கண்ணை மூடிக்கொண்டு பங்குகளை விற்பனை செய்யும் நிறுவன உரிமையாளர்கள்.. என்ன நடக்குது..?!

கடந்த இரண்டு மாதங்களில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ப்ரோமோட்டர்கள் அதாவது உரிமையாளர்கள் தங்களின் பங்கு இருப்பை பொது சந்தையில் விற்பனை செய்து சுமார் 33,000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டியுள்ளனர்.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் தங்களது பங்கு இருப்பை விற்பனை செய்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. முக்கியமான வர்த்தக விரிவாக்கத்திற்கும், நிறுவனத்தைச் சரிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற முக்கியமான காலகட்டத்தில் தான் ப்ரோமோட்டர்கள் பங்குகளை விற்பனை செய்வார்கள்.

கண்ணை மூடிக்கொண்டு பங்குகளை விற்பனை செய்யும் நிறுவன உரிமையாளர்கள்.. என்ன நடக்குது..?!

ஆனால் தற்போது பங்குச் சந்தையில் நிறுவனங்களின் மதிப்பீடுகள் (Valuations) மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால், இத்தகையை மதிப்பீடுகளை மீண்டும் அடைவது அபூர்வம் என்பதை தெரிந்துகொண்டு நிறுவன உரிமையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளின் ஒரு பகுதியை லாபத்திற்காக விற்பனை செய்யத் தூண்டப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாகவே கடந்த இரண்டு மாதங்களில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ப்ரோமோட்டர்கள் 33,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட ஒரு டிரெண்டாகவே மாறியுள்ளது என்றால் மிகையில்லை.

2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இதேபோல் ப்ரோமோட்டர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர், இதேபோன்ற டிரெண்ட் மீண்டும் உருவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதுவரை 65,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பங்குகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன ப்ரோமோட்டர்கள் விற்பனை செய்துள்ளனர். இது, 2020ல் கொரோனா காலத்தில் 78,500 கோடி ரூபாயாக இருந்தது, இந்த வருடம் இதை முறியடித்து புதிய சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள், எனவே சந்தை சூழ்நிலை தங்களுக்குச் சாதகமாக இருக்கும் வேளையில், அதாவது மதிப்பீடு அதிகமாக இருக்கும் போதும், நிறுவனப் பங்குகளுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் போதும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பங்குகளை விற்பனை செய்து லாபம் ஈட்டியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் வெறும் 48,000 கோடி மதிப்பிலான பங்குகளை மட்டுமே நிறுவன உரிமையாளர்கள் விற்பனை செய்திருந்த வேளையில் 2024ல் முதல் 6 மாதத்திலேயே 65,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பங்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்கு விற்பனை அளவுகளைப் பார்க்கும் போது 2022 ஆம் ஆண்டில் 25,400 கோடியும், 2021 ஆம் ஆண்டில் 54,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு உள்நாட்டு ப்ரோமோட்டர்களை காட்டிலும் வெளிநாட்டு ப்ரோமோட்டர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது.

கடந்த வாரம், பிரிட்டன் நாட்டின் வோடாஃபோன் குழுமம், திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் இண்டஸ் டவர்களில் (Indus Towers) இருந்த தனது 18% பங்குகளை 15,300 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.

இதேபோல், இந்த மாத தொடக்கத்தில், உலகளாவிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் (Blackstone) தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனமான Mphasis-ல் தனது பங்கு இருப்பில் சுமார் 15.08 சதவீத பங்குகளை 6735 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.

ZF group கடந்த வாரம் தனது இந்தியக் கிளை நிறுவனமான ZF commerical vehicle control நிறுவனத்தில் 2193 கோடி ரூபாய் மதிப்பிலான 7.5 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.

கடந்த வாரம் Gland Pharma நிறுவனத்தின் 1754 கோடி ரூபாய் பங்குகளை அதன் தாய் நிறுவனமான Fosun Pharma விற்பனை செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+