அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும், உலகின் மிகப்பெரிய வங்கி நிறுவனங்களில் ஒன்றான சிட்டிகுருப் இந்தியா உட்படச் சுமார் 13 நாடுகளில் செய்து வரும் ரீடைல் வங்கியியல் சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது வெளிநாட்டு வங்கிகளுக்கு வர்த்தகம் விரிவாக்கம் செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உருவாகியுள்ளது போதும், ஸ்டாண்டர்டு சார்ட்டட், டாய்ச் வங்கி, HSBC வங்கிகளைத் தொடர்ந்து தற்போது சிட்டிகுரூரப் வங்கிகளும் தனது வர்த்தகத்தை மூடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறுகிறது.
வெளிநாட்டு வங்கிகள்
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு வங்கிகளில் மிகவும் பழமையான வங்கியாகத் திகழும் சிட்டி குரூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகி இனி வெல்த் மேனேஜ்மென்ட் சேவையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
சிட்டிகுரூப் உறுதியான முடிவு
இந்நிலையில் இந்தியாவில் தனது வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களை வேறு வங்கி அல்லது நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஏற்கனவே முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையில் இந்த மாற்றம் முழுமையாக நிறைவடையும் வரையில், புதிதாக எந்த ஊழியர்களையும் இந்திய வர்த்தகத்தில் சேர்க்கவோ, அல்லது ஏற்கனவே இருக்கும் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கவோ இல்லை.
புதிய சீஇஓ-வின் முடிவு
சிட்டி குரூப் மார்ச் மாதத்தில் நியமித்த புதிய சீஇஓவான ஜேன் ப்ராசர் கூறுகையில், ரீடைல் வங்கி சேவையில் சந்தையில் இருக்கும் பிற வங்கிகளுக்கு இணையாகப் போட்டிப்போடும் அளவிற்கான வடிவம் இல்லாத காரணத்தால் வளர்ச்சி வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவில் வளர்ச்சியை இரட்டிப்பு செய்யும் வகையில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக 13 நாடுகளில் இருக்கும் சர்வதேச நுகர்வோர் சேவை பிரிவில் இருந்து விலக நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கியியல் விதிமுறைகள்
இந்திய வங்கியியல் விதிமுறைகள் தற்போது வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் இருக்கும் வங்கிகளைக் கைபற்றி அதன் மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். இதன் மூலம் கிளை வங்கிகளாக மட்டும் அல்லாமல் முழுமையான வங்கியாகச் செயல்பட முடியும்.
சிங்கப்பூர் DBS வங்கி
சமீபத்தில் கூடச் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த DBS வங்கி இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நிர்வாக நெருக்கடியில் சிக்கியிருந்த லட்சுமி விலாஸ் வங்கியை ரிசர்வ் வங்கி ஒப்புதலுக்குப் பின்பு கைப்பற்றியது.
2008 சர்வதேச நிதியியல் நெருக்கடி
இந்தியாவில் சிட்டிபேங்க் 2000 ஆண்டுகளில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்த நிலையில் 2008 சர்வதேச நிதியியல் நெருக்கடியின் போது அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் வர்த்தக விரிவாக்கத்தை அன்று நிறுத்தியது.
4 நாடுகளில் மட்டும் இனி வர்த்தகம்
இதன் மூலம் சீனா, இந்தியா உட்பட 13 மாநாடுகளில் ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகும் சிட்டிகுரூப் இனி சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன், ஐக்கிய அரபு நாடுகளில் மட்டுமே இப்பிரிவில் சேவை அளிக்க உள்ளது.
இந்தியாவை விட்டு வெளியேறும் வங்கிகள்
இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு வங்கிகள் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விட்டு வெளியேறி வருகிறது. தற்போது சிட்டிகுரூப் ரீடைல் வங்கி சேவையில் இருந்து வெளியேறுவது போல், சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாண்டர்டு சார்ட்டட் தனது சொத்து மேலாண்மை நிறுவனத்தையும் விற்பனை செய்துவிட்டு, பங்குச்சந்தை வர்த்தகத்தை முழுமையாக மூடியது.
இரு முக்கிய வங்கிகள்
இதைத் தொடர்ந்து டாய்ச் வங்கி தனது கிரெடிட் கார்ட் வர்த்தகத்தை இண்டஸ்இந்த் வங்கிக்கு விற்பனை செய்தது, HSBC தனது தனியார் வங்கி சேவை மற்றும் சில வங்கி கிளையும் மூடியது குறிப்பிடத்தக்கது.
இதுதான் காரணம்..?!
சிட்டி குரூப்-கிற்கு ரீடைல் வங்கி சேவைகளை விடவும் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் டிரேடிங் வர்த்தகத்தில் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமானம் கிடைக்கும் காரணத்தால் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 13 சந்தைகளில் இருந்து ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகுகிறது.
More From GoodReturns

வங்கி வேலைகளிலும் கை வைக்கும் ஏஐ..!! முதல் கட்டமாக 20,000 பேரின் வேலை காலி..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications