சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சென்னை அருகில் பரந்தூரில் அமைய உள்ள 2வது விமான நிலையம் மிகவும் முக்கியமானதாக விளங்க உள்ளது. சென்னை மாநகரம் ஐடி முதல் உற்பத்தித் துறை வரையில் பின்டெக், டீப்டெக், எலக்ட்ரானிக்ஸ் என அனைத்து பிரிவிலும் முதலீட்டை ஈர்த்து வரும் வேளையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தப் பெரிய அளவிலான விமான நிலையம் தேவை. குறிப்பாக வெளிநாடுகளை இணைக்கும் விமானச் சேவைகள் அவசியமானதாக உள்ளது.
முத்தமிழ் கலைஞர் கருணாநிதி: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி 2007-ம் ஆண்டு சென்னைக்கு அருகாமையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என முதன்முதலாக அறிவித்தார். அதன் பின்னர் 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் படலம், திருப்போரூர், பண்ணூர் மற்றும் பரந்தூர் ஆகிய நான்கு இடங்கள் விமான நிலையத்திற்கான இடமாகத் தேர்வு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர், பரந்தூர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையம்: சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது 400-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரிய விமானங்கள் மற்றும் இரண்டு தளமுள்ள விமானங்களைக் கையாளும் திறன் இல்லாததால் புதிய விமான நிலையம் அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய பிரச்சனை: மேலும், பெரிய விமானங்களை நிறுத்தும் வசதியான ஏர்பிரிட்ஜ்கள் இல்லாததால் பல சர்வதேச விமான சேவைகள் சென்னையைத் தவிர்த்து பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களைத் தேர்வு செய்து நேரடி சேவைகளை வழங்கி வருகிறது.
உள்நாட்டு விமானச் சேவை ஆதிக்கம்: சென்னை விமான நிலையத்தில் மாதம் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கொண்டு, நாட்டின் விமான பயணிகள் போக்குவரத்து அடிப்படையில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் நான்கு முனையங்கள் உள்ளன. மொத்த போக்குவரத்தில் 72 சதவீதம் உள்நாட்டு, 22 சதவீதம் சர்வதேச மற்றும் 6 சதவீதம் சரக்கு போக்குவரத்து என்பதால் சென்னை விமான நிலையம் உள்நாட்டு விமானச் சேவை மையமாக உள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல்: பரந்தூரில் அமையவுள்ள இரண்டாவது விமான நிலையத்திற்கு இப்பகுதியில் இருக்கும் உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதி மாநில அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று, பரந்தூரில் கிரீன்பீல்ட் விமான நிலையம் அமைக்கும் இடத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.
2 ஆண்டு போராட்டம்: தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரந்தூரை விமான நிலையத்திற்கான இடமாகத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசின் இந்த அனுமதி கிடைத்துள்ளது. மொத்தம் 2011.3 ஹெக்டேர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது.
மாபெரும் முதலீடு: சென்னைக்கு சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள இந்த விமான நிலையத்திற்கு ரூ.32,704 கோடி செலவு என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10 கோடி விமான பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நிரம்பி வழியும் நிலையில், புதிய விமான நிலையம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என திமுக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 2172.73 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
நில விபரம்: இதனால் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு தாலுகாக்களில் உள்ள 13 கிராமங்கள் நேரடியாக பாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் (TIDCO) அறிக்கையின்படி, கையகப்படுத்தப்பட உள்ள மொத்த நிலத்தில் 47.46 சதவீதம் விவசாய நிலமாகவும், 26.54 சதவீதம் நீர் நிலைகளாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
முக்கிய உள்கட்டமைப்புகள்: இதன் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் இரட்டை விமான நிலையமாக இயங்கும். பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்தில் இரட்டை ஓடுபாதை, டாக்சிவே, ஏப்ரான் மற்றும் தனிமைப்படுத்தும் பகுதி ஆகியவை அமைக்கப்படும். விமான நிலையத்தின் முழு திறனை அடைய நான்கு கட்டங்களாக 2029 மற்றும் 2047 காலகட்டத்தில் மாஸ்டர் பிளான் செயல்படுத்தப்படும். விமான நிலையத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அமைப்பாக TIDCO நியமிக்கப்பட்டுள்ளது.
எளிமைப்படுத்தப்படும் போக்குவரத்து: பெங்களூர் விமான நிலையத்திற்கு செல்வோரும் சந்திக்கும் பிரச்சனைகளை, பரந்தூர் விமான பணிகள் சந்திக்க கூடாது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு புதிய விமான நிலையத்துடன் புதிய ஆறு வழி சாலை, சென்னை மெட்ரோ ரயில் பரந்தூர் வரை நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளையும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications