சொந்த வீடு வாங்குற ஐடியாவே இல்லை.. ஜென்Z-க்களின் நியாமான முடிவு.. அலறும் 90'ஸ் கிட்ஸ்!

சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு ஆனால் இந்த கனவு ஜென்Z தலைமுறையினர் மத்தியில் காணாமல் போயுள்ளது. இது மாற்றமா அல்லது சூழ்நிலையா என்ற கேள்வி தான் தற்போது முக்கியமான விவாதமாக உள்ளது.

காரணம் முந்தைய தலைமுறையைக் காட்டிலும் ஜென்Zக்கள் முதலீட்டு, சேமிப்பு பற்றிய கூடுதலான புரிதலும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவைக் கொண்டு உள்ளனர்.

சொந்த வீடு வாங்குற ஐடியாவே இல்லை.. ஜென்Z-க்களின் நியாமான முடிவு.. அலறும் 90'ஸ் கிட்ஸ்!

இத்தகைய சூழ்நிலையில் அடுத்த 30 வருட இளமைக் கால வாழ்க்கையை ஒரு வீட்டுக்காகத் தியாகம் செய்ய ஜென்Z தலைமுறையினர் விரும்பவில்லை. இதற்கிடையில் வேலைவாய்ப்பு சந்தை பெரும் சுமையாக மாறி வருகிறது.

வேலைவாய்ப்பு சந்தையில் இருக்கும் சிக்கல்..

2005 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வருடத்திற்குச் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர், இதில் 28 லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.

இதேவேளையில் பணவீக்கம் அடிப்படையிலான சம்பள அளவீட்டைக் கணக்கிடும் போது 2012- 2024ஆம் ஆண்டு காலகட்டத்தில் 4 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கான பொருள் என்னவென்றால் பணவீக்கம் உயரும் அளவுக்குச் சம்பளம் உயரவில்லை என்பது தான்.

அடுத்தபடியாக ஏஐ மூலம் மாஸ் லேப்ஃஆப் எதிர்கொள்வது ஜென்Z தலைமுறையினர் தான் அதிகம் என்பதால் வேலைவாய்ப்பிலும் உறுதியான நிலை இல்லை. குறிப்பாக இந்திய மிடில் கிளாஸ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரியளவில் மேம்படுத்திய ஐடி துறையில் தான் தற்போது அதிக பணிநீக்கம், குறைந்த வேலைவாய்ப்பு உள்ளது.

இப்படியிருக்கையில் சொந்த வீடு போன்ற நீண்ட கால கடனை எப்படி ஜென்Z தலைமுறையினரால் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற நியமான கேள்வியை முன்வைக்கின்றனர்.

உண்மையான நிலை..

ஆனால், உண்மையில் ஜென்Z தலைமுறையினர் சொந்த வீடு வாங்குவது அர்த்தமற்றது எனக் கூறுவதற்கு மற்றொரு காரணம் உள்ளது. எந்தொரு நாடாக இருந்தாலும் மக்களின் சராசரி வருமானத்தைக் காட்டிலும் 3-5 மடங்கு அதிக விலையில் வீடுகள் விற்கப்பட்டால் affordable மார்கெட் என அழைக்கப்படும், 7-8 மடங்கு அதிகமாக இருந்தால் கூட நீண்ட கால அடிப்படையில் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கலாம் என நிலைப்பாடு இருக்கும்.

ஆனால் இந்தியாவில் தற்போது ரியல் எஸ்டேட் விலைகள் 11 மடங்கு அதிகமாக உள்ளது என டெல்லியை சேர்ந்த திங்க் டேங்க் அமைப்பான Centre for Social and Economic Progress (CSEP) தெரிவித்துள்ளது.

இதனால் பெரும் பகுதி மக்களின் வருமானத்திற்கு, சொந்த வீடு எட்டாகக் கனியாக உள்ளது. எனவே ஜென்Z தலைமுறையினர் திட்டமிட்டு சொந்த வீடு வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.

உதாரணமாக முந்தைய தலைமுறையினர் ஒரு பொருள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் அதை வாங்காமல் இருப்பது தான் புத்திசாலித்தனமாகக் கருதினர், ஆனால் ஜென்Z-க்களின் இந்த முடிவுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக ஜென்Z-க்கள் பார்க்கின்றனர்.

இதேபோல் ஜென்Z தலைமுறையினர் சொந்த வீடு என்பதை தங்களுடைய பெற்றோர் வாங்கிய அல்லது கட்டிய வீட்டின் வாயிலாகச் சொந்த வீட்டின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஜென்Z-க்கள் அவர்களுடைய லைப்ஸ்டைலை எவ்விதமான சலுகையும் இல்லாமல் அனுபவித்து வருகின்றனர்.

மறுபக்கம் ஜென்Z-க்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியைப் பங்குச்சந்தை, ஈடிஎப், நாணய சந்தை, வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு, தங்களுடைய திறனை மேம்படுத்திக்கொள்வதில் அதிகளவில் முதலீடு செய்வதையும் பார்க்க முடிகிறது.

அனைத்தையும் விட முக்கியமாக 300 ரூபாய்க்கு காஃபி குடிப்பது அதிகரித்துள்ளது, மதுபானம் அருந்துவது குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+