பெங்களூரு: கர்நாடகாவில் கலால் வரி உயர்த்தப்பட்டதால் பீர் விலை உயர்ந்துள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மது அருந்தாமலே புலம்பும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடகாவில் பீர் பாட்டில் மீதான கலால் வரியானது 185 சதவீதத்தில் இருந்து தற்போது 195 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 20ஆம் தேதி முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் பீர்களின் விலை உயர்ந்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்க்கும்போது 650 மில்லி லிட்டர் அளவு கொண்ட ஒரு பாட்டில் பீரின் விலை 10- 45 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறதாம்.

இதற்கு முன்பு வரை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீர் பாட்டில் தற்போது 145 ரூபாய்க்கும், 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீர் பாட்டில் 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறு பீரின் விலை உயர்ந்திருப்பதால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பீர் விற்பனை 10 சதவீதம் வரை குறையும் என மதுபான விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்நாடகாவின் மதுபான விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கருநாகர் ஹெட்ஜே, தவறான நேரத்தில் அரசு பீர் பாட்டில்களுக்கான கலால் வரியை உயர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். திடீரென இந்த விலை உயர்வு அமலுக்கு வந்திருப்பதால் பீர் சப்ளை தடைபட்டுள்ளது என கூறியுள்ள அவர் ஏற்கனவே கர்நாடகாவில் பீர் விற்பனை குறைந்து இருக்கிறது இந்த விலை உயர்வு அதை இன்னும் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
கோரமங்கலாவில் செயல்பட்டு வரக்கூடிய ஒரு பப்பின் உரிமையாளர் அண்மைக்காலமாக பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பார்ட்டி செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது ,இதில் பீரின் விலை உயர்த்தப்பட்டிருப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.
பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்வது, வேலையில் போதிய பாதுகாப்பில்லாமல் இருப்பது ஆகியவை காரணமாக பெங்களூருவில் மக்கள் பார்ட்டி செய்யும் பழக்கமே குறைந்து வருவதாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
ஆண்டுதோறும் பப்களுக்கான செலவினம் 10 சதவீதம் வரை உயர்கிறது ஆனால் லாபம் எதிர்பார்த்த படி இல்லை என கூறியுள்ளார். அரசு கொள்கைகள் மற்றும் கடுமையான போட்டியாகவே காரணமாக மதுபான விடுதிகள் பெரும் சிக்கலில் இருப்பதாகவும் இப்படிப்பட்ட காலத்தில் விலையை உயர்ந்திருப்பது பெரிய பிரச்சனை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
பீர் மீதான கலால் வரி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியானதை அடுத்து உற்பத்தியாளர்கள் பலரும் பீர் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன என்றும் இதனால் தற்போது சப்ளை குறைந்து இருப்பதாகவும் விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அடுத்த சில வாரங்களுக்கு பெங்களூரு ஆகிய நகரங்களில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே கலால் துறையில் வருவாய் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாகவே இந்த விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications