வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுத்து முதலீடு செய்ய தயாராக இருப்பதால் இந்தியாவில் இருக்கும் சாதாரண மக்களால் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்ய முடியவில்லை, சொத்துக்களை வாங்க முடியவில்லை என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.
ஆனால் உண்மை அது இல்லை என்கிறார் பிரபல நிதி ஆலோசகரான அக்சத் ஸ்ரீவாஸ்தவா, நிதி சார்ந்தும் நிதி மேலாண்மை , முதலீடுகள் சார்ந்தும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதி வருபவர். அந்த வகையில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் ஏன் அதிக சொத்துக்களை வாங்க முடிகிறது இந்தியாவில் வசிப்பவர்களால் ஏன் வாங்க முடிவதில்லை என்பதை விவரமாக பதிவிட்டு இருக்கிறார்.

சாமானியர்களால் சொத்து வாங்க முடியாமல் இருப்பதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் காரணமல்ல இங்கே சம்பளம் குறைவாக இருப்பதே காரணம் என குறிப்பிடுகிறார். சாதாரண மக்கள் இந்தியாவில் சொத்துகளின் மதிப்பு உயர்வதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களே காரணம் எனக் கூறுகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது நான் கோவாவில் வசிக்கிறேன் இங்கே எங்கு பார்த்தாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்துக்களை வாங்குகின்றனர் என கூறுகின்றனர்.
இந்தியாவில் குரூப் ஏ பிரிவில் அதிகாரியாக இருப்பவரின் மாதாந்திர சராசரி சம்பளம் 1.5 லட்சம் ரூபாய், இதில் 30 சதவீதம் தொகை அவர் சேமிக்கிறார் எனும் போது ஒரு ஆண்டில் அவர் 5.4 லட்சம் ரூபாயை சேமிப்பார் 30 ஆண்டுகளில் அவர் 1.6 கோடி ரூபாயை சேமித்து வைத்திருப்பார். ஆனால் இதை வைத்து அவர்களால் கோவாவில் ஒரு வீட்டைக் கூட வாங்க முடியாது. ஏனெனில் இந்தியாவில் சம்பளம் குறைவாக இருக்கிறது , அதை வைத்து நம்முடைய அன்றாட செலவினங்களையும் பார்த்துக் கொண்டு சொத்துக்களிலும் முதலீடு செய்ய முடிவதில்லை, நாம் சோசியலிச நாடாக மாறி வருவதே இதற்குக் காரணம் என அவர் கூறியிருக்கிறார்.
அக்சத் ஸ்ரீவாஸ்தவா, இந்தியாவில் சம்பளம் ஏன் குறைவாக இருக்கிறது என்றால் அது யாருடைய தவறு என நினைக்கிறீர்கள்?, அது நம்முடைய தவறு தான், இந்தியாவில் அதிக சம்பளம் தரக்கூடிய வேலைகளை நம்மால் ஈர்க்க முடியவில்லை என கூறியுள்ளார். அக்சத் ஸ்ரீவாஸ்தவா இந்தியாவில் தான் அதிக வருமான வரி விதிக்கப்படுகிறது, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படுகின்றன , இதனால் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் பலரும் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு குடி பெயர்கின்றனர் என தொடர்ந்து கூறி வருகிறார்.


Click it and Unblock the Notifications