ரிலையன்ஸ் பவர் என்ற மிகப்பெரிய தொழில் நிறுவனத்தை நிறுவி பின்னர் மிகப்பெரிய சரிவை சந்தித்தவர் தான் அனில் அம்பானி. ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என தொடர்ந்து இவரது நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றன.
தன்னுடைய மகன்களின் உதவியோடு நிறுவனங்களை தூக்கி நிறுத்தி வெற்றி முகத்தோடு வெளியுலகில் வலம் வர தொடங்கி இருக்கிறார் அனில் அம்பானி. தொழில் உலகை சேர்ந்த பலரும் அனில் அம்பானி மீண்டு வந்ததை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். தற்போது இந்திய திரையுலகின் பிக் பி என செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சனும் அனில் அம்பானியை பாராட்டியுள்ளார்.

அனில் அம்பானி தன்னுடைய கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் சோதனைகளை எல்லாம் கடந்து எப்படி மீண்டும் வெற்றியை நோக்கி திரும்பி இருக்கிறார் என்பது குறித்து தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அமிதாப் பச்சன் பதிவு செய்துள்ளார். அதில் அனில் அம்பானி ஒரு பார்க்கில் ஜாகிங் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அமிதாபச்சன் பிசினஸ் வேர்ல்ட் தளத்தில் அனில் அம்பானி எவ்வாறு தோல்வியிலிருந்து மீண்டு வந்து மீண்டும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்திருக்கிறார் என்பது பற்றிய கட்டுரையை பகிர்ந்துள்ளார்.
அதில் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புக்கு எந்த தடைகளும் இருக்க முடியாது என குறிப்பிட்டு அனில் அம்பானியை பாராட்டியுள்ளார் அமிதாப் பச்சன். ரிலையன்ஸ் குழுமத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் மகன்கள் தான் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி. 2005 ஆம் ஆண்டு சகோதரர்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இடையே சொத்துகள் பிரிக்கப்பட்டன.
அதில் ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வந்த தொலைதொடர்பு ,நிதி ,மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானி வசம் வழங்கப்பட்டன. தொடக்கத்தில் அனில் அம்பானி மிகச் சிறந்த முறையில் நிறுவனங்களை நடத்தி வந்தார் ஆனால் படிப்படியாக அவர் தன்னுடைய தொழிலில் வீழ்ச்சி அடைய தொடங்கினார். 2019 ஆம் ஆண்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது 2021 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனமும் திவால் ஆனதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் நிறுவனங்களையும் இழந்து தன்னுடைய பணத்தையும் இழந்து பெரும் கடனாளியாக மாறினார் அனில் அம்பானி. அவ்வளவுதான் அவரால் எழுந்து வர முடியாது என அனைவரும் கூறிய நிலையில் தான் அனில் அம்பானி தன்னுடைய மகன்கள் ஜெய் அன்மோல் மற்றும் ஜெய அன்சுல் ஆகிய இருவரின் உதவியோடு தன்னுடைய ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃபிரா நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
ரிலையன்ஸ் பவர் கடன் இல்லாத நிறுவனமாக மாறியிருக்கிறது ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பங்குச் சந்தையில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்த வண்ணம் இருக்கிறது. ரிலையன்ஸ் இன்ஃபிரா பல்வேறு இடங்களிலும் உள்கட்டமைப்பு சம்பந்தப்பட்ட திட்டங்களை கையகப்படுத்தி மீண்டும் வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாக மாறி இருக்கிறது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தை பொருத்தவரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது .
அண்மையில் தான் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 350 மெகாவாட் சோலார் பவர் ப்ராஜெக்டை கைப்பற்றியது அதேபோல ரிலையன்ஸ் பவரின் துணை நிறுவனம் ஒன்று ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சோலார் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் திட்டத்தை இந்திய சோலார் எனர்ஜி கழகத்திடம் இருந்து பெற்றது . இது கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு கொண்ட இந்தியாவின் முக்கியமான ஒரு திட்டம் ஆகும்.
இது தவிர பல்வேறு நாடுகளில் செயல்படும் நிறுவனங்களோடும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கூட்டமைத்து இருக்கிறது அதே வேலையில் ரிலையன்ஸ் டிபன்ஸ் என்ற பெயரில் ஒரு துணை நிறுவனத்தை ஏற்படுத்தி ஜெர்மனியை சேர்ந்த நிறுவனத்தோடு இணைந்து பாதுகாப்பு துறைக்கு தேவையான வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய தொடங்கியிருக்கிறது.
அனில் அம்பானி பொருத்தவரை வெற்றியோ தோல்வியோ தான் எடுத்த ஒரு விஷயத்தை கைவிடாத ஒரு நபர். 65 வயதான அவர் மாரத்தான் ஓட்டத்தில் சிறந்தவராம் இதுவரை 50 மாரத்தான்களை முடித்திருக்கிறாராம். அது தான் அவரை சோர்வடையாமல் தொடர்ந்து எழுந்த ஓட வைத்திருக்கிறது. அவருக்கு உறுதுணையாக அவரது மகன்கள் இருக்கின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications