ஏன் ATM பின் நம்பர் 4 டிஜிட்டில் இருக்கிறது தெரியுமா? மனைவி சொல்லே மந்திரம்! இதில் இப்படி ஒரு பிளாஷ்பேக்!

வங்கிகளுக்கு சென்று.. நீண்ட வரிசையில் நின்று.. படிவங்களை எல்லாம் நிரப்பி பணம் எடுத்த காலம் மாறிவிட்டது. இன்றெல்லாம் மக்கள் டிஜிட்டல் பேமென்ட் தளங்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அப்படி ஏடிஎம் பயன்படுத்தும் நம்மில் பலர் 4 டிஜிட் பின் நம்பரை பார்த்திருப்போம். ஏன் பின் நம்பர் 4 டிஜிட்டாக இருக்கிறது தெரியுமா? இதற்குப் பின்னால் ஒரு சுவாரசிய கதை உள்ளது.

முதன் முதலாக ஏடிஎம் மெஷினை கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட்-பாரோன் ஆவார். இவர் 1967-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி அன்று லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கிக்காக முதல் ஏடிஎம்-ஐ நிறுவினார். ஆரம்பத்தில் ஏடிஎம் பின் நம்பர் 6 டிஜிட்டாக தான் இருந்தது. ஆறு டிஜிட் நம்பரை பயன்படுத்துவது பணம் எடுக்கும் போது மக்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் என்று ஜான் ஷெப்பர்ட்டுக்கு நம்பிக்கை.

உண்மையிலேயே இந்த 6 டிஜிட் நம்பர் மக்களுக்கு உதவுகிறதா என்பதை தனது மனைவி கரோலினிடம் ஜான் சோதனை செய்து பார்த்தார். அப்போது அவருடைய மனைவி தன்னால் 6 நம்பரை எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும், 4 நம்பருக்கு மேல் யோசிக்கவே சிரமமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஏன் ATM பின் நம்பர் 4 டிஜிட்டில் இருக்கிறது தெரியுமா? மனைவி சொல்லே மந்திரம்! இதில் இப்படி ஒரு பிளாஷ்பேக்!

தன் மனைவி கூறியதைக் கேட்ட ஜான் மனித மூளையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டார். அதிலிருந்து பின் நம்பரை 6 டிஜிட்டில் இருந்து 4 டிஜிட்டாக மாற்றினார். பொதுமக்களுக்கும் 4 டிஜிட் பின் நம்பர் இருப்பது உதவிகரமாக இருக்கும் என்று யோசித்தார். அதுவே காலப்போக்கில் ஏடிஎம் மையங்கள் 4 டிஜிட் பின் நம்பரை வைத்திருக்க காரணமாக மாறியது.

Also Read

கரோலின் என்னவோ எதார்த்தமாக தன்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டார். ஆனால் இதன் பின்னால் ஒரு உளவியல் காரணமும் இருக்கிறது. பிரபல சைக்காலஜிஸ்ட் ஜார்ஜ் மில்லர் மனித மூளை குறித்த ஆராய்ச்சியை நடத்தினார். அதில் ஒரு மனிதனால் ஒரே நேரத்தில் 5 முதல் 9 தகவல்களை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும் என்று கண்டுபிடித்தார்.

எனவே 4 டிஜிட் பின் நம்பர் இந்த வரம்பிற்குள் இருப்பதால் டைரி அல்லது பேப்பரில் எழுதி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் பேப்பரில் எழுதிவிட்டு அதை மறந்து தூக்கி எறியும் போது ஏற்படும் ஆபத்தை தடுக்க முடியும்.

அதோடு 4 டிஜிட் பின் நம்பரை பயன்படுத்தும் போது அதை கொண்டு 10,000 பின் நம்பர்களை உருவாக்க முடியும். உதாரணமாக 0000 முதல் 9999 ஆகிய நம்பரை முன்னும் பின்னும் ஆக மாற்றி மாற்றி எழுதினால் 10,000 பின் நம்பர் வரை உருவாக்க முடியும். இப்படி இருப்பதால் பின் நம்பரை திருடர்கள் கணிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதாலும் இந்த 4 டிஜிட் கொண்டுவரப்பட்டது.

இன்றைய வங்கிகள் தொடர்ந்து மூன்று முறை தவறான பின் நம்பரை வழங்கி விட்டால் அந்த ஏடிஎம் கார்டை பிளாக் செய்து விடுகின்றன. இதனால் தொடர்ந்து பின் நம்பரை திருடர்களாலும் போட்டு பார்க்க முடியாது. எனவே பாதுகாப்பு கருதியும், மனிதர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்வதற்காகவும் இந்த முறை கொண்டுவரப்பட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் சில வங்கிகள் 6 டிஜிட் பின் நம்பரை வழங்குகின்றன. ஆனால் இன்றளவும் உலக அளவில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் நான்கு டிஜிட் பின் நம்பர் தான் நடைமுறையில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+