மும்பை: இந்தியாவில் பணக்கார குடும்பம், பணக்கார நபர் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு முதலில் வருபவர் முகேஷ் அம்பானி தான். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் நாட்டின் மிகப் பெரிய தொழில் குழுமமாக செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக இருக்கக்கூடிய முகேஷ் அம்பானி நாட்டின் நம்பர் ஒன் பணக்காரராகவும் இருக்கிறார்.
முகேஷ் அம்பானியை விட பல மடங்கு சொத்து மதிப்பு கொண்ட ஒரு நபர் மாதம் தோறும் அம்பானிக்கு 40.5 லட்சம் ரூபாயை வாடகையாக செலுத்தி வருவது தெரிய வந்துள்ளது. அவர்தான் லூயிஸ் விட்டான் நிறுவனத்தின் உரிமையாளரும் தலைமை செயல் அதிகாரியமான பெர்னார்ட் அர்னால்ட் . இவர் சர்வதேச அளவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தையில் மிகவும் பெயர் போன ஒரு நபர். உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் எப்பொழுதுமே முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பார்.

அண்மையில் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு 168.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அர்னால்டை பொறுத்தவரை உலகின் மிகவும் மதிப்பு மிக்க ஆடம்பர பிராண்டுகளின் உரிமையாளராக இருக்கிறார்.
Louis Vuitton, Tiffany & Co., Dior, Givenchy, TAG Heuer, Bulgari ஆகிய நிறுவனங்கள் இவருக்கு சொந்தமானவை தான். இவ்வளவு சொத்து மதிப்பு கொண்ட அர்னால்ட், 94.9 பில்லியன் டாலர் மதிப்பு சொத்து மதிப்பு கொண்ட முகேஷ் அம்பானிக்கு மாதம் தோறும் 40 லட்சம் ரூபாயை வாடகையாக செலுத்துகிறார்.
முகேஷ் அம்பானியை பொருத்தவரை மும்பையில் ஜியோ வேர்ல்ட் பிளாசா என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய மாலினை சொந்தமாக நடத்தி வருகிறார். இங்கே ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான நேரடி விற்பனை நிலையம் உள்பட பல்வேறு பிராண்டுகளின் நேரடி விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மும்பையின் ஆடம்பரமான பாந்திரா குர்ளா பகுதியில் தான் இந்த ஜியோ வேர்ல்ட் பிளாசா மால் அமைந்துள்ளது.
இந்த மாலில் லூயிஸ் விட்டன் நிறுவனம் 7465 சதுர அடி பரப்பளவிலான ஒரு கடையை நிறுவி இருக்கிறது. இது இந்த பிராண்டின் நேரடி விற்பனை நிலையமாகும். இந்த கடைக்காகத்தான் பெர்னார்ட் அர்னால்ட் மாதம்தோறும் 40.5 லட்சம் ரூபாயை முகேஷ் அம்பானிக்கு வாடகையாக செலுத்தி வருகிறார். முகேஷ் அம்பானிக்கு அவருடைய ஜியோ வேர்ல்ட் பிளாசா மாலின் மூலம் மட்டும் மாதந்தோறும் கோடிக்கணக்கிலான பணம் வாடகை வருமானமாக கிடைக்கிறது.
சர்வதேச ஆடம்பர பிராண்டுகளின் நேரடி விற்பனை நிலையங்கள் செயல்படக்கூடிய ஒரு மாலாக இருப்பதால் ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் தங்களுடைய கடைகளை திறப்பதற்கு பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் போட்டி போடும். அதனால்தான் இங்கு வாடகை மிகவும் அதிகம்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications