சென்னை: இந்தியா சீனா இரண்டு நாடுகளுமே போட்டி போட்டுக் கொண்டு ஆசிய பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத சக்திகளாக உருவாகி இருக்கின்றன. 1990 களில் இந்தியாவும் சீனாவும் தங்களுடைய பொருளாதாரத்தை உலகமயமாக்கின. ஆனால் வளர்ச்சி என பார்க்கும்போது இந்தியாவை விட சீனாவின் வளர்ச்சி சற்றே அதிகமாக தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது.
சீனா ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்ட ஒரு நாடு, ஆனால் இந்தியா ஜனநாயக ரீதியிலான ஒரு நாடு. எனவே ஆட்சி மாற்றம் கொள்கை மாற்றம் இங்கே தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் சீனாவில் அப்படி இல்லை.

1990க்கு பிறகு சீனா உலகின் தொழிற்சாலையாக மாறியது. பொம்மை, மின்னணு சாதனங்கள், மின்சார கார்கள் மற்றும் செமி கண்டக்டர்கள் என சீனாவின் கவனம் உற்பத்தியில் தான் இருந்தது. ஆனால் இந்தியா என பார்க்கும்போது ஐடி உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பெரிய வளர்ச்சியை கண்டது. ஆனால் இந்த இரண்டுக்குமே அடிப்படையாக இருப்பது கல்விதான்.
இந்த கல்வி தான் இரண்டு நாடுகளின் வளர்ச்சியை தீர்மானித்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். நிதின் குமார் பாரதி மற்றும் லி யாங் ஆகிய இருவரும் இணைந்து Making of China and India in 21st Century என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
1900களில் இந்தியாவில் கல்வி அறிவு எப்படி இருந்தது, சீனாவில் கல்வி அறிவு எப்படி இருந்தது எந்த துறை சார்ந்த கல்விக்கு இந்தியாவும் சீனாவும் கவனம் கொடுத்தன என்பது குறித்த விரிவான தகவல் அதில் இடம் பெற்று இருக்கிறது.
அதில் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தின் போது சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மாணவர்களின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகமாக இருந்ததாம். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவில் ஆட்சியில் இருந்த கிங் அரச வம்ச மக்களுக்கு ராணுவத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் தேவை என நினைத்தது.
எனவே தொழில் சார்ந்த திறன்கள் மக்களுக்கு வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி அது தொடர்பான கல்வியை அவர்களுக்கு வழங்கியது .அதே சமயத்தில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது அப்போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் உருவாவதை விரும்பவில்லை.
மாறாக அவர்கள் இந்தியர்கள் ஒரு கிளர்க் மற்றும் ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டர் போன்ற பணிகளில் அமரும் வகையிலான ஒரு கல்வி முறையை இந்தியாவில் அறிமுகம் செய்து மக்கள் மீது திணித்தனர்.
எனவே மக்கள் படிப்போம் படித்து முடித்து அரசு வேலைக்கு செல்வோம், கல்வி என்பது வேலைக்கு செல்வதற்கான ஒரு கருவி என்ற அளவிலேயே நின்றுவிட்டது. ஆனால் சீனாவில் கல்வி என்பது தொழில்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஆனது என்ற அடிப்படையில் கற்பிக்கப்பட்டதாம்.
இதுதான் இந்தியாவை விட சீனாவின் வளர்ச்சி அதிகமாக இருப்பதற்கு காரணம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். குறிப்பாக கல்லூரி அளவில் பார்க்கும்போது இந்தியாவில் சமூக அறிவியல் சார்ந்த கல்வியைப் படித்தவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் மேல் இருக்கிறது. அதுவே சீனாவில் அதை வெறும் 25% தான். அதற்கு நிகரான அளவில் பொறியியல், வேளாண்மை பிரிவுகளில் சீனர்கள் பட்டப்படிப்பை முடித்தனர்.
இந்தியாவில் பெரும்பாலானவர்கள் சமூக அறிவியல் சார்ந்த பிரிவுகளில் பட்டப் படிப்பை படித்திருந்த நேரத்தில் சீனாவோ தங்களுடைய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களை ஆசிரியர்கள் , விஞ்ஞானிகள் ,பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் வேளாண் நிபுணர்கள் என்ற படிப்புகளை நோக்கி அழைத்து சென்றது.
உற்பத்தி துறையில் சீனா அசைக்க முடியாத சக்தியாக இருப்பதற்கு அந்த நாட்டு அரசு மக்களுக்கு அடிப்படை கல்வி அறிவோடு தொழில் ரீதியான திறன்களையும் வழங்கியதே காரணம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications