அமெரிக்கா: புகழ்பெற்ற பிளாக்ராக் முதலீட்டு நிறுவனம் சர்வதேச அளவில் மூன்று சதவீத பிட்காயின்களை சொந்தமாக வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் ஜெயந்த் முந்த்ரா என்பவர் வெளியிட்டுள்ள தகவலின் படி உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக கிரிப்டோ சந்தை மாறி இருக்கிறது.
தன்னுடைய பதிவில் ஜெயந்த் முந்த்ரா சில முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளார். உலக அளவில் தற்போது கிரிப்டோ கரன்சி சந்தை வேகமான வளர்ச்சியை எட்டி வருகிறது. இதில் அதிக மதிப்பு மிக்க கரன்சியாக பிட்காயின் பார்க்கப்படுகிறது.

இந்த பிட்காயினுக்கு இருக்கும் மவுசை அடுத்து கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் பிட்காயின் ஈடிஎஃப் அமெரிக்கா பங்குச்சந்தையில் கொண்டுவரப்பட்டது. தற்போது இது கோல்ட் ஈடிஎஃப்-ஐ விட பல மடங்கு அதிக மதிப்பு கொண்ட ஒரு ஈடிஎஃப்-ஆக செயல்பட்டு வருகிறது.
இந்த 11 மாத காலத்தில் பிட்காயின் சார்ந்த 11 ஈடிஎஃப்-கள் அமெரிக்க பங்குச்சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு அதிக மதிப்பு கொண்டவைகளாக மாறியுள்ளன. முதன்முதலில் பிளாக் ராக் நிறுவனம் தான் பிட்காயின் ஈடிஎஃப்-ஐ அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது அதிக அளவில் அனைவரும் விரும்பி முதலீடு செய்யக்கூடியது ஒரு ஈடிஎஃப்-ஆக இது திகழ்கிறது.
கிட்டத்தட்ட 11 மாதங்களிலேயே இதன் மதிப்பு 50 பில்லியன் டாலர் என்ற அளவை கடந்துவிட்டதாம் இதற்கு முன்பு பிளாக் நிறுவனம் அறிமுகம் செய்த ஈடிஎஃப்-கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் 50 மில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டும்.
இந்த பிட்காயின் ஈடிஎஃப்-இல் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ மூலம் மட்டும் ஓர் ஆண்டுக்கு பிளாக் ராக் நிறுவனம் 125 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் என இல்லாமல் முதலீட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பிட்காய்ன்களில் முதலீடு செய்வதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
ஏனெனில் பிட்காயினின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , அதன் ஈடிஎஃப் மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. எனவே மிக எளிமையாக செல்வத்தை வளர்க்கும் ஒரு கருவியாக பிட்காயின் ஈடிஎஃப்-கள் மாறி உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் பிட்காயின்கள் என்பது ஒரு மோசடி என கூறிவந்த பிளாக் நிறுவனம் தான் தற்போது அதை வைத்து மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாறியுள்ளது.
தற்போது அமெரிக்க அதிபராக பிட்காயினுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டு ட்ரம்ப் பதவியேற்க இருப்பதால் வரக்கூடிய காலங்களில் பிட்காயின் மதிப்பு அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் பிட்காயின் சம்பந்தப்பட்ட ஈடிஎஃப்களின் மதிப்பும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
Story Written By: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications