கடந்த 2003ஆம் ஆண்டு இந்தியா, விமானப் பயண வரலாற்றில் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு விமானப் புரட்சியைக் கண்டது. ஒரே நேரத்தில் அதிர்ச்சி, ஆச்சரியம் மற்றும் மாற்றத்தின் தொடக்கமாக அது அமைந்தது. அப்போது வரை சிலருக்கே சாத்தியமாக இருந்த விமானப் பயணத்தை, சாமானிய மக்கள் அனைவருக்கும் எளிமையாகக் கொண்டுவரும் முயற்சியாக, "ஏர் டெக்கான்" நிறுவப்பட்டது. இது, சாதாரண மக்களும் விமானத்தில் பறக்க முடியும் என்பதற்கான நம்பிக்கையை உருவாக்கியது. இந்த யோசனைக்கு பின்னால் இருந்தவர், முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் கோபிநாத் (கோரூர் ராமசாமி கோபிநாத்).
ஒரு சாதாரண இந்தியருக்கும் விமானப்பயணம் சாத்தியமாவது எப்படி என்ற கேள்விக்கு ஏர் டெக்கான் பதிலளித்தது. "பஸ் கட்டணத்தில் விமானம்" அதாவது, ரூ.500 முதல் டிக்கெட் விலை விற்பனை என்று அறிவித்தது. இந்த விமானத்தில் உணவு, ஆடம்பர வசதிகள் எதுவும் இல்லை. ஒரு இருக்கை மட்டும் டிக்கெட் கொடுத்தால் போதும், இப்போதைய காலக்கட்டத்தில் ஃபுல் சரிவீஸ் விமான சேவை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை மூலம் மாணவர்கள், தொழில்முனைவோர், ஊழியர்கள் உள்ளிட்டோர் முதல் முறையாக விமானத்தில் பயணிக்க முடிந்தது. கேப்டன் கோபிநாத்-ன் கதை தான் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம்.

இதையடுத்து, ஏர் டெக்கான் நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது. ஒரு சாதாரண எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் மனதில் இடம் பிடித்தது. 2006ஆம் ஆண்டுக்குள் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாக ஏர் டெக்கான் மாறியது. மொத்தம் 65 நகரங்களை இணைத்தது. இதில் பல நகரங்கள் இதற்கு முன் விமான சேவையை பார்த்தது இல்லை. இது பணக்காரர்கள் மட்டுமல்ல, பொது மக்களுக்கும் நெருக்கமாக்கிய ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்பட்டது.
பின்னர், ஆன்லைன் முன்பதிவு, விலை நிர்ணயம், இரண்டாம் நிலை விமான நிலையங்களை ஏர் டெக்கான் அறிமுகப்படுத்தியது. இவை அனைத்தும் மக்களுக்கான விமான நிறுவனம் "டெக் டெக்கான்" என்ற பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தன. இதை இந்தியாவின் ரயனேர் எனவும் கூறினர். ரயனேர் (Ryanair) என்பது ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான ஒரு மலிவான விமான சேவை நிறுவனம். ஆனால் ரயனேருக்கு ஐரோப்பாவில் இருந்த கட்டுப்பாட்டு மற்றும் மூலதன அமைப்புகள் ஏர் டெக்கனுக்கு கிடைக்கவில்லை.
சரியான விமான நிலையங்கள், சேவைகள் இல்லாத நகரங்களிலும் ஏர் டெக்கான் விரிவடைந்தது. ஆனால், அதன் விமான படை ATR மற்றும் Airbus ஜெட்டுகளின் கலவையாக இருந்ததால், சிக்கல்கள் எழுந்தது. விமான பணியாளர்களுக்கான பயிற்சி, விமான பராமரிப்பு மற்றும் அட்டவணை திட்டமிடல் ஆகியவை ஏர் டெக்கனின் வேகமான வளர்ச்சிக்கு கை கொடுக்கவில்லை. இதனால், விமானங்கள் நேரத்திற்கு வராதது, சில விமானங்கள் தாமதமாவது, முன்னெச்சரிக்கை இல்லாமல் ரத்து செய்யப்படுவது அல்லது பாதையை மாற்றுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால், ஏர் டெக்கான் மீதான நம்பிக்கையை பயணிகள் இழந்தனர்.
ஏர் டெக்கான் விமான டிக்கெட்டுகளை ஒரு ரூபாய் மட்டுமே விற்றாலும், விமான சேவைக்கான செலவு அதிகரித்தது. எரிவாயு, தரைபயன்பாட்டு கட்டணங்கள், விமானத்தின் வாடகை, பராமரிப்பு ஒப்பந்தங்களால் நிறுவனம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இந்நிறுவனத்திற்கு அரசு உதவி செய்யவில்லை. மேலும், இழப்புகளை சமன் செய்யும் வகையில், பிசினஸ் கிளாஸ் சீட்டுகள் கூட இல்லை. குறைந்த விலையில் டிக்கெட்டுகள் விற்றதால், செலவுகளை முழுமையாக நிரப்ப முடியாமல் நிறுவனம் நஷ்டத்தில் தவித்தது.
2006ஆம் ஆண்டு அதன் IPO மூலம் உதவி கிடைத்திருந்தாலும், இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. 2007ஆம் நிதியாண்டின் முடிவில், அதாவது ஒரே ஆண்டில் 340 கோடி ரூபாய் இழப்பை ஏர் டெக்கன் சந்தித்தது. இதற்கிடையே, கிங்ஃபிஷர் நிறுவனத்தின் செலவுகள் மிக அதிகமாக இருந்தன. முந்தைய இண்டிகோ நிறுவனத்தைப் பார்க்கும் போது, அதில் விமான சேவை தொடங்கும் முன் 200 மில்லியன் டாலருக்கு மேல் நிதி சேமித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏர் டெக்கான் நிறுவனம் முழுவதும் தானே பார்த்துக் கொண்டதால், அரசின் உதவியோ பெரிய முதலீட்டாளர்களிடமிருந்து போதுமான நிதியோ கிடைக்கவில்லை.
இதையடுத்து, கடந்த 2007ஆம் ஆண்டு, ஏர் டெக்கான் தொடங்கிய 4 ஆண்டுகளில் அதை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுக்கு விற்றார் கோபிநாத். பணத் தேவை அதிகமாக இருந்ததால், கோபிநாத்தால் ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை நடத்த முடியவில்லை. இதனால், கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு விற்றார். பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா (கிங்ஃபிஷர் தலைவர்) தனது நிறுவனத்துக்கு இந்திய விமான சந்தையில் பங்கெடுக்க விரும்பினார். இதனால், அவர் ஏர் டெக்கனை பயன்படுத்த முடிவு செய்தார். ஆனால், இரண்டு நிறுவனங்களின் வேலை செய்யும் விதம், எண்ணங்கள் பொருந்தாமல் இருந்ததால் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.
கிங்ஃபிஷர் ஒரு ஐந்து நட்சத்திர விமான சேவை: ஆனால், ஏர் டெக்கான் எளிமையான, மிகக் குறைந்த சேவையுடன் வேலை செய்தது. கிங்ஃபிஷர் பிராண்ட் கம்பனிகள் போல சாம்பேன் பானம் போன்ற வசதிகளை வழங்க விரும்பியது. ஆனால், ஏர் டெக்கான் வெறும் தண்ணீர் பாட்டில்களை விற்றது. இதனால், பிராண்டிங்கில் குழப்பம் ஏற்பட்டது. பணியாளர்களின் மனநிலையும் மோசமாகியது. ஒரே ஆண்டில் ஏர் டெக்கான் "கிங்ஃபிஷர் ரெட்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது, கிங்ஃபிஷருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தது. கிங்ஃபிஷர் மற்றும் ஏர் டெக்கான் சேவைகளும், குறிக்கோள்களும் மாறுபட்டவையாக இருந்ததால், அவற்றை ஒருங்கிணைப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால், இரு நிறுவனங்களும் தோல்வியடைந்து, கடந்த 2012இல் முழுமையாக வெளியேறின.
ஏர் டெக்கான் நிறுவனம், இந்தியாவில் அனைவரும் எளிதாக விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட நிறுவனம். ஆனால், அதற்கு தேவையான பணம், வசதி, திட்டமிடல் ஆகியவை சரியாக அமையவில்லை. இதுவே தோல்விக்கு மிகப்பெரிய உதாரணமாக மாறியது.
கேப்டன் ஜி. ஆர். கோபிநாத்தின் தற்போதைய நிலை என்ன..?: ஜி.ஆர்.கோபிநாத் தற்போது டெக்கன் சார்டர்ஸ் என்ற ஹெலிகாப்டர் மற்றும் விமான சேவையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 50-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை பராமரிக்கிறது. அவரது குழுவில் முன்னாள் டெக்கன் விமான சேவையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், கன்னட மாநிலத்தின் தன் கிராமத்தில் விவசாயம் செய்தல் அவரது முதல் காதல். அவர் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
மேலும், அவர் இந்தியாவின் பொருளாதாரம், விமான போக்குவரத்து, அரசியல் மற்றும் சமூகத்தைப் பற்றிய கட்டுரைகளை எழுதுகிறார். அதேபோல், "UDAN" திட்டத்தின் கீழ், சிறிய நகரங்களுக்கு விமான சேவைகளை வழங்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த திட்டம், டெல்லி-ஆக்ரா, கொல்கத்தா-பூனே, நாஷிக், ஷில்லாங் போன்ற இடங்களுக்கு விமான சேவைகளை வழங்க இருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications