பிரிக்ஸ் நாடுகள் போட்ட மெகா ஸ்கெட்ச்.. அமெரிக்கா - ஐரோப்பாவின் ஆட்டம் இனி முடியப்போகுது..!!

பிரிக்ஸ் (BRICS) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 வளர்ச்சி அடைந்த நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இந்த ஐந்து நாடுகளும் தற்போது உலக மக்கள் தொகையின் 40%-க்கும் மேல் மற்றும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25-30% பங்காற்றி வருகின்றன. சமீப காலமாக இந்த கூட்டமைப்பில் புதிய உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டதால், அதன் தாக்கமும் விரிவடைந்துள்ளது.

பிரிக்ஸ் இந்தியாவுக்கு ஏன் முக்கியம்..?: நீண்ட காலமாக உலக அரசியலில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நாடுகள் தான் உலகின் முக்கிய முடிவுகளை எடுக்கும் "மேற்கத்திய சக்திகள்" என அறியப்படுகின்றன. இந்நாடுகள் நிர்ணயிக்கும் கொள்கைகள், வணிக ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உலக நாடுகளின் நலன்களை புறக்கணிக்கும் சூழலை உருவாக்கியுள்ளன. இந்த நிலைமைக்கு மாற்றாக, இந்தியா ஒரு பன்முக சக்தி அமைப்பைக் கோருகிறது.

பிரிக்ஸ் நாடுகள் போட்ட மெகா ஸ்கெட்ச்.. அமெரிக்கா - ஐரோப்பாவின் ஆட்டம் இனி முடியப்போகுது..!!

அதாவது, உலகில் பல நாடுகள் சம அளவில் சக்தி பெற வேண்டும் என்றும் ஒரு சில நாடுகள் மட்டுமே உலகத்தை ஆளக்கூடாது என்பதே நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தை முன்னேற்ற BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) போன்ற கூட்டமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிக்ஸ் அமைப்பின் மூலமாக, மேற்கத்திய நாடுகளின் ஆளுமையை சமநிலையில் கொண்டு வரும் அமைப்பை உருவாக்க முடியும் என இந்தியா நம்புகிறது.

புதிய வர்த்தக வாய்ப்புகள் : இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்த, இந்தியாவுக்கு புதிய ஏற்றுமதி சந்தைகள் தேவைப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற மேற்கத்திய சந்தைகளில் இந்தியாவுக்கு பெரிதும் பொருளாதார சார்பு இருக்கிறது. எனவே, இதை குறைத்து, பல்வேறு நாடுகளுடன் சமநிலைப்பட்ட வர்த்தக உறவுகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இதற்கான முக்கிய வாயிலாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் செயல்படுகின்றன.

இந்த நாடுகளுடனான வர்த்தக ஒத்துழைப்பு, இந்திய பொருளாதாரத்தை மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து, ஒரு நிலையான வளர்ச்சிப் பாதையை உருவாக்க உதவுகிறது. அதாவது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீது அதிகமான சார்பில் இருந்து இந்தியா வெளிவர முடியும் என நம்புகிறது.

பிரிக்ஸ் மூலம் இந்தியாவுக்கு இயற்கை வள ஒப்பந்தங்கள் : ரஷ்யா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இயற்கை வளங்களில், குறிப்பாக எரிசக்தி, கச்சா பொருட்கள் மற்றும் கனிம வளங்களில் மிகுந்த வளம் வாய்ந்தவை. இந்நாடுகள் உலக சந்தையில் முக்கியமான மூலப்பொருள் ஏற்றுமதி நாடுகளாகத் திகழ்கின்றன. இந்த வளங்கள் இந்தியாவுக்கு தொடர்ந்து தேவைப்படும் முக்கியமான ஆதாரங்கள். இந்தியாவின் வேகமான வளர்ச்சிக்கும், உற்பத்தித் துறையின் விரிவாக்கத்திற்கும் இந்த வளங்களின் பங்கு மிக முக்கியம். எனவே, பிரிக்ஸ் அமைப்பின் மூலம் இந்தியா, இந்த மூலப்பொருள் வளங்களில் நீடித்த ஒப்பந்தங்களை உருவாக்க முடியும். இது சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்படாமல், ஒரு நிலையான மற்றும் நம்பகமான வள விநியோகங்களை உருவாக்க உதவும்.

பொருளாதார நிதி ஆதரவு : New Development Bank (NDB) என்பது BRICS நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பன்னாட்டு வளர்ச்சி வங்கி ஆகும். இதன் நோக்கமே பிரிக்ஸ் மற்றும் பிற வளர்ந்து வரும் நாடுகளுக்காக நிதி ஆதாரங்களை உருவாக்குவது தான். இந்த வங்கி இந்தியா போன்ற நாடுகளுக்கு தன்னிச்சையான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான நிதி உதவிகளை வழங்குகிறது. இந்த வங்கியின் மூலம், இந்தியா நிபந்தனைகளின்றி நிதி பெற முடிகிறது.

இந்தியா - சீனா பிரச்சனை : இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக அரசியல் மற்றும் எல்லை தொடர்பான பிரச்சனைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக ஹிமாலயப் பகுதியில் நடந்த சில மோதல்கள் மற்றும் நில உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருநாடுகளுக்கும் இடையே நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளது. எனவே, இந்த மோதல் போக்கை தவிர்த்து நடுநிலையாக செல்லும் வழிகளை தேடிவருகின்றன. இதற்கு பிரிக்ஸ் அமைப்பு பெரிதும் உதவுகிறது. இதன் மூலம், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் சிக்கல்களை சமாதான வழியில் பேசி, உரிய புரிதலை வளர்த்துக் கொள்வதற்கான சூழல் உருவாகிறது. இது இரு நாடுகளுக்கிடையே அமைதி உள்ளிட்ட ஒத்துழைப்பை உருவாக்க உதவுகிறது.

அமெரிக்கா - ஐரோப்பியாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் பிரிக்ஸ் : இன்றைய உலக வர்த்தகத்தில், பெரும்பாலான பரிவர்த்தனைகள் அமெரிக்க டாலரில் (US Dollar) தான் நடைபெறுகின்றன. எண்ணெய் வாணிபம் முதல் சர்வதேச கடன்கள் வரை டாலர் ஒரு முக்கிய நாணயமாக நிலவுகிறது. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு உலக பொருளாதாரத்தில் ஒரு சிறப்பு அதிகாரமும், அரசியல் செல்வாக்கும் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையை மாற்றும் நோக்கத்துடன் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை உள்ளூர் நாணயங்களில் மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம், டாலரின் மீது இருக்கும் சார்பை குறைக்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

மேலும் பிரிக்ஸ் நாடுகள் புதிய மற்றும் ஒரு பொதுவான சர்வதேச நாணயத்தை உருவாக்குவதற்கும் ஆர்வம் காட்டுகின்றன. இது டாலருக்கு மாற்றாக பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பிரிக்ஸ் நாடுகள் இன்று உலகத்தில் முக்கியமான எண்ணெய், உணவுப் பொருட்கள், மற்றும் இயற்கை வளங்களை பெரிய அளவில் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்கின்றன. இதன் மூலம், அவர்கள் உலக சந்தையில் அந்த பொருட்களின் விலை நிர்ணயத்தில் முக்கியமான பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுவரை இந்த விலை நிர்ணயங்களை மேற்கத்திய நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பா) தான் நிர்ணயித்து வந்தன. ஆனால் பிரிக்ஸ் நாடுகள் ஒன்றாகச் செயல்படுவதன் மூலம், அந்த மேற்கத்திய செல்வாக்கு குறைந்து வருகிறது. இதனால், புதிய பொருளாதார சமநிலை உலகளவில் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

அதேபோல் இணையம், செயற்கை நுண்ணறிவு (AI), digital payments போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகள் இதுவரை மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் சமீபத்தில், பிரிக்ஸ் நாடுகள் இத்துறைகளில் தாங்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்து, உள்ளூர் தீர்வுகளை உருவாக்க ஆரம்பித்துள்ளன. இந்த வளர்ச்சியின் மூலம், BRICS நாடுகள் மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்ப ஆதிக்கத்தில் இருந்து விடுபட முயற்சித்து வருகின்றன.

பிரிக்ஸ் என்பது நியாயமான மற்றும் பல்துறை அடிப்படையிலான உலக வர்த்தக அமைப்பை உருவாக்கும் நீண்டகால திட்டம் ஆகும். இந்த முயற்சி வெற்றியடைய உறுப்பினர் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு வேண்டும். நம்பகமான பொருளாதார அமைப்புகள் உருவாக வேண்டும். நிலைத்த வளர்ச்சி நடைமுறைப்பட வேண்டும். பிரிக்ஸ் வளர்ந்தால், உலக வர்த்தகம் ஒரு நாடு சார்பாக அல்லாமல், பல நாடுகளின் பங்களிப்பில் சமமாக நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+