இந்தியாவில் வீடுகளின் வாடகை வேகமாக உயர்ந்து வரும் நகரமாக பெங்களூரில் இருக்கிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவித்துவிட்டன. இதனால் வீட்டிலிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் மீண்டும் பெங்களூருக்கு வருகை தர தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகைகளை பல மடங்கு உயர்த்தி இருப்பதாக வாடகைக்கு குடியிருப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சந்தை தேவையை பொறுத்து வீட்டு வாடகையை குறைக்க மாட்டேன் என பல்வேறு வீட்டு உரிமையாளர்களும் தெரிவிக்கிறார்கள்.

வைட்ஃபீல்டு பகுதியில் வசிக்கக்கூடிய ஒரு இளைஞர் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் தான் குடியிருக்கும் மூன்று படுக்கையறை கொண்ட ஒரு வீட்டில் ஒரு அறையை தன்னுடைய உரிமையாளர் 23 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுகிறார், அந்த தொகைக்கு யாரும் வராததால் ஐந்து மாதமாக அந்த அறையை பூட்டியே வைத்திருக்கிறார் என தெரிவிக்கிறார்.
இதனால் அவருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை ஐந்து மாதங்களில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் காலியாக இருக்கும் அறைக்கான வாடகையை ஏற்கனவே குடியிருக்கும் தங்கள் மீது சுமத்துவதற்கு அவர் திட்டமிடுவதாகவும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வாடகையை உயர்த்த இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த பல்வேறு வீட்டு உரிமையாளர்களும் தற்போது இரக்கமின்றி வாடகையை உயர்த்துவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர் . பெங்களூர் நகரில் ஆண்டுதோறும் வீடுகளின் வாடகை 23 லிருந்து 30 சதவீதம் வரை சராசரியாக உயர்கிறது . இந்திரா நகர், வைட்ஃபீல்டு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் வாடகை 40லிருந்து 50% வரை உயர்ந்து இருப்பதாக வாடகைக்கு குடியிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக பல்வேறு வீட்டு உரிமையாளர்களும் தற்போது வீடுகளின் வாடகையே பல மடங்கு உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
முடிந்த அளவு அதிகபட்ச வாடகை வருமானத்தை பெற வேண்டும் என்பதிலேயே பல்வேறு வீட்டு உரிமையாளர்களும் தற்போது குறியாக இருக்கின்றனர் என ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் தற்போது பெங்களூருவில் பல்வேறு நிறுவனங்களில் பணி நீக்கம் நடக்கிறது இதை கருத்தில் கொண்டு வீட்டு உரிமையாளர்கள் சற்றே வாடகையை குறைக்க வேண்டும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளாவிட்டால் வீட்டு உரிமையாளர்களுக்கு தான் நஷ்டம் என இந்த துறை சார்ந்த இயங்கக்கூடிய நிறுவனங்கள் கூறுகின்றன.
பெங்களூருவில் பிரதான பகுதிகளில் எல்லாம் கடந்து இரண்டு ஆண்டுகளில் வீடுகளின் வாடகை மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மூன்று படுக்கையறை கொண்ட குடியிருப்புகளின் வாடகை மாதத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரை செல்கிறது. இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கேட்டட் கம்யூனிட்டிகளில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை 65 ஆயிரம் ரூபாய் என்று அளவில் இருக்கிறதாம். இதற்கு செக்யூரிட்டி டெபாசிட் ஆக மட்டும் 3-4 லட்சம் ரூபாய் வரை கேட்கப்படுகிறதாம்.


Click it and Unblock the Notifications