மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பல்வேறு செல்வந்தர்களும் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகளை விற்பனை செய்யும் போக்கு அண்மை காலமாக அதிகரித்துள்ளது.
மும்பையில் ஆடம்பரமான ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக 40 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்த பிரிவில் 247% விற்பனை அதிகரித்தது.

மும்பையில் தற்போது சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருப்பதால் பல்வேறு வீட்டு உரிமையாளர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வீடுகளை விற்பனை செய்து பணமாக்குவது தெரியவந்துள்ளது. குறிப்பாக பல்வேறு பிரபலங்களும் , உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களும் மும்பையில் தங்களுக்கு சொந்தமான வீடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
அண்மையில் கூட பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் தனக்கு சொந்தமாக இருந்த நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்தார். 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட 140 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன . இதன் மொத்த மதிப்பு 12,300 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதில் 21 வீடுகள் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை மதிப்பு கொண்டவையாம்.
அதாவது 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் இது 8 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 2025 ஆம் ஆண்டிலும் இந்த போக்கு நீடிக்கிறது. பிரபல நடிகர் அமிதாப்பச்சன் அந்தேரியில் தனக்கு சொந்தமாக இருந்த 83 கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பை விற்பனை செய்தார் ,அதேபோல பிரபல தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மலபார் ஹில் பகுதியில் தனக்கு சொந்தமாக இருந்த 210 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டினை விற்பனை செய்தார்.
மும்பையில் பிரபலங்கள் தற்போது வீடுகளை விற்பனை செய்வதற்கு முக்கிய காரணமாக சொத்துக்களின் மதிப்பு உயர்ந்திருப்பது சொல்லப்படுகிறது. தெற்கு மும்பை பகுதியில் 2020 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை வீடுகளின் மதிப்பு 22 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாம். பலரும் இந்த விலை உயர்வை பயன்படுத்தி சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கி வருகின்றனர் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட வீடுகளில் 63 சதவீதம் பேர் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் என தெரியவந்துள்ளது . பங்குகளில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடு கட்டுவதற்காக ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த லாபங்களை சமன் செய்து கொள்ளலாம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே ஈக்விட்டியில் முதலீடு செய்திருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் இந்த இதன் மூலம் 1.25 கோடி வரை வரி சேமிக்க முடியும் என்பதால் வீடுகளில் விற்பனை செய்வதாக தெரிகிறது.
இப்போது மும்பையில் வீடுகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதால் இங்கே விற்பனை செய்துவிட்டு , வளர்ந்து வரும் பகுதிகளில் முதலீடு செய்ய பலரும் முன் வந்துள்ளனர். நவி மும்பை, புனே ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகரித்திருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications