ஃபின்டெக் நிறுவனமான கிரெட் (CRED), தலைமை செயல் அதிகாரியான குணால் ஷா இன்ஸ்டாகிராம் தளத்தில் "Ask Me Anything" செஷனை நடத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த செஷனில் குணால் ஷா தனது சம்பளம் பற்றிய உண்மையை உடைத்தார். அதன்படி குணால் ஷா ஒவ்வொரு மாதமும் வெறும் ரூ.15 ஆயிரம் மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொள்வதாகவும், அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.
சிஇஓ என்றாலே கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குபவரை தான் பார்த்திருப்போம், ஆனால் மிகவும் பிரபலமான நிறுவனமாக இருக்கும் CRED நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கம் குணால் ஷா-வின் சம்பளம் வெறும் 15000 ரூபாய் என்பது வியக்க வைக்கும் விஷயமாக உள்ளது.
குணால் ஷா விளக்கம்
இன்ஸ்டாகிராமில் ஒருவர், "கிரெட்-இல் உங்களின் சம்பளம் குறைவாக இருக்கிறது? நீங்கள் எப்படி வாழ்கின்றீர்கள்?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த குணால் ஷா "நிறுவனம் லாபகரமாக இயங்கும் வரை சிறந்த சம்பளத்தை பெற வேண்டும் என நம்பவில்லை. கிரெட்-இல் எனது மாத சம்பளம் ரூ.150000 தான், முன்னதாக எனது நிறுவனம் ஃபிரீசார்ஜ்-ஐ (FreeCharge) விற்பனை செய்து இருந்ததால், என்னால் வாழ முடிகிறது." என தெரிவித்துள்ளார்.
டிவிட்டர்
இந்த பதில் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்-ஐ டுவிட்டர் பயனரான அஜீத் படேல் பதிவிட்டார். இவர் ஸ்கிரீன்ஷாட் உடன், "கோடிகளில் சம்பளம் வாங்கும் சிஇஒ-க்களும் உள்ளனர், குணால் ஷா போன்றோரும் உள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார். ஷேர் செய்யப்பட்டதை அடுத்து இந்த பதிவு சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிக லைக்குகளையும், சுமார் 1.4 லட்சம் வியூக்களையும் பெற்று இருக்கிறது.
பாராட்டு
குணால் ஷா அளித்திருக்கும் பதில் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிலர் சிஇஒ-வின் முடிவுக்கு வரவேற்பு அளிக்கும் நிலையில், சிலர் இது வரியை சேமிப்பதற்கான நடவடிக்கை என கூறி வருகின்றனர். ஒரு பயனர், "பாராட்டுக்குரியது" எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
நெகிழ்வு
"ஒரே வாக்கியத்தில் தன்மையாகவும், நெகிழ்வாகவும் இருக்கிறது. இவரின் வார்த்தைகள் எப்போதும் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்," என மற்றொருவர் கமெண்ட் செய்து இருக்கிறார்.
ஸ்டார்ட்அப் முதலீடு
"இவர் ஒரு முதலீட்டாளர், இதுவரை 500-க்கும் அதிக ஸ்டார்ட்அப் -களில் முதலீடு செய்து இருக்கிறார். இவர் ஏஞ்சல் முதலீடுகளில் இருந்து வெளியேறும் போது இவருக்கு வருவாய் கிடைக்கும்." என மற்றொருவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
முட்டாள்..?
மற்றொரு நபர், "ரூ.15 ஆயிரம் எடுத்துச் செல்வது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நினைக்கும் முட்டாள் யார் இங்கே? இவர் ரூ.100 கோடி மதிப்புள்ள தனது ஸ்டார்ட்அப்-ஐ விற்று இருக்கிறார். இவருக்கு பின்புலம் உள்ளது" என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர் "இவர் தனது சம்பளத்தை கிரெட் காயின்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றும் கமெண்ட் செய்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications