அண்மைக்காலமாக இந்தியாவில் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை தாண்டி டிராவல் இன்சூரன்ஸ் எனப்படும் பயணக் காப்பீடு என்ற ஒரு திட்டமும் இருக்கிறது. பயண காப்பீடு என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நாம் வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்ய திட்டமிடும் போது, அங்கே தங்குமிடங்கள், சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள், தளங்கள் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்தும் போது பயணக் காப்பீட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். மகிழ்ச்சியுடன் நாட்களை கழிப்பதற்காக நாம் வெளியூர் செல்லும்போது நமது உடைமைகள் காணாமல் போவது என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் நமக்கு பேருதவியாக இருப்பவை தான் பயணக் காப்பீடுகள்.

குறிப்பாக பயணத்தின் போது நாம் எடுத்துச் செல்லக்கூடிய பைகளின் இழப்பு, பாஸ்போர்ட் இழப்பு மற்றும் மருத்துவ அவசர நிலைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் உதவிக்கரம் நீட்டுகின்றன பயணக் காப்பீட்டு திட்டங்கள். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு கல்வி பயில செல்லும் மாணவர்கள் கூட இந்த பயணக் காப்பீட்டினை எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது.
குறிப்பிட்ட நாட்டில் தங்கி இருக்கும் காலத்தில் அவர்கள் பாஸ்போர்ட்டுகள் திருடு போனாலோ அல்லது இழந்துவிட்டாலோ , அவர்களது பொருட்கள் அல்லது உடைமைகளை இழந்துவிட்டாலோ அதனை மீட்டுத் தருவது மற்றும் அதனால் ஏற்படும் இழப்பீடுகளுக்கான தொகைகளை பெற்று தருவது என பல்வேறு நன்மைகளை பயண காப்பீடுகள் வழங்குகின்றன. பயண காப்பீடுகளின் முக்கியமான நன்மை மருத்துவ செலவுகள். நாம் வெளிநாட்டில் இருக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கிக் கொள்கிறோம் அல்லது நமக்கு ஏதேனும் ஒரு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது என்ற சமயங்களில் பயண காப்பீட்டு தொகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பயண காப்பீட்டை தேர்வு செய்யும் போது, நீங்கள் செல்லும் வெளிநாட்டின் செலவுகளுக்கு ஏற்றதாக காப்பீடு தொகையை தேர்வு செய்ய வேண்டும், உங்களது பயண காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பயண காப்பீட்டு திட்டத்தில் எதற்கெல்லாம் காப்பீடு கிடைக்கிறது என்பதை ஒரு முறை கவனமாக பார்க்க வேண்டும். விமானங்கள் ரத்த , முக்கிய ஆவணங்கள் காணாமல் போவது, மருத்துவ செலவுகள் உள்ளிட்டவற்றை கொண்ட காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் விலை உயர்ந்த நகைகள், லேப்டாப் போன்ற சாதனங்களை கொண்டு சென்றால் அதற்கும் காப்பீடு கிடைக்கிறதா என்பதை கவனிப்பது முக்கியம்.
பயண காப்பீடுகளில் எந்தெந்த மருத்துவ அவசர நிலைகளுக்கு காப்பீடு கிடைக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் சில திட்டங்கள் ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கு காப்பீடு வழங்காமல் போகலாம். எனவே அவற்றை சரி பார்த்துக் கொள்வது நல்லது. காப்பீட்டினை வாங்கும் போது அதில் இருக்கக்கூடிய நிபந்தனைகளை தெளிவாக படித்துக் கொள்ள வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் வழங்கக்கூடிய பயணக் காப்பீடுகளை ஒப்பிட்டுப் பார்த்து அதில் உங்களது பட்ஜெட்டிற்கு பொருந்தக்கூடிய ஒரு திட்டத்தை தேர்வு செய்வது சிறந்தது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications