மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பணக்காரர்களுள் ஒருவருமான பில்கேட்ஸ் இரண்டு நிறுவனங்களில் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
சிறந்த நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடு செய்வதில் வல்லமை படைத்தவர் பில்கேட்ஸ். அவருடைய பில் அண்ட் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் போர்ட் போலியோவில் அதிக லாபம் தரக்கூடிய நிறுவனங்களின் பங்குகள் இருக்கின்றன. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பில்கேட்ஸ் மற்றும் அவருடைய அறக்கட்டளை 15.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறது.

அமெரிக்க பங்குச்சந்தை போக்குக்கு ஏற்றபடி தன்னுடைய முதலீட்டு உத்திகளை மாற்றிக் கொண்டே இருப்பவர் பில்கேட்ஸ். அந்த வகையில் அவர் அண்மையில் இரண்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. முற்றிலும் தொழில்நுட்பத்தோடு சம்பந்தமே இல்லாத நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருப்பது தற்போது சர்வதேச அளவில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மின்சார வாகனம், ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும் எனவே அந்த துறைகளில் முதலீடு செய்தால் சிறந்த லாபத்தை காண முடியும் என பரவலாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த மூன்றுக்கும் சம்பந்தமே இல்லாத இரண்டு நிறுவனங்களில் பில்கேட்ஸ் முதலீடு செய்திருக்கிறார். பில்கேட்ஸ் போக்குவரத்து பிரிவில் செயல்படக்கூடிய இரண்டு நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறாராம்.
லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் பிரிவில் இயங்கக்கூடிய இரண்டு நிறுவனங்களில் பில்கேட்ஸ் முதலீடு செய்திருக்கிறார். 2025 ஆம் ஆண்டில் இந்த இரண்டு துறைகளும் மீண்டு வரும் என்ற நம்பிக்கையில் பில்கேட்ஸ் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்படி பில்கேட்ஸ் Paccar என்ற நிறுவன பங்குகளை வாங்கி இருக்கிறார்.
Paccar நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த லாரி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 108.5 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல அவர் FedEx என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறார்.
FedEx என்பது அமெரிக்காவை சேர்ந்த போக்குவரத்து, இ-காமர்ஸ் மற்றும் வணிக சேவை ஆகிய கூட்டு தொழிலில் ஈடுபடும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 274.90 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 9% வரை உயர்ந்திருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications