ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டிற்கு வழங்கிய அரசு பணி ரத்து: விமர்சனங்கள் எழுந்ததால் விஜய் நடவடிக்கை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு அறிவிப்பும் எதிர்க்கட்சிகளாலும் கோடிக்கணக்கான மக்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

முதலமைச்சராக பதவியேற்ற விஜய், தனது அரசின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நியமித்தார். இவர் பிரபல ஜோதிடர், விஜய்க்கு நெருக்கமானவரும் கூட. இவருக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியில் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு அரசின் சிறப்பு பணி அதிகாரி பதவியை வழங்கியது விஜய் அரசு. இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டிருந்தார்.

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்டிற்கு வழங்கிய அரசு பணி ரத்து: விமர்சனங்கள் எழுந்ததால் விஜய் நடவடிக்கை

ஜோதிடராக இருந்தவருக்கு அரசு பதவியா என்ற சர்ச்சை கிளம்பியது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் பலரும் விஜயின் செயலை விமர்சனம் செய்தனர். ஜோதிடர் எப்படி அரசியல் ஆலோசனைகள் வழங்குவார் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் கூட கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. விசிக, தேமுதிக, மஜக கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஜோதிடருக்கு அரசு பதவியா என கண்டனம் தெரிவித்தனர்.

Also Read

இந்த நிலையில், எதிர்க்கட்சியினர் கருத்துகள் பரிசீலனை செய்யப்படும் என சட்டப்பேரவையிலேயே முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து கையோடு முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. ஆதரவு மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 24 மணி நேரத்துக்குள் நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Recommended For You

முன்னதாக இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஆர்.ரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எந்த விதிகளையும் பின்பற்றாமல், அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் இந்த நியமனத்தை செய்திருப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அரசே அவரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் இதற்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் ஆலோசகராக இருந்ததாக சொல்லப்படுகிறது. விஜய்யுடன் 7 ஆண்டுகளாக நெருக்கமாக இருக்கும் இவர் ஜோதிட ரீதியாக அவர் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+