கார்ப்பரேட், ஐடி ஊழியர்களை தாக்கும் முதுகு வலி காரணம் என்ன? தீர்வு என்ன?

இந்தியாவில் ஏராளமான அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களும் பெருகிவிட்டன. இந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களில் பலருக்கு கடுமையான முதுகு வலி ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கார்ப்பரேட் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடையே ஒரு மருத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் கார்ப்பரேட் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் 64 சதவீதம் ஊழியர்களுக்கு முதுகு வலி மற்றும் அசௌகரியம் இருப்பது கண்டறியப்பட்டது. உலகளவில் 540 மில்லியன் பேருக்கும் மேல் கீழ்ப்புற முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் வலியும் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.

கார்ப்பரேட், ஐடி ஊழியர்களை தாக்கும் முதுகு வலி காரணம் என்ன? தீர்வு என்ன?

கம்ப்யூட்டர் முதுகு மற்றும் கழுத்து வலி சிண்ட்ரோம். இந்த பாதிப்பு பெரும்பாலும் நீண்டநேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வளைந்து ஸ்கிரீனை பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது. மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பாக குனிந்தபடி வேலை பார்த்தால் இந்த பாதிப்பு வரும். இந்த பாதிப்பு காரணமாக முதுகின் மேல்புறம், கீழ்புறம் மற்றும் கழுத்தில் கடுமையான வலி ஏற்படும்.

இந்த வலி சிறுவர்கள், டீன் ஏஜ் வயதினர் என யாருக்கு வேண்டுமென்றாலும் வரும். பொதுவாக முதுகு வலி 30 முதல் 40 வயதில் காணப்படும். ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தால், சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் முதுகு வலியிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். வேலை செய்வதால் முதுகு சுளுவாக வளையும். தசைகள் வலுவாகும். அதேவேளையில் சோம்பேறித்தனமாக படுக்கையிலேயே இருந்தாலோ அல்லது வேறு எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலோ வலி மோசமாகிவிடும்.

ஒரு நாள் அல்லது இரண்டு நாள்களுக்கு எந்த வேலையும் செய்யவில்லை என்றால் முதுகுவலி வந்துவிடும். வலி அதிகரித்து கடுமையான நிலை ஏற்படும். எனவே எப்போதும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து வந்தால் முதுகு வலியில் இருந்து தப்பிக்கலாம்.

அலுவலகத்தில் சும்மா டெஸ்கில் அமர்ந்துகொண்டு நாள் முழுவதும் வேலை பார்த்தால் அலுப்பு இருக்காது எனத் தோன்றலாம். ஆனால் இந்த சூழ்நிலை உங்களது உடலில் மிக மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.
டெஸ்க் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முதுகு வலி, மணிக்கட்டு வலி, கழுத்துப்பகுதியில் இறுக்கம், கழுத்தில் வீக்கம், இறுக்கமான வலியுடனான கழுத்து, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு நேரம் ஒரு பெரிய காரணமாக உள்ளது. அழுத்தமான சூழ்நிலையில் பணி செய்தல், கெடுபிடியான காலக்கெடுவில் வேலை செய்வது உடலில் பல பாதிப்புகளைக் கொண்டு வந்து விடும்.

முதுகு வலி திடீரென வந்தால் சில நாட்கள் முதல் சில வாரங்களுக்கு வரை நீடிக்கும். பொதுவாக இந்த வலி சில பயிற்சிகளை செய்வதன் மூலம் ஒரு சில நாட்களில் தானாகவே மறைந்து விடும். ஆனால் நாள்பட்ட முதுகு வலி என்பது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து நீடிக்கும். தொடக்கத்தில் உண்டான காயங்களுக்கு சிகிச்சை அளித்த பின்னரும் வலி இருக்கக் கூடும்.

3 மாதங்களுக்கு மேல் முதுகு வலி நீடித்தால் அது நாள்பட்ட வலியாகக் கருதப்படும். இந்த வலி அவ்வப்போது வரும் போகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வலி தாங்காமல் விரக்தியடைந்து விடுவார்கள். முதுகு வலி வருவதற்கு காரணமே தெரியவில்லை என்றால் கோபம் தானே வரும்.

இந்த முதுகு வலியைத் தவிர்ப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
உங்கள் தசைகளை வலுவாக்கப் பயிற்சிகளை செய்யுங்கள்.
உடலை நீட்டி தளர்வாக்குங்கள். மோசமான போஸில் தரையில் உட்காரக் கூடாது. எடைகளை முறையாகத் தூக்க வேண்டும். தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யுங்கள்.

தூங்கும்போது முதுகுக்கு அழுத்தம் தராமல் படுக்க வேண்டும். உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். டெஸ்கில் வேலை செய்யும்போது சரியான நிலையில் உட்கார வேண்டும். கோணல் மாணலாக உட்கார்ந்து வேலை பார்த்தால் முதுகு வலி உண்டாகும்.

அவ்வப்போது வேலைக்கு இடைவெளி தர வேண்டும். நீண்டநேரம் அமர்ந்தபடி வேலை பார்த்தால் உடலில் பல உபாதைகளை தந்து விடும்.
எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் முதுகு வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+