இந்தியாவில் பாரம்பரிய சேமிப்பு திட்டங்களான ஃபிக்ஸடு டெபாசிட் போன்றவற்றில் இருந்து மாறி மியூச்சுவல் ஃபண்டு, பங்குச்சந்தை ஆகியவற்றை நோக்கி மக்கள் நகர்கின்றனர். இதில் பெரும்பாலானவர்களின் தேர்வு மியூச்சுவல் ஃபண்டு தான். முறையாக திட்டமிட்டு இதில் முதலீடு செய்தால் ஒருவரால் எளிதாக கோடீஸ்வரனாகி விட முடியும்.
எஸ் ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் 12,000 ரூபாய் முதலீடு செய்தாலே கோடீஸ்வரனாகி விடலாம். இதற்கு உதாரணமாக எடுத்து கொள்ள போவது ஐசிஐசிஐ நிறுவனத்தின் 'ICICI Prudential Bluechip fund'. ஐசிஐசிஐ நிறுவனத்தின் இந்த மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் 12,000 ரூபாய் முதலீடு செய்தவர்கள் எல்லாம் தற்போது 1 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர். ஐசிஐசிஐ நிறுவனம் 2008 ஆம் ஆண்டு தான் இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது.

16 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிறுவனம் அதிக சந்தை மூலதனம் கொண்ட லார்ஜ் கேப் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்கிறது. எனவே சந்தை இறக்கங்களின் போது கூட இது வளர்ச்சியில் தான் இருந்துள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை இந்த மியூச்சுவல் ஃபண்டு ஒவ்வொரு ஆண்டும் 15.92 சதவீத லாபத்தை தந்துள்ளது. இது காம்பவுண்டிங் முறையில் முதலீட்டாளர்களை செல்வத்தை ஈட்டி தந்துள்ளது. இந்த திட்டதில் எக்ஸ்பன்ஸ் ரேசியோ 0.86% ஆகும்.
இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் ஐசிஐசிஐ வங்கி ,ஹெச்டிஎஃப்சி வங்கி ,எல்&டி, இன்போசிஸ், ரிலையன்ஸ், மாருதி சுசுகி, பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட் ,சன் பார்மா மற்றும் ஹீரோ மோட்டார் கார்ப் ஆகிய ப்ளூ சிப் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்கிறது.
2008 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மாதந்தோறும் 12,000 ரூபாய் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தவர்கள் இப்போது கோடீஸ்வரராகியுள்ளனர். குறைந்தபட்சமாக இதில் 500 ரூபாய் முதல் எஸ் ஐபி முறையில் முதலீடு செய்யலாம். இது தொடங்கப்பட்ட முதல் ஓராண்டு காலத்தில் மாதந்தோறும் 12,000 ரூபாய் முதலீடு செய்தவர்கள் அந்த ஓராண்டு காலத்தில் மொத்தமாக செய்த முதலீடு 1, 44,000 ரூபாய் அவர்களுக்கு கிடைத்த தொகை 1,58,843 ரூபாய்.
இந்த திட்டத்தில் தொடர்ந்து பத்து ஆண்டு காலத்திற்கு மாதந்தோறும் 12,000 ரூபாய் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தவர்கள் மொத்தமாக முதலீடு செய்த தொகை 14,40,000 ரூபாய் அவர்களுக்கு திரும்ப கிடைத்தது 34,16 ,943 ரூபாய்.
இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த 16 ஆண்டு காலத்தில் தொடர்ச்சியாக மாதந்தோறும் 12,000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் ஒருவர் செய்த முதலீட்டு தொகை 23,64,000 ரூபாய் அதன் தற்போதைய மதிப்பு 1,05,57,000 ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications