Bengaluru: பெங்களூரு டெக் ஊழியர் ஒருவர் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர்களுடன் நடந்த சம்பவங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பெங்களூர் பல புதுமைகள் முதலில் உணர்ந்த சமூகம், இன்று பிரபலமாக இருக்கும் ஆன்லைன் டெலிவரி முதல் ஈகாமர்ஸ் வரை அனைத்து விதமான புதிய வர்த்தகங்களுக்கும் இந்த டெக் நகரம் தான் சோதனை தளம்.
கிட்டத்தட்ட பெங்களூர் மக்களும் இதேபோல தான், ஒவ்வொரு நபரும் ஒரு ரகம். இப்படி தான் பெங்களூரில் டெக் ஊழியர்கள் பலர் கைநிறைய சம்பாதித்தாலும் ரோபிடோ ஓட்டுவது, புட் டெலிவரி செய்வது, ஆட்டோ ஓட்டுவது என சிறு சிறு வேலைகளை அதிகளவில் செய்து வருகின்றனர். இப்படியொரு சம்பவத்தை தான் டெக் ஊழியர் ஒருவர் எதிர்கொண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அன்கிட் சர்மா என்ற டெக் நிபுணர் செய்த பதிவில், முதல் சந்திப்பில் ஒரு ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் 80 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள 2 BHK ஃபிளாட் வைத்திருப்பதாகவும், ஒரு MNC நிறுவனத்தில் குவாலிட்டி அனாலிஸ்ட்டாக பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.
தான் சந்தித்த மற்றொரு ரேபிடோ பைக் ஓட்டுநர் 60-70 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் சொந்த காபி ஷாப் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். "ஏன் ரேபிடோ ஓட்டுகிறீர்கள்?" என்று கேட்டபோது அவர் இது மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் பொழுதுபோக்காக இதை செய்வதாக கூறியுள்ளனர் என்று அன்கிட் சர்மா வீடியோவில் விளக்கினார்.
இந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பலர் தங்களுக்கு இதே போன்ற அனுபவங்கள் இருப்பதாக பகிர்ந்தனர். சிலர் "பெங்களூர் இப்படித்தான்" என்று கருத்து தெரிவித்தனர். கிக் எகானமி எழுச்சி (gig economy) காரணமாக பலர் கூடுதலாக வருமானம் ஈட்ட ரேபிடோ போன்ற பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்துவதாக தெரிகிறது.
சமீபத்தில் ஒரு பெங்களூரு வாசி ரெடிட்-இல் தனது 4 நாள் ரேபிடோ ஓட்டுநர் அனுபவத்தை பகிர்ந்தார். 17 மணி நேரம் பணியாற்றி 200 கி.மீ பயணித்த அவர் மொத்தம் ரூ.2,220 சம்பாதித்தார். பெட்ரோலுக்கு ரூ.400 செலவு செய்த பிறகு நிகர வருமானம் ரூ.1,820 ஆக இருந்தது. இரண்டாவது நாள் 5 மணி நேரத்தில் ரூ.750 தான் கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார்.
பெங்களூரு போன்ற நகரங்களில் இத்தகைய இரட்டை வாழ்க்கை வழக்கமாகி வருகிறது. சிலர் கூடுதல் வருமானத்திற்காகவும், சிலர் சுவாரஸ்யத்திற்காகவும் இதைத் தொடர்கின்றனர். இன்னும் சிலர் தனிமையை போக்கவும் இதுப்போன்ற சிறு சிறு வேலைகளை செய்வதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications