இன்னைக்கு டிஜிட்டல் காலத்துல பட்ஜெட் விவரங்கள் லீக் ஆகுறது பெரிய விஷயம் இல்லை. ஆனா 75 வருஷத்துக்கு முன்னாடி, நாடு சுதந்திரம் அடைஞ்ச புதுசுல, இந்திய அரசாங்கத்தையே அதிர வைத்த ஒரு டார்க் சீக்ரெட் உங்களுக்குத் தெரியுமா? அதுதான் 1950 பட்ஜெட் கசிவு. அப்போதைய நிதி அமைச்சர் ஜான் மத்தாய் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகிட்டு இருந்தப்போ, அவரோட பட்ஜெட் ரகசியங்கள் வெளியில கசிஞ்சு பெரிய அரசியல் புயலையே கிளப்புச்சு. அதுவரைக்கும் ராஷ்டிரபதி பவன் உள்ளேயே ரொம்ப பாதுகாப்பா நடந்திட்டு இருந்த பட்ஜெட் அச்சடிக்கும் பணி, ஒரே ராத்திரியில அங்கிருந்து துரத்தப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக நள்ளிரவு நேரத்தில் அச்சகம் மாற்றப்பட்டதும், அதிகாரிகள் 'லாக்-இன்' செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய பட்ஜெட் வரலாற்றையே மாற்றி எழுதின அந்த சம்பவம் என்ன? ஏன் மின்டோ ரோடுக்கு அச்சகம் மாற்றப்பட்டது? அல்வா கிண்டுவது-ல் இருந்து ரகசியம் காக்குறது வரைக்கும் பட்ஜெட்டுக்கு பின்னாடி நடக்கிற அந்த சுவாரஸ்யமான பிளாஷ்பேக் இதோ.
இந்தியா தனது 2026ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வரும் அதேவேளையில், 75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு முக்கிய வரலாற்று சம்பவம் குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம். சுதந்திரம் அடைந்த மூன்றே ஆண்டுகளில் ,1950-ல் இந்திய பட்ஜெட்டானது வரலாற்றையே மாற்றி அமைத்தது.
ராஷ்டிரபதி பவன் டூ மின்டே ரோடு?
கடந்த 1950ம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் நகல்கள் ராஷ்டிரபதி பவனில் உள்ள அச்சகத்தில்தான் ரகசியமான அச்சடிக்கப்பட்டு வந்தன. அதுவே நாட்டின் பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. ஆனால் அந்த ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, அதில் இருந்த நிதி தொடர்பான முக்கிய பரிந்துரைகள் வெளியே கசிந்தது. இது அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கசிவுக்கான துல்லியமான காரணம் பகிரப்படவில்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருந்த அந்த சூழலில், இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்பட்டது.
நள்ளிரவில் பிறந்த அதிரடி உத்தரவு?
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இனி ஒருபோதும் பட்ஜெட் ரகசியங்கள் கசியக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது. உடனடியாக, பட்ஜெட் அச்சடிக்கும் பணி ராஷ்டிரபதி பவனில் இருந்து டெல்லி மின்டோ ரோடில் உள்ள இந்திய அரசு அச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தோடு நின்றுவிடாமல், இன்று வரை நாம் பின்பற்றும் பல கடுமையான விதிமுறைகள் அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டன.
அச்சகம் இருக்கும் இடம் சீல் வைக்கப்பட்டு, முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகவும், வெளியாட்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் அதிகாரிகள், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை வெளி உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் அச்சகத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
இன்றும் தொடரும் 75 ஆண்டு கால மரபு!
தொழில்நுட்பம் வளர்ந்து இன்று டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும், அந்த 1950-ம் ஆண்டு கசிவு ஏற்படுத்திய தாக்கம் இன்றும் மாறவில்லை. இன்றும் பட்ஜெட் ஆவணங்கள் அதே மின்டோ ரோடு அச்சகத்தில்தான் மிகவும் பாதுகாப்பாக தயாரிக்கப்படுகின்றன. ரகசியம் காத்தல், அதிகாரிகளைத் தனிமைப்படுத்தல் மற்றும் கடுமையான தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் ஆகியவையே இந்திய பட்ஜெட்டை, நாட்டின் மிக முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட ஆவணமாக இன்றும் வைத்திருக்கின்றன.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications