இந்தியாவை சேர்ந்த பெற்றோருக்கு தங்களுடைய பிள்ளைகளை வெளிநாடு குறிப்பாக அமெரிக்காவிற்கு அனுப்பி பட்டப்படிப்பு படிக்க வைப்பது என்பது ஒரு மிகப்பெரிய பெருமை. அது மட்டுமில்லாமல் அமெரிக்காவில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்தால் அவர்கள் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு செல்வார்கள், பெரிய தொழிலதிபர்களாக உருவாவார்கள் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கும்.
தற்போது இந்த நம்பிக்கைதான் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஏஐ போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சி , மற்றொன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்திருக்கும் விசா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள். அமெரிக்காவை சேர்ந்த இளைஞர்கள் மத்தியிலேயே உயர்கல்விக்கு சென்று பயில்வதன் மூலம் நமக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்திருக்கிறதாம்.

அதாவது உயர்கல்விக்காக பல லட்சங்களை செலவு செய்து படிக்கிறோம் ஆனால் தற்போது அந்த படிப்புகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை அப்படி என்றால் அந்த படிப்பில் செய்த முதலீடு தனக்கு எந்த ஒரு வருமானத்தையும் கொடுப்பதில்லை என்ற ஒரு மனநிலை அமெரிக்க இளைஞர்கள் மத்தியிலேயே ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி பட்ட மேற்படிப்புக்காக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் இளைஞர்களின் நிலைமை சற்று மோசமாக தான் இருக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலான பெற்றோர் தங்களுடைய சொத்துகளை விற்பனை செய்து , வாழ்நாள் சேமிப்புகளை எல்லாம் எடுத்து தான் தங்கள் பிள்ளைகளின் அமெரிக்க பட்ட படிப்பு கனவை நிறைவேற்றுகின்றனர். பெரும்பாலானவர்கள் வங்கிகளில் கல்வி கடனும் பெறுகின்றனர். இவ்வாறு அமெரிக்கா செல்வது படிப்பது என்பது டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மிகவும் கெடுபிடிகள் நிறைந்ததாக மாறிவிட்டது. ஸ்டூடண்ட் விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு அத்தனை எளிதாக விசா பெறுவதற்கான அப்பாயின்மென்ட் கூட கிடைப்பது கிடையாது.
அமெரிக்க கல்லூரியில் அட்மிஷன் கிடைத்துவிட்டாலும் இங்கிருந்து செல்வதற்கான விசா கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அப்படியே விசா கிடைத்து அமெரிக்கா சென்றாலும் அங்கே அமெரிக்க அரசாங்கம் பல்வேறு கெடுபிடிகளை விதிக்கிறது. இந்த கெடுபிடிகளுக்கு எல்லாம் மத்தியில் படித்து முடித்து விட்டு வெளியில் வரும்போது வேலை வாய்ப்பு இல்லை.
விசா காலம் முடிவதற்குள் வேலை கிடைத்தால் பரவாயில்லை இல்லை என்றால் மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும். லட்சக்கணக்கில் கடன் வாங்கி, இருக்கிற சொத்துகளை எல்லாம் அடமானம் வைத்து , விற்பனை செய்து படிப்புக்காக அமெரிக்கா அனுப்பி அதன் மூலம் நமக்கு ஒன்றுமே திரும்ப கிடைக்காது என்ற நிலைமை தற்போது படிப்படியாக உருவாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களும் கூட தற்போது இளைஞர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இப்படி ஒரு மனநிலை உண்டாகி இருப்பதால் கல்வி கட்டணங்களை குறைப்பது தங்களுடைய சிலபஸ்களை மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றனவாம்.

அமெரிக்கா சென்று படிப்பது தான் ஒரு சிக்கல் என்றால் தற்போது அமெரிக்கா மாப்பிள்ளைகளுக்கும் இந்தியாவில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய குடும்பங்களை பொருத்தவரை அமெரிக்க மாப்பிள்ளை என்றால் கண்ணை மூடிக்கொண்டு தங்களுடைய மகளை திருமணம் வைத்து செய்து வைத்துவிடுவார்கள் . ஆனால் தற்போது இந்த ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் மற்றும் ஐடி நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் பணி நீக்க நடவடிக்கைகள் என்ஆர்ஐ மாப்பிள்ளைகள் மீதான மோகத்தை குறைக்க செய்திருக்கின்றன.
தற்போது பெரும்பாலான பெற்றோர் என்ஆர்ஐ மாப்பிள்ளை குறிப்பாக அமெரிக்க மாப்பிள்ளை அதுவும் ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்றவர் என்றால் அவர்களுக்கு பெண் தருவதற்கு தயங்குகிறார்கள் என ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பிடுகிறது. டிரம்ப் பதவியேற்ற பின் அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கான மவுசு குறைந்து இருக்கிறது என மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய வனஜா ராவ் என்பவர் தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications