பெங்களூரு - ஐதராபாத் நகரங்களை நோக்கி படையெடுக்கும் ஜிசிசி.. அப்போ சென்னைக்கு..?

பெங்களூரு: பன்னாட்டு நிறுவனங்கள் ஜிசிசி எனப்படும் குளோபல் கெபாபிலிட்டி சென்டர்கள் (GCC - Global Capablity Centers) அதாவது தங்களின் கிளைகளை இந்தியாவில் நிறுவ ஆர்வம் காட்டி வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன செயல்பாடுகளான பேக் ஆபீஸ் ஃபங்க்ஷன் , ஐடி அசிஸ்டன்ஸ் மற்றும் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் உள்ளிட்டவற்றை செயல்படுத்த இந்த மையங்களை பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் தங்களுடைய ஜிசிசி மையங்களை நிறுவ பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களை முதன்மையாக தேர்வு செய்கின்றன. தற்போது இந்தியாவில் செயல்படக்கூடிய ஜிசிசி மையங்களில் 60% பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் தான் இருக்கிறது.

பெங்களூரு - ஐதராபாத் நகரங்களை நோக்கி படையெடுக்கும் ஜிசிசி.. அப்போ சென்னைக்கு..?

அண்மையில் ரியல் எஸ்டேட் கன்சல்டிங் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் ஜிசிசி மையங்கள் லீசுக்கு எடுத்துள்ள அலுவலகங்களின் அளவு 1.30 லட்சம் சதுர அடி ஆகும். இதுவே புனே, மும்பை மற்றும் டெல்லியில் 70 ஆயிரம் சதுர அடி ஆக மட்டுமே இருக்கிறது.

இந்த நிறுவனங்கள் ஏன் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களை முதன்மையாக தேர்வு செய்கின்றன என்பதற்கான காரணங்களை தற்போது பார்க்கலாம்.

பன்னாட்டு நிறுவனங்களை பொறுத்தவரை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் திறன்மிகு ஊழியர்கள் பொருத்தமான ஊதியத்தில் கிடைப்பதாக நம்புகின்றன. எனவே தான் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களை விடுத்து இவை ஹைதராபாத் மற்றும் பெங்களூருவை நோக்கி படையெடுக்கின்றன. இது பணியாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதைவிட பல்வேறு துறை சார்ந்த திறன்மிகு பணியாளர்கள் இந்த இரண்டு நகரங்களிலும் அதிக அளவில் கிடைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

குறிப்பாக ஹைதராபாத் நகரம் அறிவியல் ஆய்வுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஜிசிசி மையங்களை ஈர்க்கிறது. பெங்களூரு நகரத்தை பொருத்தவரை அங்கே மத்திய மற்றும் மூத்த தொழில் நுட்ப நிபுணர்கள் அதிக அளவில் கிடைக்கின்றனர்.

ஜிசிசி மையங்களை அமைப்பதற்கு தேவையான அலுவலக இடங்கள் சமகால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு நகரங்களில் தான் கிடைக்கின்றன. அதாவது நெகிழ்வு தன்மையுடன் கூடிய அலுவலக தளங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், ஓய்வு இடங்கள் ஆகிய ஒருங்கிணைந்த அலுவலக இடங்கள் இந்த இரண்டு நகரங்களில் தான் கிடைக்கின்றன என சொல்லப்படுகிறது.

ஜிசிசி மையங்களை பொருத்தவரை தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் நிறைந்த நகரங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிறைந்த அலுவலகங்களிலும் தான் தங்களுடைய மையங்களை நிறுவுவதற்கு விரும்புகின்றன. ஏனெனில் இந்த பகுதிகளில் திறன்மிகு பணியாளர்கள் எளிதாக கிடைப்பார்கள் .

எனவே இவை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களை தேர்வு செய்கின்றன. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களை பொருத்தவரை புதிதாக ஒரு தொழில் தொடங்குவதற்கு மற்றும் அலுவலகங்களை அமைப்பதற்கு ஏற்ற எளிமையான கொள்கைகளையும் சூழல்களையும் கொண்டு இருக்கின்றன.

குறிப்பாக இவை வளர்ந்து வரும் துறைகளுக்கு ஏற்ற நகரங்களாக இருப்பதால்தான் இங்கே அதிக எண்ணிக்கையிலான மையங்கள் அமைகின்றன. அதுமட்டுமின்றி ஆங்கில புலமை கொண்ட ஊழியர்கள் அதிகம் கிடைப்பது மற்றும் வானிலை சூழல்கள் அந்த நகரத்தின் கலாச்சாரம் ஆகியவையும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் அலுவலக இடங்களுக்கான வாடகை விகிதம் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த இரண்டு நகரங்களிலும் ஒரு சதுர அடிக்கு 70 ரூபாய் என்று சராசரி வாடகை அளவிலேயே அலுவலகங்களை வாடகைக்கு எடுக்க முடியும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை அமைத்து வருகின்றன .2024 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1600 ஜிசிசி மையங்கள் அமைந்துள்ளன.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+