இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்தே விவசாயம், தொழில்துறையினர் தங்களின் ஊழியர்களுக்கு வருடம் ஒரு முறை பண்டிகை காலத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகக் கூடுதல் சம்பளத்தை இனாமாக அளிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.
பண்டிகை காலத்தில் அளிக்கப்படும் இந்தக் கூடுதல் சம்பளம் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு காலகட்டத்தில் அதாவது பிராந்திய பண்டிகைக்கு ஏற்ப கொடுக்கப்பட்டு வந்தது. உதாரணமாகப் பொங்கல், தசரா போன்ற பண்டிகை காலகட்டத்தில் ஊருக்கு ஏற்ப இந்தப் போனஸ் தொகை வழங்கப்பட்டது.

இந்தப் போனஸ் தொகை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரையில் இந்தியாவில் நிறுவனங்கள், அமைப்புகள், தொழிற்சாலைகள் என அனைத்து தரப்பினரும் தங்கள் ஊழியர்களுக்கு வார சம்பளமாகத் தான் அளித்து வந்தது. அப்போது இந்தியா முழுவதும் பரவலாக இருந்த டெக்ஸ்டைல் மில் மற்றும் மாவு மில்-களில் தொழிலாளர்களுக்கு வார சம்பள அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்பட்டது.
இதனால் அனைத்து ஊழியர்களுக்கும் வருடத்தில் 52 வாரமும் சம்பளம் அளிக்கப்பட்டு வந்தது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு வந்த பின்பு அனைத்துத் துறை, தொழில்களுக்கும் மாதம் சம்பளம் அளிக்கும் முறைக்கு வந்தது. இதோடு வருடத்தில் அளிக்கப்படும் பல்வேறு விடுமுறைகளைக் கணக்கில் கொண்டால் 48 வாரம் மட்டுமே சம்பளம் அளிக்கப்படும் நிலை உருவானது.
இது ஆங்கிலேயர் ஆட்சியில் பணத்தை மிச்சப்படுத்தப் பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையில்லை. இதை அப்படியே நடைமுறைப்படுத்த முயன்ற ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்தி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தினர். இதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கத் துவங்கியது.
அதாவது 52 வாரம் என்றால் 13 மாதம் சம்பளம் கிடைக்கும், இதுவே 48 வாரம் என்றால் 12 மாதம் சம்பளம் மட்டுமே கிடைக்கும். இதனால் ஒரு மாதம் சம்பளத்தைச் சாமானிய ஊழியர்கள் இழக்கும் நிலை உருவானது. 1930-1940 வரையில் மகாராஷ்டிரா முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதற்காகப் போராட்டம் நடந்தது.
பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின்பு ஒவ்வொரு மாதம் என 12 மாதத்திற்குச் சம்பளமும் 13 வது மாத சம்பளத்தைத் தீபாவளிக்கு அளிக்கப்படும் என 1940 ஜூன் மாதம் சட்டத்தை இயற்றியது. இந்த 13வது சம்பளம் தான் பின்னாளில் தீபாவளி போன்ஸ் ஆக மாறி இன்று வரையில் நடைமுறையில் உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்ப் பலர் தொழிலாளர்கள் 1940ல் இயற்றப்பட்ட பழைய விதிகளைப் பின்பற்றாமல் ஊழியர்களுக்கு இந்த 13வது மாத சம்பளம் அதாவது போனஸ் தொகையை அளிக்காமல் ஊழியர்களை ஏமாற்றினர்.
இதைச் சரி செய்ய இந்திய அரசு அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குமுறை நடவடிக்கையில் உட்படுத்தி, முதலாளிகள் தங்கள் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைப் போனஸாக ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது.
இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையை Payment of Bonus Act, 1965 என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி, நிறுவனம் தனது ஊழியர்களுக்குப் போனஸ் குறைந்தபட்ச விகிதமான 8.33% மற்றும் அதிகபட்ச விகிதம் 20% இல் செலுத்தப்பட வேண்டும்.
ஒரு நிறுவனத்தில் ஒருவர் வருடத்தில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து 10,000/- அல்லது அதற்குக் கீழ் சம்பளம் பெற்று இருந்தால் Payment of Bonus Act, 1965 சட்டத்தின் கீழ் போனஸ் பெற உரிமை உண்டு. இந்தப் போனஸ் அதிகபட்சமாக 3,500 ரூபாயாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications