சென்னை: இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் தேங்காய் எண்ணெய் முக்கிய அங்கம் வகிக்கிறது. கேச பராமரிப்பு, சரும பராமரிப்பு மட்டுமில்லாமல் நம்முடைய, சமையலிலும் தேங்காய் எண்ணெயை பரவலாக பயன்படுத்துகிறோம். குறிப்பாக தென்னிந்திய மாநிலமான கேரளாவில் தேங்காய் எண்ணெயில் தான் மொத்த சமையலுமே நடக்கிறது.
இதேவேளையில் தேங்காய் எண்ணெய் தயாரித்து விற்பதும், இதற்கான டிமாண்டும் நாளுக்கு நாள் அதிகரத்து வரும் காரணத்தால் தென்னை மர வளர்ப்பு முக்கியமான வர்த்தகமாகவும் மாறி வருகிறது.
தேங்காய் எண்ணெய்: கடந்த ஓராண்டு காலத்தில் தேங்காய் எண்ணெயின் விலை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, இது தற்போது 500 ரூபாய் என விலை உயர்வு கண்டிருக்கிறது.ஓரே வருடத்தில் தேங்காய் எண்ணெய் விலை சுமார் 210 சதவீதம் உயர்ந்துள்ளது, தங்கம் கூட 20 சதவீதம் அளவில் தான் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

உயரும் விலை: தேங்காய் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் நுகர்வு இந்திய அளவிலும் உலக அளவிலும் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு ஏற்ற தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பது தான் கேள்வி. ஃபின்ஷாட்ஸ் தளம் வெளியிட்டுள்ள தரவில் இந்தியாவில் ஓராண்டுக்கு சராசரியாக ஒரு நபர் தேங்காய் எண்ணெய், தேங்காய், சரும பராமரிப்பு பொருட்கள், திண்பண்டங்கள் என பல வழிகளில் 14 முதல் 15 தேங்காய் வரை பயன்படுத்துகிறாராம்.
முக்கிய அங்கம் வகிக்கும் தேங்காய்: நம்முடைய கோயில்களிலும் பூஜைகளிலும் முக்கியமாக தேங்காயை பயன்படுத்துகிறோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது இயற்கையானது என்பதால் காஸ்மெட்டிக் துறையில் தேங்காயின் பயன்பாடு மிக முக்கியமானதாக இருக்கிறது. கேரள ஆயுர்வேத துறையே தேங்காய் எண்ணெய்யை தான் பெருமளவில் நம்பி இருக்கிறது.

வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி: எனவே தேங்காய் மற்றும் தேங்காயிலிருந்து உருவாக்கக்கூடிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான சந்தை இந்தியாவில் மிகப்பெரியது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கு தேவையான கணிசமான அளவு தேங்காய் எண்ணெயை இந்தியா தான் ஏற்றுமதி செய்கிறது .அமெரிக்கா, ஐரோப்பா ,மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேவையான தேங்காய் எண்ணெய் இந்தியாவில் இருந்து தான் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சரும பராமரிப்புக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களும் ஆயுர்வேத மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து இவற்றை கொள்முதல் செய்கின்றன.
ஏன் தேங்காய் உற்பத்தி சரிவு: பருவநிலை மாற்றம் காரணமாக பருவம் தவறி மழை பெய்வது, வறட்சி , எல் நினோ, லா நினோ பாதிப்புகள் என புவி வெப்பமயமாதலால் ஏற்படக் கூடிய பல விஷயங்கள் தேங்காய் உற்பத்தியை பாதிக்கின்றன. அதிக வெப்பத்தால் சத்தான தேங்காய் உற்பத்தியாவது குறைந்துள்ளது, அது தவிர பூச்சி தாக்குதல்களும் உற்பத்தியை தடுக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து இந்தியாவில் தேங்காய் உற்பத்தியை குறைத்துவிட்டன.
இளநீர் விற்பனையில் லாபம்: டிமாண்ட் அதிகம் சப்ளை குறைவு என்பதே இந்த விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளது. இது தவிர விவசாயிகள் இளநீராகவே தேங்காயை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கிறது என்பதால் தேங்காயை கொப்பறையாக்காமல் இளநீராகவே விற்பனை செய்கிறார்களாம். எனவே தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்கு தேவையான கொப்பரை தேங்காய் போதிய அளவு கிடைப்பதில்லை.

தேங்காய் தட்டுப்பாடு: இந்தியாவில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்க்கு 30லிருந்து 35 சதவீதம் வரை தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் தேங்காய் எண்ணெயின் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது .இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து தேங்காய் மற்றும் தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை இருக்கிறது . இந்தியாவிலேயே பெரியளவு தேங்காய் உற்பத்தி செய்யப்படுவதால் வெளிநாட்டினருக்க அனுமதி கொடுத்தால் அது உள்நாட்டு விவசாயிகளை பாதிக்கும் என கருதி தான் அரசு இந்த தடையை அமல்படுத்தியிருக்கிறது.
தேங்காய் இறக்குமதி:இந்தியாவை சேர்ந்த சமையல் எண்ணெய் உற்பத்தி கூட்டமைப்பு அரசு அடுத்த 6 மாதங்களுக்காவது தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லை என்றால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு விலை இன்னும் உயரும் என கூறுகின்றனர். கேரளாவில் கடைகளில் தேங்காய் எண்ணெய் பாட்டில்கள் திருடப்படும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

கேரளாவில் நிலைமை மோசம்: தென்னை விவசாயிகள் மரங்களுக்கும், தேங்காய் கிடங்குகளுக்கும் 24 மணி நேரமும் கண்காணிப்புக்கு ஆள் போடும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. கேரள மக்களின் அடையாளமாக தேங்காய் எண்ணெய் இருக்கிறது. அங்கே ஒரு கிலோ தேங்காய் விலை 80 லிருந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் எண்ணெய் விலை ஒரு லிட்டர் 500 ரூபாயில் இருந்து 600 ரூபாய் என விற்கப்படுகிறது.
ஆயுர்வேத துறைக்கு பாதிப்பு: கேரள ஆயுர்வேத துறை 4000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இந்த துறைக்கு அடிப்படையே தேங்காய் எண்ணெய் தான். கேரள ஆயுர்வேத துறைக்கு மட்டும் ஓராண்டுக்கு 12,000 டன்கள் தேங்காய் எண்ணெய் தேவைப்படுகிறது . தேங்காய் எண்ணெய் விலை உயர்வு இந்த துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் என்ன சிக்கல்: இந்தியாவில் ஓராண்டுக்கு 5.5 லட்சம் டன்கள் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது இதில் 3 லட்சம் தேங்காய் எண்ணெய் கேரளாவில் தான் நுகரப்படுகிறது. இதுவே கேரளாவில் தேங்காய் எண்ணெய் விலை உயர்வு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு எடுத்துகாட்டாக இருக்கிறது.
அரசு நடவடிக்கை: ஓனம் பண்டிகை வர இருப்பதால் கேரளாவில் தேங்காய் எண்ணெய் டிமாண்ட் அதிகரிக்கும் , இதனால் பெரிய பிரச்சினை ஏற்படும் என்பதால் கேரள அரசு ரேஷன் கடை வாயிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications