற்கான கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டும். பணத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் நீங்கள் தவறான வழிக்கு செல்லலாம்.

 தப்பிக்க ஒரே வழி

தப்பிக்க ஒரே வழி

ஆக மொத்தத்தில் இந்த பணி நீக்கம் என்பது ஐடி துறையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதேபோல உங்களின் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கான வாய்ப்பானது குறைந்து கொண்டே செல்லலாம். இதன் காரணமாக நீங்கள் பிரச்சனையை சந்திக்கலாம். ஆக உங்களின் சம்பளம் என்பது அதிகரிக்க அதிகரிக்க உங்களது திறனை மேம்படுத்திக் கொள்வதே இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒரே வழி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+