அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலில் மிக மோசமான தோல்வியை டிரம்ப் சந்தித்துள்ள நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தை இன்று அதிரடியான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
மிட்டேரம் தேர்தலில் சென்ட் சபையில் ஆதிக்கம் செலுத்த 50 இடங்கள் தேவைப்படும் வேளையில் ஜனநாயக கட்சி 54 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது, இதேபோல் உறுப்பினர்கள் அவையில் ஆதிக்கம் செலுத்த 218 இடங்கள் தேவைப்படும் வேளையில் ஜனநாயக கட்சி 228 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி ஆதிக்கமற்ற நிலையில் உள்ளது, இதனால் அமெரிக்க அரசு கொள்கை அளவில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வரப்படும் எனக் கணிக்கப்படும் காரணத்தால் மொத்த முதலீட்டுச் சந்தையும் கொண்டாட்டத்தில் உள்ளது.
குறிப்பாகப் பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி உயர்விலும், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கப் பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டி சரிவிலும் உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் பங்குச்சந்தை மீதும், தங்கம் - வெள்ளி மீதும் திரும்பியுள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் தற்போது டாவ் ஜோன்ஸ் 1300 புள்ளிகளும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 110 புள்ளிகளும், நாஸ்டாக் 400 புள்ளிகளும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. மேலும் ஜனநாயக கட்சிக்கு அதிகாரத்திற்கு வரும் வேளையில் செயற்கை நுண்ணறிவு துறையில் விதிமுறைகள், தரவு பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இன்று பெரும்பாலான ஏஐ, டேட்டா சென்டர் நிறுவன பங்குகள் அமெரிக்க சந்தையில் சரிவில் மாட்டிக்கொண்டு உள்ளது. இதேபோல் தங்கம் விலை ஸ்பாட் சந்தையில் 3 சதவீதமும், வெள்ளி கிட்டத்தட்ட 5 சதவீதமும், தொழிற்துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் palladium 7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
டிரம்ப்-ன் தோல்வியும், இன்றைய வர்த்தகத்தையும் பார்க்கும் போது ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் ஒரு நிலையான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்ட அரசுக்காக காத்திருந்த காட்டுகிறது.
ஆனால் அமெரிக்கப் பங்குச்சந்தை வல்லுனர்கள், ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றமும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அதிபராக இருக்கும் காலகட்டத்தில் பங்குச்சந்தைக்கு மிகவும் மோசமான காலகட்டமாக இருந்துள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு பங்குச்சந்தையில் ஏற்படும் மாற்றங்களை நம்ப வேண்டாம் எனவும் வார்னிங் கொடுத்துள்ளனர். இதோடு பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 99 டாலர் வரையில் குறைந்து ஷாக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications

