எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு ஏற்கனவே சர்வதேச அளவில் விற்பனை சரிந்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய சந்தையில் நம்பிக்கையுடன் கால் பதிக்க இருக்கிறது டெஸ்லா.
கூடிய விரைவில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. மும்பையில் தன்னுடைய மின்சார விற்பனை நிலையத்தை டெஸ்லா நிறுவனம் தொடங்க இருக்கிறது. அது மட்டும் இன்றி இந்தியாவில் தன்னுடைய உற்பத்தி ஆலையும் நிறுவ இருக்கிறது.

ஆனால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருகை தரும் போது ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் மின்சார கார் விற்பனை நிறுவனங்களோடு போட்டி போட வேண்டும் என்பதோடு மட்டும் இல்லாமல் உலக அளவில் அதற்கு போட்டியாக இருக்கும் பிஒய்டி நிறுவனமும் அதற்கு பெரிய சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. பிஒய்டி தவிர இந்தியாவில் மகேந்திரா, டாடா , ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மின்சார கார்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும் இந்தியாவில் டெஸ்லாவுக்கு பிஒய்டி இன்னும் சவாலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க இருப்பதால் இறக்குமதி செய்து விற்பனை என்ற தன்னுடைய கொள்கையை மாற்றி இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை என்ற நிலைப்பாட்டுக்கு பிஒய்டி நிறுவனம் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் இதன் உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
சர்வதேச அளவில் பிஒய்டி நிறுவனத்தின் மலிவு விலை கார்களால் டெஸ்லாவின் விற்பனை பாதிக்கப்பட்டுவிட்டது. தற்போது இந்தியாவிலும் அது பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் என சொல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் விற்பனை 49 சதவீதம் சரிவடைந்த நிலையில் பிஒய்டி நிறுவனத்தின் மின்சாரக்காரர்கள் விற்பனை 90 சதவீதம் என உயர்வு கண்டது.
அந்த வகையில் உலகிலேயே அதிகளவு மின்சார கார்களை விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமை பிஒய்டிக்கு கிடைத்திருக்கிறது. ஐரோப்பிய சந்தைகளையும் இது பிடித்து விட்டது . இந்தியாவில் தற்போது இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தாங்கள் வாங்க கூடிய பொருளின் விலை அதன் தரம் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதால் டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் மின்சாரக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களோடு மட்டுமில்லாமல் சீனாவின் பிஒய்டி உடன் கடுமையாக போட்டி போட வேண்டியது இருக்கும்.
பிஒய்டி ஒருவேளை இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவி விட்டால் இன்னும் தங்களுடைய கார்களின் விலையை குறைத்த விற்பனை செய்வதற்கு வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் இந்த பெரு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி வாடிக்கையாளர்களான நமக்கு தரமான மற்றும் சரியான விலையில் கார்களை விற்பனைக்கு கொண்டு வர உதவினால் நன்றுதான்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications